வித விதமான தமிழ்,ஆங்கில Font-களை பதிவில் பயன்படுத்துவது எப்படி? | கற்போம்

வித விதமான தமிழ்,ஆங்கில Font-களை பதிவில் பயன்படுத்துவது எப்படி?

நாம் அனைவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். நமது ப்ளாக்கும் அப்படித்தானே இருக்க வேண்டும்? நம் வலைப்பூவுக்கு வரும் வாசகர்களை வித விதமான வகையில் எழுத்துருக்களை(Font) பதிவில் பயன்படுத்தி கவரும் வழிதான் இன்றைய பதிவு. எப்படி செய்வது என்று காண்போமா? இதன் படி தமிழ் எழுத்துக்களையும் நிறைய ஸ்டைல்களில் காட்ட முடியும்.

இது ஞானபூமி தளத்தின் சார்பாக கற்போம் தளத்தில் வரும் கெஸ்ட் போஸ்ட். கற்போம் தளத்தில் கெஸ்ட் போஸ்ட்டை எழுதிய ஞான பூமி நிர்வாகிகளுக்கு நன்றி.

உங்கள் ப்ளாக் பதிவின் எழுத்துரு மற்றும் வண்ணங்களை மாற்றுவது எப்படி?

வோர்ட்ப்ரெஸ் தரும் அருமையான இலவச ப்ளாக்கிங்கில் (உங்கள் ப்ளாக்.wordpress.com) குறிப்பிட்ட எழுத்துருக்கள் (default font family) மற்றும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று பதிவுகளைக் காட்டும் எடிட்டர் (WYSIWYG - What You See Is What You Get) உள்ளது. ஆனால் எழுத்துருவின் அளவை இதில் மாற்ற இயலாது. நீங்கள் எச்.டி.எம்.எல் (HTML) நன்கு தெரிந்தவராயிருந்தால் அதற்குரிய பேனலில் நேரடியாக கோடிங் எடிட் செய்ய (html pane)மிக உதவியாயிருக்கும். இதே போல பிளாக்கர்க்கும் சில வகை மட்டுமே பயன்படுத்த முடியும். 

உங்கள் இஷ்டத்திற்கு எழுத்துருக்களைத் தேர்வு செய்வதற்கும் எழுத்துக்களின் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் வோர்ட்ப்ரெஸ் ஒரு கட்டணத்திற்குட்பட்ட ப்ரீமியம் செர்வீஸ் வழங்குகிறது. இதற்கு கஸ்டம் டிஸைன் என்று பெயர்.

ஆனால் என்னைப் போன்ற கோடிங் என்றால் 'கோடு போடுவதற்கு ஆங்கிலத்தில் கோடிங் என்று பெயரோ?' என்றும் எழுத்துறு (கூழ்) மற்றும் டிசைன் (மீசை) இரண்டுக்குமே ஆசை, இவையிரண்டுமே நன்றாக இருக்க வேண்டுமே என்பவர்கள் என்ன செய்வது? ஏதாவது வழி இருக்கிறதா?

நல்ல வேளை இருக்கிறது! ப்ளாகிங் க்ளையண்ட் என்று அழைக்கப்படும் இவை இலவசம் மட்டுமின்றி ஒவ்வொரு முறையும் உங்கள் ப்ளாக் கணக்கில் நீங்கள் நுழைந்து பதிவேற்றம் செய்யாமல் உங்கள் கணிணியிலிருந்தே நேரடியாக பதிவை ஏற்றம் செய்து விடலாம். இவை மூலம் நாம் நம் பதிவை சிறப்பாகத் தருவதில் மட்டும் கவனம் செலுத்தலாம். இத்தகைய க்ளையண்ட்கள் பல உள்ளன. கூகிளாண்டவரை Free Blogging Clientஎன்ற கீ வேர்ட் மூலம் அர்ச்சித்தால் அவர் மகிழ்ந்து நமக்கு போதும் போதுமெனும் அளவிற்கு வரம் காட்டுவார். அதில் மிகச் சிறந்த, இலவசமான இரண்டை மட்டும் பார்க்கலாம் இப்பதிவில்.

1. விண்டோஸ் லைவ் ரைட்டர்




WLW என்று செல்லமாக அழைக்கப்படும் மிகப் பிரபலமான ப்ளாகிங் க்ளையண்ட்.இதை இலவசமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தளத்திலிருந்து ( இங்கே) தரவிறக்கம் செய்து கொண்டு நமக்குத் தேவையானபடி ஆப்ஷன்ஸை நிறுவிக் கொள்ளலாம். இதில் ப்ளாக்கர், வோர்ட்ப்ரெஸ் இன்னும் பல ப்ளாகிங் க்ளையண்டுகளில் தங்களுடையது என்னவோ அதை தேர்ந்தெடுத்து தங்கள் கணக்கின் விவரத்தைக் கொடுத்தால் போதும்.

