கூகிள் ஒரு அருமையான தேடல் களம். அதே நேரம் ஒரு கண்ணாடி. நாம் என்ன விரும்புகிறோமோ அதனை பிரதிபலிக்கும் திறம் கொண்டது. எந்த தளம், என்ன மாதிரியான தளம் என்பதை எல்லாம் பார்க்காமல் நாம் தேடுவதை மட்டும் எங்கிருந்தும் எடுத்து தரும். அப்படி தேடுதலில், பாதுகாப்பாய் நல்ல தகவல்களை மட்டும் எப்படி தேடுவது?
நீங்கள் கூகிள் தேடுபொறியில் (Google Search Engine) சில குறிச்சொற்களைக் (keywords) கொண்டு தேடும் போது, உங்களுக்காக பல அதிர்ச்சிகள் காத்து இருக்கலாம்.
நீங்களே விரும்பாத தளங்கள், சொற்களின் பயன்பாட்டால், தேடலின் முதல் பக்கத்தில் குவியலாம். விரும்பத்தகாத செய்திகளை உள்ளடக்கிய வலைத்தளங்களை உங்கள் தேடலில் வராமல் எப்படி தவிர்ப்பது என்று யோசிக்கிறீர்களா?
அப்ப சரியான இடத்திற்குத் தான் வந்து இருக்கீங்க!! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்:
கூகிள் தேடலின் போது வலது பக்கம் பாருங்கள். அங்கு இருக்கும் சக்கரத்தைச் சுட்டுங்கள். அதில் ' Search Settings' ஐ சொடுக்குங்கள்.
அடுத்து வரும் பக்கத்தின் முதலிலேயே "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யுங்கள்!!!
வரும் பக்கத்தில் , "SafeSearch Filtering" என்று ஒரு பகுதி இருக்கும். அங்கே உங்கள் விருப்பங்களைப் பதிவு செய்யுங்கள்!!!
தேர்வு செய்த பின்னர், விருப்பங்களைச் சேமிக்க மறவாதீர்கள்!!
ஒவ்வொரு நிலைக்கும் என்ன வேறுபாடு?
Strict filtering - வெளிப்படையான (sexually explicit) பாலின பக்கங்கள் அனைத்தையும், அதற்கு செல்லும் வழிகளைக் கொண்ட பக்கங்களையும் (links) தவிர்க்கும்
Moderate filtering - வெளிப்படையான பாலின பக்கங்கள் அனைத்தையும் தவிர்க்கும். வழிகள் தவிர்க்கப்படாது.
[இது தான் இயல்பிருப்பு (default) நிலையாகும்]
No filtering : எந்த தடையும் இல்ல. எல்லா விதமான பக்கங்களையும் காட்டும்.
எல்லா இடங்களிலும் செய்வது எப்படி?
நீங்கள் உங்கள் கூகிள் கணக்கைக் கொண்டு பல கணிணிகளில் வேலை செய்ய வேண்டி இருக்கலாம். எல்லா கணிணிகளிலும் இதனைச் செய்வது இயலாத காரியம். நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்து தேடும் போது, எந்த கணிணியிலும் அதனைச் செயல்படுத்த வழி உண்டு.
SafeSearch Filtering பகுதியில் "Lock Safe Search" என்று ஒரு இடம் உள்ளது. அதனைச் சொடுக்குங்கள்..
இதன்பின், நீங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து தேடினால், நீங்கள் தேர்ந்தெடுத்த அதே அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கும்.
தமிழ் வழித்தேடலிற்கு
மேற்கூறப்பட்ட வழி ஆங்கில வழி தேடலிற்கு (English Search) மட்டுமே பயன்படும். தமிழ் வழி தேடல் வைத்து இருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்காது.
நீங்கள் தமிழில் கூகிள் பயன்படுத்துபவராக இருந்தால், மொழிமாற்றம் செய்து ஆங்கில மொழிக்குச் செல்லுங்கள். பிறகு மீண்டும் தமிழிற்கு மாறிக் கொள்ளுங்கள். இனி தொடருங்கள் !!!
நீங்கள் பாதுகாக்கப்பட்ட தேடலைத் (SafeSearch Filtering) துவங்கிய பிறகும், சில தகாத வலைத்தளங்களை தேடலில் காண வாய்ப்பு உண்டு..
