கூகுள் கணக்கு இன்று இணையத்தில் உள்ளவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாய் மாறிவிட்டது. நம்மில் பெரும்பாலானோர் மிக அதிகமான கூகுள் பயன்பாடுகளை பயன்படுத்துவோம். எல்லாமே மிக முக்கியமான தகவல் கொண்டவை. இதனால் நம் தகவல்கள் திருடப் பட வாய்ப்புகள் அதிகம். இந்த திருட்டுகளில் சில வித்தியாசமானவை. எப்படி கூகுள் கணக்கை பாதுகாப்பது என்று பார்ப்போமா?
இதனை ஆக்டிவேட் செய்வதன் மூலம் ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு புதிய கணினியில் இருந்து கூகிள் கணக்கை பயன்படுத்தினால் ஒரு கோட் ஆனது அலைபேசி க்கு குறுஞ்செய்தி ஆக அனுப்படும் அதை கொடுத்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.
இதனை செயல்படுத்த முதலில் உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும். அதில் "Using 2-step verification" என்பதற்கு நேரே உள்ள edit என்பதைசொடுக்கவும் அல்லது "Using 2-step verification" என்பதை சொடுக்கவும்.
இப்போது Start என்பதை கொடுக்கவும். அடுத்த பக்கத்தில் உங்கள் நாட்டை தெரிவு செய்து உங்கள் அலைபேசி எண் கொடுக்க வேண்டும். கூடவே Country Code ஆனது தொலைபேசி எண்ணுக்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டும். இந்தியாவிற்கு இது ௦ ௦0 or 91, உதாரணம்: 09876543210 .
இப்போது Send Code என்பதை சொடுக்கவும், உடனே உங்கள் அலைபேசியில் ஒரு செய்து கூகுள் இடம் இருந்து வரும். இதில் உங்கள் கோட் இருக்கும். இதனை அதே பக்கத்தில் கொடுத்து Verify செய்யவும். இதன் பின்னர் Next கொடுத்து அடுத்த பக்கம்.
நீங்கள் தற்போது பயன்படுத்தும் கணினியை நினைவில் வைத்து இருக்க வேண்டும் என்றால் அதில் "Remember Verification for This computer for 30 Days" என்பது தெரிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அடுத்த பக்கத்தில் Turn On 2-Step Verification என்பதைசொடுக்கவும்.
இப்போது அடுத்த பக்கத்துக்கு நீங்கள் வருவீகள்.
நீங்கள் இந்த வசதியை ON செய்து வைத்து இருந்தால் கீழே உள்ளவற்றுக்கு தனி கடவுச்சொல் பயன்படுத்த வேண்டும்.
- AdWords Editor
- Apps on smartphones such as Android, BlackBerry or iPhone
- Chrome Sync
- Mail clients such as Microsoft Outlook
- Chat clients such as Google Talk or AIM
ஏன் என்றால் இவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது கூகுள் கோட் எதுவும் அனுப்ப இயலாது.
இப்போது ஒரு குறிப்பிட்டபெயர் கொடுத்து ஒரு கடவுச்சொல் Generate செய்ய வேண்டும். இது கூகுள் தானாக உருவாக்கும் கடவுச்சொல் நாம் மாற்ற இயலாது.
கவனிக்க இந்த கடவுச்சொல் நினைவில் கொள்ள முடியாத அளவுக்கு கடினமானதாய் இருக்கும். மேலே உள்ளவற்றில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது Gtalk மட்டுமே. எனவே முதல் முறை உங்களுக்கு வரும் கடவுச்சொல்லை உங்கள் அலைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரியில் சேமித்து வைக்க வேண்டும். அல்லது எப்போதெல்லாம் உங்களுக்கு Gtalk பயன்படுத்த வேண்டுமோ அப்போது இந்த பக்கத்துக்கு Account Settings பக்கம் மூலம் வந்து ஏற்கனவே உள்ள கடவுச்சொல்லை Revoke என்று கொடுத்து விட்டு ஒரு புதிய கடவுச்சொல் உருவாக்க வேண்டும். இவற்றைக் கொண்டு உங்கள் கணக்கை திருட முடியாது.
இதை Turn Off செய்ய வேண்டும் என்றால் உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும். அதில் "Using 2-step verification" என்பதற்கு நேரே உள்ள edit என்பதைசொடுக்கவும் அல்லது "Using 2-step verification" என்பதை சொடுக்கவும். பின்னர் Turn Off 2-Step Verification என்பதை கொடுக்கவும். இப்போ வரும் குட்டி விண்டோவில் OK கொடுத்து விட்டால் OFF செய்யப்பட்டு விடும். எல்லா பயன்பாடுகளுக்கும் பழைய கடவுச்சொல் நீங்கள் பயன்படுத்தலாம்.