WLW சமர்த்தாக உங்கள் ப்ளாகிங் செர்விஸைத் தொடர்பு கொண்டு நீங்கள் என்ன தீம் 'இல் உங்கள் ப்ளாக்கை அமைத்திருக்கிறீர்களோ அதை உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்து விடும். நீங்கள் உங்கள் ப்ளாக்கில் எழுதுவது போலவே ஒரு தோற்றத்தைத் தரும்.



மைனஸ்:

இதில் உள்ள ஒரு சிறிய குறை என்னவென்றால் உங்கள் தீம் இல் என்ன எழுத்துரு அளவு கொடுக்கப் பட்டுள்ளதோ அதை மட்டுமே உபயோகப் படுத்த முடியும். அதாவது 14 அல்லது 18 அளவு இருக்கும் ஒரு சில தீம்களில். இடைப்பட்ட 16 வேண்டுமென்றால் WLW கொண்டு அதை தேர்ந்தெடுக்க முடியாது. ஏனெனில் இது உங்களுடைய தீம் அதை முதலிலேயே தரவிறக்கம் செய்து விடுகிறது இல்லையா? அதே போல பதிவின் தலைப்பில் உள்ள எழுத்துரு அளவையும் மாற்ற முடியாது. மற்றபடி மிகச் சிறந்த ஒரு ப்ளாக்கிங் க்ளையண்ட்.

2. மைக்ரோசாஃப்ட் வோர்ட் (2007 வெர்ஷன் மற்றும் அதற்கு மேல்)




ஆம் நண்பர்களே! உண்மைதான். MS-Word ஐ நிறுவி அதில் File - New - Blog Post என்பதை தேர்வு செய்தால் போதும். தங்கள் ப்ளாக் கணக்கின் விவரத்தைத் தந்து உங்கள் இஷ்டம் போல எழுத்துருவைத் தேர்ந்தெடுத்து (எழுத்துரு தங்கள் கணிணியில் இருக்க வேண்டும்) அதன் அளவையும் எண்ணப்படி மாற்றியமைக்கலாம். தலைப்பின் எழுத்துரு மாற்றமும் சாத்தியமே (பிளாக்கர்க்கு  தலைப்பின் எழுத்துரு மாற்றம் ஆகவில்லை). போஸ்ட் செய்தால் அப்படியே கச்சிதமாக தெரியும். நிஜ WYSIWYG. கலக்கலாக இருக்கிறதென்று சொல்லவும் மறந்தோமா?



உங்கள் விருப்பப்படி நேரடியாக பதிவை பப்ளிஷ் செய்யலாம். அல்லது Draft - இல் வைத்துவிட்டு அதன் பின் படங்கள் சேர்க்க விரும்பினால் சேர்த்து பதிவை பப்ளிஷ் செய்யலாம்.

இதனை நான் பப்ளிஷ் செய்துள்ள தளம் - கற்போம் டெஸ்ட் ப்ளாக்

மைனஸ்:

படங்களை தரவேற்றம் செய்கையில் முதன்முறை எல்லாம் சரியாக வேலை செய்கிறது. பின் உங்கள் ப்ளாக் படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஏதோ சொல்கிறது. இது நம்மை ஒரு வேளை இலவச ப்ளாக்கில் நாம் படத் தரவேற்றம் செய்யும் அளவை மிஞ்சி விட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் வோர்ட்ப்ரெஸ் மூலம் எடிட் செய்தால் படங்களை ஏற்றம் செய்ய இயலும்.

நாட்டாமையின் தீர்ப்பு:

தீர்ப்பை மாத்தி சொல்லத் தேவையில்லை. அவரவருக்குத் தேவையான, அவரவருக்குப் பிடித்த க்ளையண்டை டெஸ்ட் டிரைவ் செய்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு இலவச மற்றும் சிறந்த வழி உள்ளது என்பதை பகிர்வதே இப்பதிவின் நோக்கம். இப்பதிவு பயனுள்ளதாய் இருக்குமென்று நம்புகிறோம். கருத்துக்கள் சொல்லி இதை மேலும் பயனுள்ளதாக்க வேண்டுகிறேன். வாய்ப்பளித்த கற்போம்.காம் தளத்திற்கு மிக்க நன்றி. மீண்டும் மகிழ்வுடன் சந்திப்போம்.

என்னைப் பற்றி: 

ஞானபூமி.காம் தளத்தின் நிர்வாகக் குழுவில் இருப்பதில் பெரு மகிழ்ச்சியும் இந்தியத் தமிழன் என்பதில் கர்வமும் கொண்ட ஒரு சாதாரணன்.

தொடர்ந்து தொடர்பில் இருக்க ஞானபூமி தளத்தை தொடரவும்.

5 comments

நிறைய விசயங்களை அறிந்து கொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி.

Reply

மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி

Reply

Font தெளிவாக தெரிய வில்லையே

Reply

@ MAJU

Font Size மாற்றிப் பாருங்கள்.

Reply

நல்ல பதிவு ! தொடருங்கள் நண்பரே !

Reply

Post a Comment