MS-Word மூலம் ப்ளாக்கரில் மிக எளிதாக Table உருவாக்குவது எப்படி? | கற்போம்

MS-Word மூலம் ப்ளாக்கரில் மிக எளிதாக Table உருவாக்குவது எப்படி?

நிறைய வலைத்தளங்களில் மிக அழகான HTML Table கள் பார்த்து இருப்போம். எப்படி அது போன்ற அழகிய Table களை நம் வலைப்பூவுக்கு சேர்ப்பது என்று யோசித்து இருப்போம். நிறைய தளங்களில் அது பற்றி படித்தும் இருப்போம். ஆனால் HTML பற்றி தெரியாத ஒருவர் கூட மிக அழகான Tableஐ MS-Word மூலம் உருவாக்குவது பற்றி இன்று உங்களுக்கு சொல்கிறேன்.


Update: இதை விட எளிதான ஒரு வழியை இந்தப் பதிவில் படிக்கலாம்.

பிளாக்கர் பதிவில் இனி மிக எளிதாக Table உருவாக்கலாம்


இதற்கு நீங்கள் இரண்டு விஷயங்கள் மட்டும் அறிந்திருக்க வேண்டும். 

1. Microsoft Word மூலம் Table உருவாக்க தெரிந்திருக்க வேண்டும். 
2. Copy/Paste செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

இரண்டாம் விஷயம் எல்லோருக்கும் தெரியும், முதல் விஷயம் தெரியாதவர் கூட எளிதாய் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். 

1. முதலில் Microsoft Word இல் ஒரு Table உருவாக்குங்கள். 

Insert-->Table  


2. இப்போது உங்கள் தகவல்களை நிரப்புங்கள். 

3. Design Tab என்று ஒன்று Table இருக்கும் போது இருக்கும். இல்லை என்றால் முழு Table ஐயும் select செய்து பாருங்கள் வரும். 


4. இதில் உங்களுக்கு தேவையான Table Style நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். New Table Style என்பதன் மூலன் மேலும் பல Style களை நீங்களே உருவாக்கலாம். (Style Based On என்ற பகுதியில் )

5. இப்போது Save As என்பதை கிளிக் செய்யுங்கள். இதில் Other Formats என்பதை தெரிவு செய்து Web Page வடிவத்தில் Save செய்ய வேண்டும். 

6. இப்போது Save ஆன File ஐ Firefox Browser மூலம் Open செய்திடுங்கள். 

7. இப்போது Open ஆன பக்கத்தில் Right Click செய்து View Page Source என்பதை கொடுக்கவும். 

8. அடுத்து வரும் பக்கத்தில் இருந்து <table> and </table> க்கு இடையில் உள்ளவற்றை Copy செய்ய வேண்டும். இதற்கு எளிதான வழி முதலில் CTRL+F என்பதை கொடுத்து <table தேடுங்கள். (கவனிக்க ஒரு பக்கம் மட்டுமே Symbol இருக்க வேண்டும்.) பின்னர் அதில் இருந்து கீழ் நோக்கி </table> வரை Copy செய்து விடலாம்.    இல்லை என்றால் </table> என்பதை தேடி அதில் இருந்து மேல் நோக்கி <table வரை Copy செய்து விடலாம். 





9. இப்போது Copy செய்ததை உங்கள் வலைப்பூ Post பகுதியில் HTML பகுதியில் Paste செய்து விட வேண்டும். 


பழைய Blogger Interface என்றால் Edit HTML என்று இருக்கும். 

Ms-Word இல் Table க்கு மேலும் கீழும் கொஞ்சம் Text சேர்த்து விட்டு அதை மேலே சொன்ன படி செய்து Browser இல் அதை பார்க்கும் போது மேலிருந்து கீழ் தெரிவு செய்தும் View Selection Source கொடுக்கலாம்.  (இடையில் Table இருக்க வேண்டும்) இதனால் எளிதாக கண்டுபிடிக்கலாம். பின்னர் இப்போது Copy இருக்கும் அதை நேரடியாக வலைப்பூ வில் சேர்ப்பதன் மூலம் அங்கே தேவை இல்லாதவற்றை நீக்கி விடலாம். இந்த முறை எளிதாக இருந்தால் இதை பின்பற்றுங்கள்

Video Tutorial: 



Daily Motion: 


இப்போது உங்கள் Compose பகுதியில் பாருங்கள், மிக அழகான Table இருக்கும். 

ஒரு Example:

Table

Table



Table

Table

Content

Content

Content

Table

Content

Content

Content




சந்தேகம் இருப்பின் கீழே கேட்கவும்.  

- பிரபு கிருஷ்ணா


13 comments

இனி ஈசியா உருவாக்கலாம் போல... நன்றி பிரபு....

Reply

வேர்டுல உருவாக்கிய டேபிளை பதிவுல இணைக்கலாம் என்பது இப்பொழுதான் தெரிந்து கொண்டோம் நன்றிங்க.

Reply

பகிர்வுக்கு நன்றி! பிரபு. இனி அனைவரும் எளிதாக பிளாக்கரில் டேபிள் கிரியேட் செய்யலாம்.

Reply

பயனுள்ள பதிவு! நன்றி நண்பரே !

Reply

என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு அவசியமான பதிவு நன்றி நண்பா

Reply

எளிமையான வழி.

Reply

அன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - எளிதாகப் பயன்படுத்தலாம் - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

Reply

பகிர்விற்கு நன்றி மாப்ளே!

Reply

நன்றி சகோ..,

Reply

எளிமையான வழி. பகிர்வுக்கு நன்றி சகோ.!

Reply

super bro...
Ithu munnare theriyama poche:(

Reply

எளிமையான் வழியைக் காட்டியதற்கு நன்றி!

Reply

Post a Comment