வெப் ஹோஸ்டிங்க் பற்றி எழுத ஆரம்பித்த பின் தான் நிறைய நண்பர்களுக்கு அதில் உள்ள ஆர்வம் தெரிய வந்தது. இதில் நிறைய பேருக்கு நிறைய கேள்விகள். முக்கியமாக வெப் ஹோஸ்டிங்க் என்று ஒன்றை முடிவெடுக்கும் போது என்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கேள்வி நிறைய பேருக்கு உள்ளது அது பற்றி தெளிவு படுத்தவே இந்த பதிவு.
முந்தைய பதிவுகள்:
முந்தைய பதிவுகள்:
சரி என்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? ஒவ்வொன்றாய் பார்ப்போமா?
1. Bandwidth - பேண்ட்வித்
இது தான் மிக மிக மிக மிக மிக ............... முக்கியமானது. இத்தனை மிக போட காரணம் அத்தனை முக்கியம் இது. நீங்கள் ஹோஸ்டிங்க் வாங்கும் போது உங்களுக்கு இது கண்டிப்பாக Unlimited ஆக இருக்க வேண்டும். இது உங்களுக்கு தளத்திற்க்கு வரும் வாசகர்கள், நீங்கள் உங்கள் தளத்தில் பயன்படுத்தி உள்ள படங்கள், வீடியோ மற்றும் பல போன்றவற்றின் எண்ணிக்கையை கொண்டு கணக்கிடப்படும். இது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே இருந்தால் அதற்கு மேல் வாசகர்கள் உங்கள் தளத்தை பார்வையிட முடியாது, Account Suspended என்று வந்து விடும்.
2 . Disk Space
இது உங்கள் தளத்தில் உள்ள படங்கள்,வீடியோ,ஆடியோ, கிராபிக்ஸ், HTML Files, Scripts, போன்றவற்றால் நிரப்பப்படும். இது மிக அதிகமாக இருத்தல் நலம். Unlimited என்று இருந்தால் நலம் என்பது என் கருத்து.
3 . Number Of Websites/ எத்தனை தளங்கள் ஹோஸ்ட் செய்யலாம்?
ஒரு ஹோஸ்டிங் சர்வீஸ் மூலம் எத்தனை வெப்சைட்கள் ஹோஸ்ட் செய்யலாம் என்று சொல்ல இது. இதன் எண்ணிக்கையை பொறுத்து நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் Bandwidth , Disk Space போன்றவற்றை நிறைய தளங்களுக்கு பயன்படுத்தலாம். கவனிக்க மேலே கூறி உள்ள இரண்டும் எல்லா தளத்துக்கும் சேர்த்து கணக்கிடப்படும்.
இதில் நீங்கள் Sub-Domain பற்றி கூட கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இப்போது பெரும்பாலும் அதிக Sub-Domain கள் தருகின்றன.
4. பயன்படுத்தும் விதம் எப்படி?
இது எல்லோரும் கட்டாயம் கவனிக்க வேண்டியது. ஏன் என்றால் ஒவ்வொரு முறையும் நாம் சந்தேகங்களுக்கு அவர்களை தொடர்பு கொள்ள முடியாது. எனவே உங்களுக்கு பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் User Friendly என்று சொல்லுவார்கள்.இதனை தெரிந்து கொள்ள வாசகர் கருத்து (Review), உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு பார்க்கலாம்.
இதில் மிக முக்கியமாக Template இலவசமாக உண்டா என்று பாருங்கள். இல்லை நாம் தான் சொந்தமாக டிசைன் செய்ய வேண்டும் என்றால் அது ஹோஸ்டிங் பணத்தை விட செலவு அதிகம். (நன்றி வந்தேமாதரம் சசி)
5. Server Access
உங்களுடைய தகவல்கள் ஒரு Server இல் சேமித்து வைக்கப்படும் என்று முன்னமே சொல்லி இருந்தேன். Uploading/Downloading போன்றவை இதன் மூலமே இயங்கும். எனவே ஒரு சிறப்பான ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். எப்படி? ஒரு வெப் ஹோஸ்டிங்கை தரும் நிறுவனம் பற்றி வாசகர் கருத்து (Review) மூலம் இதனை அறியலாம்.
6 . Help & Support
வெறுமனே டொமைன், ஹோஸ்டிங் வந்தால் போதுமா? உங்களுக்கு சந்தேகம் என்றால் உதவி செய்யவும் வேண்டும். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
7. Site Creation Tools & Programming Language
பொதுவாக நீங்கள் வாங்கும் ஹோஸ்டிங்கை சில தளங்களுக்கு சில டூல்ஸ் மூலம் பயன்படுத்தலாம், டிசைன் செய்யலாம். அதாவது, நீங்கள் Wordpress மூலம் ஹோஸ்ட் செய்ய விரும்பினால் அதற்கான வசதி அதில் இருக்க வேண்டும். இது போல நிறைய உள்ளது, உங்களுக்கு விருப்பமான ஒன்றை அவர்கள் தருகிறார்களா என்று பார்ப்பதும் முக்கியம்.
