இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமானது தேவை இல்லாமல் மின்னஞ்சல்கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு.
பேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம் நண்பர்கள் நம் ஸ்டேட்டஸ் மீது ஒரு கிளிக் செய்தாலே நமக்கு மின்னஞ்சல் வருவது. இதை எப்படி தடுப்பது என்றுதான் இன்றைய பதிவு.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையவும்.
மேலே உள்ளது போல பக்கத்தின் வலது பக்கம் Home என்பதற்கு அருகில் சொடுக்கவும் செய்து Account Settings செல்லவும். இதில் இடது புறம் Notifications என்பதை சொடுக்கவும்
இப்பொழுது, இதில் மேலே படத்தில் உள்ளதை போல Email Frequencyஎன்பதை சொடுக்கவும். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் வராது, மாறாக Photo Tag, Payment Confirmation, Security, and Privacy Notifications மற்றும் சில முக்கியமான செய்திகள் (இது நீங்கள் ரொம்ப நாளாக பேஸ்புக் பக்கம் வராவிட்டால் பிரபல செய்திகள், உங்கள் சுவற்றில்(Wall) நண்பர்கள் எழுதியது போன்றவை ஒரே மின்னஞ்சலில் வரும் ).
எந்த மின்னஞ்சலும் வேண்டாம் என்பவர்களும் இதையே தெரிவு செய்து கொள்ளலாம்.
இல்லை எனக்கு சில விஷயங்கள் மின்னஞ்சலில் வர வேண்டும் என்று கேட்பவர்கள் இதனைசொடுக்கமல் விட்டு கீழே All Notifications என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான ஒன்றின் மீது (Photos, Pages இது போன்று ) கிளிக் செய்து தேவையான Notification தெரிவு செய்து Save செய்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் விருப்பமானவற்றை மட்டும் மின்னஞ்சலில் பெறலாம்.
சைட் டிஷ்:
மிக முக்கிய காரியம் முடிந்து விட்டது இனி குட்டி தகவல்கள்.
Facebook அக்கவுண்ட் Email முகவரியை மாற்றுவது எப்படி?
Facebook => Account Settings => Email இதில் உங்கள் Primary இமெயில் ஆக ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே இருந்தால் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள், இல்லை புதியதாக ஒன்றை கொடுத்து (Add Another Email) Primary ஆக மாற்றிக் கொள்ளலாம்.
நமது பேஸ்புக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறாரா என்று அறிவது எப்படி?
Facebook => Account Settings => Security => Login Notifications இதை enable செய்யவும். இதன் மூலம் உங்கள் கணக்கில் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத கணினியில் இருந்து Log-in செய்தால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும். (கவனிக்க. வேறு கணினி, உங்கள் கணினி அல்ல)
இதை Enable செய்த உடன் ஒருமுறை Log-அவுட் செய்து பின்னர் நுழையவும், அப்போது உங்கள் கணினிக்கு ஒரு பெயர் கேட்கும் கொடுத்து விடுங்கள்.
கடந்த நுழைவுகளை பார்ப்பது எப்படி?
Facebook => Account Settings => Security => Active Sessions இதில் நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்த வேறு வேறு இடம்/கணினி மூலம் நுழைந்து இருந்தால் அவற்றை காட்டும், எது வேண்டாமோ அல்லது சந்தேகமோ அதை End Activity கொடுத்து விடலாம்.
பேஸ்புக் App's களுக்கு கடவுச்சொல் வைப்பது எப்படி?
சில பேஸ்புக் பயன்பாடுகள் (Applications) Secure ஆனது அல்ல. எனவே அவற்றுக்கு கடவுச்சொல் கொடுத்தால் நல்லது தானே. Facebook => Account Settings => Security => App Passwords இதில் பயன்பாட்டின் பெயரைக் கொடுத்து விட்டால் போதும்.
22 comments
பயனுள்ள தகவல் நன்றி
Replyதகவலுக்கு நன்றி சகோ...
Replyதகவல்களுக்கு நன்றி!!
Replyமெல்லிய வாட்ச்சில் மணி பார்க்கணுமா என்ன, அதற்குத் தான் லேட்டஸ்ட் செல்ஃபோன் இருக்கே!! :-)
tweets super
Replyபயனுள்ள தகவல்கள் சகோ.
Reply//நமது பேஸ்புக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறாரா என்று அறிவது எப்படி?//
இப்பத்து தான் தெரிந்துக் கொண்டேன். நானும் பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி!
இது எனக்கு நல்ல பயனுள்ள தகவல் நண்பா, நன்றி...
Replyஇதை நான் ஏற்கனவே வச்சு இருக்கேன். மெயில் வர்றது இல்லை. பகிர்வுக்கு நன்றி
Replyகுட்டித்தகவல்கள் பயனுள்ளவை.த்வீத்ஸ் கலக்கல்!
Replyதற்போது தேவைப்படும் பதிவு.
Replyநண்பா நான் facebook கணக்கு துவங்க பயன்படுத்திய முகவரியை நான் மறந்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது, காரணம் இந்த notifications.. பல மதங்கள் கழித்து தீர்வு வழங்கியதற்கு நன்றிகள் பல.....
Reply@ "என் ராஜபாட்டை"- ராஜா
Replyநன்றி சகோ.
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
Replyநன்றி சகோ.
@ middleclassmadhavi
Replyநன்றி
@ suryajeeva
ReplyCredit Goes To that twitters
@ Abdul Basith
Replyநன்றி சகோ.
@ சண்முகம்
Replyநன்றி சகோ.
@ தமிழ்வாசி - Prakash
Replyநன்றி சகோ.
@ கோகுல்
Replyநன்றி சகோ.
@ வே.சுப்ரமணியன்
Replyநன்றி சகோ.
@ FOOD
Replyநன்றி அப்பா
@ தமிழ்கிழம்
Replyநன்றி சகோ
சற்று முன் கிடைத்த தகவல் படி ......
Replyபதிவு உலக ..........
அன்பின் நண்பர்கள் ,
அன்பின் தோழிகள் ,
அனைவர்க்கும் ஒரு மகிழ்வான தகவல் .
உணவு உலகம் திரு .சங்கரலிங்கம் சார் தலைமையில்
இன்று
"ஒரு இனிய பதிவர் சந்திப்பு .."
சிறப்பு விருந்தினர் " துபாய் ராஜா "
இடம்:ஹோட்டல் ராஜ் திலக் . திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் .
நேரம் :மாலை 5 மணி .
வாருங்கள்,வாருங்கள் ! ஒரு சுவையான மகிழ்வான சந்திப்புக்கு ...
தொடர்புக்கு :-9597666800 ,9442201331 ,8973756566
வாருங்கள்............வாழ்த்துங்கள் ............
அன்புடன்
யானை குட்டி
http://yanaikutty.blogspot.com
Post a Comment