Free Make - மிகச் சிறந்த Video Converter இலவசமாக | கற்போம்

Free Make - மிகச் சிறந்த Video Converter இலவசமாக

சில மென்பொருட்கள் பணம் கொடுத்து வாங்கும் படி நிலைமை இருக்கும், ஆனால் நாம் எதிர்பார்க்கும் வசதிகள் எல்லாம் அதில் இருக்காது. ஆனால் இலவசமாக கிடைக்கும் சிலவற்றில் போதும் போதும் என்கிற அளவுக்கு வசதிகள் கிடைக்கும். அப்படி பட்ட ஒன்றும் தான் Free Make Video Converter. Converter என்ற ஒன்றைத் தவிர நிறைய பலன்களை கொண்டிருப்பது இதன் சிறப்பு. 

இதன் சிறப்பம்சங்களை காண்போம்.



1. 200 க்கு அதிகமான ஆடியோ, வீடியோ வகைகளை ஏற்றுக் கொள்கிறது.

2. ஆன்லைனில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி. Youtube, Facebook, Vimeo, Dailymotion என 50 தளங்களில் இருந்து செய்ய முடியும். என்ன Output Format வேண்டும் என்றாலும் நீங்கள் தெரிவு செய்ய ம்டுயும்.

3. மிக சிறந்த Output Format களை தருவது இதன் மிகப் பெரிய சிறப்பு. இப்போது வந்துள்ள HTML 5 வரை Update செய்து உள்ளார்கள்.

4.Android, iPhone போன்ற Smartphone-களை பயன்படுத்தும் நபரா நீங்கள்? அதற்கென்றே தனி Output வசதிகள் இதில் உள்ளது.அத்தோடு Sony PSP, PS2, PS3, BlackBerry, Samsung, Nokia, Xbox, Apple TV, என பல வகையும் இதில் அடக்கம்.

5. வசதிகள் எல்லாம் சரி, இதன் வேகம் எப்படி என்று கேக்குறீங்களா? மிகக் குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது.

6. சாதாரண வீடியோ வை BluRay வீடியோ ஆக மாற்றும் வசதியும் உள்ளது இதில். வீடியோ கொடுத்து Bluray DVD-யை போட்டு விட்டு Convert கொடுத்தால் வேலை முடிந்தது.

7.சாதாரண DVD-க்கும் அதிக பட்சம் 40 மணி நேரம் வரை ஓடும் Video-களை Write செய்ய இயலும்.

8. ஒரு வீடியோவில் தேவை இல்லாத பகுதிகளை நீக்க வேண்டும் அல்லது ஒரு பாடலில் சில பகுதி மட்டும் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கும் Editor Tool இதில் உள்ளது. உங்கள் வீடியோவை இதில் Add செய்த பின் அதன் வலது புறத்தில் தோன்றும் Play/கத்தரிக்கோல் போன்றதை கிளிக் செய்தால் கீழே உள்ள புதிய பகுதி வரும்.


முதலில் வீடியோவை Play செய்து Starting Point, பின்னர் End Point தெரிவு செய்து கொண்டு Cut Button கொடுத்தால் நீங்கள் தெரிவு செய்த பகுதி நீக்கப்பட்டு விடும். (எது வேண்டாமோ அதை நீக்க இதை பயன்படுத்தவும்.) இப்போது Ok கொடுத்தால் வேலை முடிந்தது. பின்னர் Convert செய்து விடுங்கள்.

9. உங்கள் படங்கள், பாடல்கள், போன்றவற்றை Youtube க்கு Upload செய்யும் வசதியும் இதில் உள்ளது. எத்தனை படங்கள் வேண்டுமோ அத்தனையும் போட்டு பின்னர் மேலே வீடியோவுக்கு சொன்னது போல வலது புறம் உள்ள  Play பட்டனை கிளிக் செய்தல் வரும் Editor Window-வில் உங்களுக்கு தேவையான மாற்றம் செய்யலாம், பின்னணியில் ஏதேனும் பாடலை சேர்க்க விரும்பினால் Editor பகுதியில் Audio Track None என்பதை கிளிக் செய்து பின்னர் கணினியில் Browse செய்து பாடலை சேர்க்கவும்.

10. Audio இருக்கு அதை வீடியோ ஆக்க வேண்டுமா? பாடலை Add செய்யும் Play செய்யுங்கள், கொடுத்துள்ள பல Visualization-களில் ஒன்றை தெரிவு செய்யுங்கள் அல்லது ஏதேனும் ஒரு படத்தை கூட சேர்க்கலாம்.

11. மேலும் வீடியோ தலைகீழாக இருந்தால் அதை Rotate செய்யும் வசதி, உங்களுக்கு ஏற்ற Output Presets, Aspect Ratio மாற்றும் வசதி என பல அருமையான வசதிகளை கொண்டுள்ளது இந்த Freemake Video Converter.

12. இன்னொரு மிகப் பெரிய வசதி நீங்கள் Windows XP பயனர் என்றால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திறக்க நிறைய மென்பொருட்கள் அனுமதிப்பது இல்லை. ஆனால் Freemake அதை தந்து உள்ளது.

அதனால் தான் இது வெறும் Converter மட்டும் இல்லை என்று சொன்னேன். இலவசம் என்றாலும் போதும் போதும் என்கிற மட்டும் தரும் மிக அருமையான ஒரு மென்பொருள் இது.

தரவிறக்க வேண்டும் என்றால் இங்கே சொடுக்கவும். Free Make Video Converter

சந்தேகம் இருப்பின் கீழே கேட்கவும்.

- பிரபு கிருஷ்ணா

6 comments

தகவலுக்கு நன்றி பிரபு!

Reply

அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே.

Reply

I Searching this one.Thanks a Lot Prabhu.

Reply

நான் தினமும் இதைத்தான் பயன்படுத்துகிறேன். 700 MB வீடியோவை 20 நிமிடத்திற்குள் மொபைல் வீடியோவாக மாற்றி விடுகிறது.

Reply

தேவையான தகவல் நண்பா

Reply

youtupe videovai mobilil Converter seivathu eppadi plsssss sollunga

Reply

Post a Comment