புதிய கணினியில் நுழைய முயலும் போது உங்கள் அலைபேசி இல்லை என்றால், அல்லது நெட்வொர்க் பிரச்சினை என்றால் உங்களால் உங்கள் கணக்கில் நுழைய முடியாமல் போகலாம். எனவே யோசித்து செய்யவும்.
சில மற்ற தகவல்கள்:
1. உங்கள் ஜிமெய்ல் கணக்கை கண்காணியுங்கள்
இது எங்கிருந்து எல்லாம் நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்து உள்ளீர்கள் என்று காண உதவும்.
Detail என்பதை சொடுக்கினால் ஒரு புதிய Tab/Window வரும் இதில் தேவை இல்லாத,அல்லது புதிய IP, போன்றவை இருந்தால்எல்லா சீசன்களையும் Log-out செய்து விடலாம்.
2. தேவை இல்லாத மின்னஞ்சலில் உள்ள லிங்க்களை சொடுக்காதீர்கள்
உங்களுக்கு தெரியாத நபர் அல்லது மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஏதேனும் மூணு மாசத்துக்கு முடிவெட்ட ஆயிரம் ரூபாய், உங்களுக்கு 1000$ பரிசு கிடைத்து உள்ளது என்று வந்தால் அவற்றை டெலீட் செய்ய வேண்டியது தான் முக்கிய கடமை. இதில் சில லிங்க்களை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால், நம் மின்னஞ்சல் தொடர்பில் உள்ள எல்லோருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுகிறார்கள் இவர்கள். நம்பிக்கை உள்ள நபர்களிடம் இருந்து வரும் நம்ப முடியாத மின்னஞ்சல்கள் இதை உறுதி செய்கின்றன.
3. எப்படி வைப்பது கடவுச்சொல்/பாஸ்வேர்ட்?
என்னதான் பல வழிகளை கடைபிடித்தாலும் நம் முக்கிய கடமை மற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி கடவுச்சொல் வைப்பது. பிறந்த தேதி,பள்ளி, கல்லூரியின் பெயர், வருடம், பழைய காதலன்/காதலியின் பெயர்(மனைவி அல்லது கணவன் கண்டுபிடிக்காமல் இருக்க,எதை என்பது உங்களுக்கே தெரியணும் ), மனைவி,குழந்தைகள் பெயர், கார் எண். என இவற்றை பயன்படுத்தக் கூடாது. மற்றவை ஏதேனும் எழுத்து, எண்,குறியீடுகள் கலந்து வைக்கலாம். உதாரணம்: (qwerty@500$*india)
4. பொது இடங்களில்(Browsing Center) மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்தலாமா?
4. பொது இடங்களில்(Browsing Center) மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்தலாமா?
இது நாம் செய்யும் மிகப் பெரிய தவறு. கண்டிப்பாக இதனை செய்யவே கூடாது. சில இடங்களில் Key Logger என்ற சாஃப்ட்வேர் பயன்படுத்தி நீங்கள் டைப் செய்யும் எல்லாவற்றையும் சேமிக்க வழி உள்ளது. இங்கே இந்தியாவில் அதிகமாக இதை எதிர்பார்க்காவிட்டாலும் மற்ற பிரச்சினைகள் உள்ளன.
12 comments
பயனுள்ள தகவல் சகோ.! இதன் மூலம் ஹேக்கிங், ஸ்பாம் ஆகிய தொல்லைகளை ஓரளவு குறையும்.
Replyபயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.
Replyநம்ம தளத்தில்:
நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி?
பயனுள்ள தகவல் நன்றி
Replyகலக்கிட்டடா தம்பி :)) அது சரி கீழ இருக்கிறதுதான் ((qwerty@500$*india) ) உன்னோட பாஸ்வேர்டா ? :))
Replyசும்மா அசத்துறியே தம்பி வாழ்த்துக்கள்...!!!
Replyபயனுள்ள பதிவு நன்றி நண்பா
Replyஇன்று என் வலையில்
Replyதூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?":
நல்ல தகவல் நானும் இதை பயன்படுத்துகிறேன்.
Replyநன்றி...
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
Replyசுட்டியை சொடுக்கி படியுங்கள்.
தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம்.
.
மிகப் பயனுள்ள பகிர்வு.
Replyபயனுள்ள தகவல் நன்றி.
ReplyUseful information!
ReplyPost a Comment