சில உதாரணங்கள்:
சில உதாரணங்கள்:
- தமிழ் என்று தேடிப் பாருங்கள்... முதலில் வரும் பதில் உங்களைத் திகைக்க வைக்கும்.
- தமிழ் மொழியின் உறவுகள் பெயரைத் தேடிப் பாருங்கள். கிடைக்கும் பதில்கள் உங்களை முகம் சுளிக்க வைக்கும்
மேலே கூறப்பட்ட செய்திகள் Moderate Filter மட்டும் அல்ல.. Strict Filter முறையிலும் வரும் என்பது தான் சோகமான செய்தி!!
பதில்களில் வரும் "அது" போன்ற வலைத்தளங்கள் மிக கேவலமானவை. அவற்றை எழுதி பிறரைக் குறி வைப்பவர்கள் மனிதர்களாக வாழவே லாயக்கு அற்றவர்கள்.
சில குறிசொற்களைக் கொண்டு வடிப்பானை (Filter) ஏமாற்றி வந்து விடுகிறன...
இவற்றைக் குழந்தைகள் காண நேர்ந்தால் என்ன ஆகும்?
எழுதும் பதர்கள் ஏனோ இவற்றைப் பற்றி யோசிப்பதில்லை. பின்னே, யோசித்தால் அவர்களின் பிழைப்பு என்னாவது?
இது தொடர்பான பதிவுகள்:
அம்மாவுக்கு நேர்ந்த கொடுமை
அந்த வகையான தளங்களை பின்னுக்கு தள்ளி, நல்ல தகவல்களை முன்னெடுக்கும் பொருட்டு எழுதியவை கீழே உள்ள இரண்டும்.
தமிழ் மொழிக்கு இழுக்கைத் தரும், தமிழர் பண்பாட்டைச் சிதைக்கும் இது போன்ற தளங்களைத் தேடலில் இருந்து நாம் களைய வேண்டாமா????
அவற்றைப் புறந்தள்ள வேண்டாமா?
கீழ்காணும் பக்கத்திற்குச் செல்லுங்கள்:
https://www.google.com/webmasters/tools/safesearch
குறிப்பிட்ட வலைத்தள முகவரியை உள்ளிட்டு, "Report Content" என்பதனைச் சுட்டுங்கள்.
இதனை ஒருவராக மட்டும் செய்தால் பெரிய பலன் இருக்காது. ஆனால், "எறும்பு ஊரக் கல்லும் தேயும்" என்பது போல, பலரும் சேர்ந்து செய்தால் அது போன்ற தளங்களைத் தேடலில் இருந்து தவிர்க்கலாம். மேலும் தமிழ் வலைப்பதிவர்கள் தங்களால் இயன்ற வரை நல்ல தகவல்களை தமிழ் என்ற தலைப்பில் எழுத வேண்டும். இதுவும் ஒரு சிறந்த வழி தான்.
தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்வோம்.. புதர்களைக் களை எடுப்போம்!!
என்னைப் பற்றி:
ஆளுங்க என்பது எனது புனைப் பெயர். சோழர்கள் கோலோச்சிய நகரில் பிறந்து, சேரர்கள் ஆண்ட பகுதியில் கல்வி பயின்று , இன்று பாண்டியர் பூமியில் பணிபுரிபவன். தமிழ் கற்க ஆசைப்பட்டு வழியின்றி பொறியியல் கற்றவன்.. அதனால், அறிவியலையும் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்க ஆசைப்படுபவன்.
அவிழ்மடல்:
5 comments
நல்ல பதிவு.. குழந்தைகளை இனி தைரியமாக நெட்டில் உலவவிடலாம்.. அருணுக்கு நன்றிகள்
Replyநட்புடன்
கவிதை காதலன்
மறைக்கப்பட்டுள்ள விஷயங்கள் ஒன்றும் இல்லாத போதிலும் அது மறைக்கப்டும் போது மதிப்பு மிக்க தாகி விடுகின்றது .
Replyபகிர்வுக்கு நன்றி பிரபு
Replyஎனது பதிவினை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி சகோ..
Replyதமிழர்களாகிய நாம் அனைவரும் "தமிழ்" , "அம்மா" என்கிற பெயரில் பதிவிட்டு மொழிக்கு ஏற்பட்டுள்ள இழுக்கை ஒழிப்போம்!!
மிகவும் பயனுள்ள பதிவு ! நன்றி நண்பரே !
ReplyPost a Comment