அடுத்து Programming Language , இதில் உங்களுக்கு பல்வேறு Programming Language களை பல்வேறு பயன்களுக்கு பயன்படுத்தும் வண்ணம் கொடுத்து இருப்பார்கள் அதையும் நீங்கள் பார்க்க வேண்டும்.
8. Reporting and Statistics
இது பிளாக்கரில் உள்ள Stats போன்றது. உங்களுடைய வாசகர் வருகை கணக்கை நீங்கள் ஹோஸ்ட் செய்யும் தளம் சரியாக தர வேண்டும். இதன் முக்கியத்துவம் நிறைய. எனவே இதை கவனிக்கவும்.
9. Unlimited MySQL Databases
MySQL என்பது ஒரு Open Source Database இது Linux, Apache, PHP, Perl and Python போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எனவே இவற்றில் ஈடுபாடு/அனுபவம் உள்ளவர் என்றால் இதை கவனிக்க வேண்டும்.
10. Email Accounts
எல்லா தளங்களும் கண்டிப்பாக இமெயில் அக்கவுண்ட் தரும். உங்களுக்கு தேவையானபடி இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.
காசு கொடுத்து ஒரு ஹோஸ்டிங்க் வாங்கி தளம் உருவாக்கி விட்டோம், அவற்றை எப்படி பிரபலப்படுத்துவது? அதற்கும் சில வசதிகளை வழங்கும் வசதி உள்ளதா என்று கவனிக்க வேண்டும். முக்கியமாக எதை? Search Engine Submission , SEO Services போன்றவற்றை மிக முக்கியமாக கொள்ளலாம். ஆனால் இவற்றை மட்டுமே நம்பி உங்கள் தளத்தை பிரபலம் ஆக்கி விட முடியாது. உங்கள் உழைப்பும் வேண்டும்.
இவைதான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை. இதை தாண்டிய கேள்விகள் இருந்தால் கீழே கேளுங்கள். பதில் தருகிறேன்.
இவைதான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை. இதை தாண்டிய கேள்விகள் இருந்தால் கீழே கேளுங்கள். பதில் தருகிறேன்.
♦இதையும் படிக்கலாம்♦
கறுப்பு பண விவகாரத்தில் கள்ள மவுனம் காக்கும் மத்திய அரசு, ஏழைகளின் பந்தக்கால் செலவுக்கு பணம் எங்கிருந்து வருகிறதுனு ஆராய்வது வெட்கக்கேடானது
ஜனநாயக நாட்ல லாரி ஓட்டுரதுக்கு எட்டு வரைக்கும் படிச்சிருக்கனும் ,கல்வி அமைச்சரா ஆகுரதுக்கு இல்ல
16 comments
தெளிவா சொல்லிருக்கீங்க பிரதர் .......
Replyநன்றி
தகவலுக்கு நன்றி!
Replyமிக்க நன்றிலேய் தம்பி....!!!
Replygood post machi........
Replyif any one need web hosting with cheap of cost contact me i ll giv u ideas abt it......
jeyamaran333[at]gmail.com
தெளிவா சொல்லிருக்கீங்க...குழந்தைகள் தின வாழ்த்துகள்...
Replyநன்றான சொன்னீர்கள் நீங்கள் வெப் டிசைனராக செய்கிறிர்களா ?
ReplyGood post.
ReplyCan u explain more about Search Engine Submission ,SEO Services.
How can we do it.
Explain detaily.
Mail me at standardincome@gmail.com
Thank u...
@ stalin wesley
Replyநன்றி சகோ.
@ MHM Nimzath
Replyநன்றி சகோ.
@ MANO நாஞ்சில் மனோ
Replyநன்றி அண்ணா.
@ Jeyamaran
Replyஅடுத்த பதிவில் உன்னை தொடர்பு கொள்ளும்படி செய்து விடுகிறேன்.
@ ரெவெரி
Replyநன்றி சகோ. இன்னும் என்னை குழந்தையாகவே பாப்பதற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்
@ FOOD
Replyஎனக்கும் கூடதான் அப்பா.
@ தமிழ் வண்ணம் திரட்டி
Replyஇல்லை நண்பரே. கற்றுக் கொண்டு இருக்கிறேன்.
@ Ganesh(standardincome@gmail.com)
Replyவரும் பதிவுகளில் அவற்றை தர முயற்சிக்கிறேன் சகோ.
tweets அருமை நண்பா....
ReplyPost a Comment