வெப் ஹோஸ்டிங் இந்த வார்த்தை பற்றி தெரியாதவர் யாரும் இணையத்தில் ஒரு தளத்தை சொந்தமாக வைத்திருக்க இயலாது. அப்படி என்றால் என்ன? என்ன செய்கிறது வெப் ஹோஸ்டிங்? என்ன வசதிகள் உள்ளன? எல்லாம் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. ஏதோ என்னால் முடிந்த அளவு தருகிறேன்.
Web Hosting என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தன்னைப் பற்றியோ, தன் நிறுவனத்தைப் பற்றியோ இந்த உலகுக்கு இணையத்தின் மூலம் சொல்ல இது உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் இதை வழங்கும். இது இலவசமாக கூட கிடைக்கிறது.
இங்கு நான் வெப் ஹோஸ்டிங் என்பதை வெப் சைட் என்று குறிப்பிடுவேன்.
நீங்கள் கேட்கலாம் ப்ளாக் என்றால் என்ன என்று? அதாவது வலைப்பூ என்பது உங்களைப் பற்றி நீங்கள் எழுதும் டைரி போன்றது. ஆனால் வெப் சைட் என்பது ஒரு புத்தகம் எழுதுவது எனக் கொள்ளலாம். இரண்டிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
பெரும்பாலும் ப்ளாக் எல்லாம் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பல மாற்றங்கள் செய்ய இயலாது. ஆனால் வெப் சைட் ஆனது ஒரு ப்ளாக் என்பதை விட மிக அதிக வசதிகளை கொண்டது. இதில் பல மாற்றங்கள் நாம் செய்யலாம். தள வடிவமைப்பு என்பது மட்டும் அல்ல, பல்வேறு வசதிகள்.
ஒவ்வொரு வெப் சைட்டும் ஒரு ப்ளாக் கொண்டிருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு நிறுவனம் வைத்து உள்ளீர்கள் என்றால், அந்த வெப் சைட் மூலம் உங்கள் நிறுவனம் பற்றிய செய்திகளை சொல்ல வேண்டும். நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி சொல்வது ப்ளாக். உதாரணம், ஒரு தொலைகாட்சி நிறுவனம் தன்னுடைய நிறுவனம் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி அதன் தளத்தில் சொல்லி இருக்கும், அதே ஒரு நிகழ்ச்சி ஒரு புதிய வசதி மூலம் உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதைப் பற்றி சொல்வதற்கு அதன் ப்ளாக் பயன்படுத்தும்.
ஆனால் இன்று வெறும் சொந்த டொமைன் வைத்து எழுதினாலே அது வெப்சைட் என்று சொல்லும் வண்ணம் ஆகிவிட்டது.
இதுவரை வெறும் வெப் சைட் என்றால் என்ன என்று மட்டுமே சொல்லி உள்ளேன். சரி வெப் ஹோஸ்டிங் என்றால் என்ன?
நாம் நம் கணினியில் நமது தகவல்களை சேமித்து வைப்பது போன்றதுதான் இது. ஆனால் இதன் அளவு மிக மிக அதிகம்.
நாம் நம் கணினியில் நமது தகவல்களை சேமித்து வைப்பது போன்றதுதான் இது. ஆனால் இதன் அளவு மிக மிக அதிகம்.
அதாவது நாம் எழுதும் உங்கள் வலைப்பூ தகவல்கள் எல்லாம் கூகுள் தனது சொந்த சர்வர் மூலம் சேமித்து வருகிறது. இது இலவசம். இதே வசதியை நாம் நம் சொந்த செலவில் சேமித்துக் கொள்வது தான் வெப் ஹோஸ்டிங். இதற்கு மாதம் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு செலவு ஆகும். செலவை பொறுத்து இடவசதி கிடைக்கும். இங்கு இடவசதி என்பது MB,GB என்பதில் குறிப்பிடப்படும்.
இதில் நமது தளத்தில் நாம் போஸ்ட் செய்யுபவை ஒரு குறிப்பிட்ட வெப் ஹோஸ்டிங் சர்வீஸ் மூலம் ஒரு சர்வர் கொண்டு சேமிக்கப்படும்.
பல்வேறு வகையான ஹோஸ்டிங் வசதிகள் உள்ளன. இலவசம், ஷேர்டு வெப் ஹோஸ்ட், சொந்த ஹோஸ்டிங், இன்னும் பல. ஆனால் இதில் ஷேர்டு ஹோஸ்டிங் தான் அதிகம் பயன்படுத்தப்படுவது. இவை வெப் ஹோஸ்ட் தளங்கள் மூலம் நமக்கு கிடைக்கும்.
வசதிகள் மட்டும் அல்ல வகைகளும் உள்ளன இதில் இமேஜ் ஹோஸ்டிங், வீடியோ ஹோஸ்டிங், பைல் ஹோஸ்டிங், ப்ளாக் ஹோஸ்டிங், ஈமெயில் ஹோஸ்டிங், ஷாப்பிங் கார்டு சாப்ட்வேர்.
ஒரு தளத்தை ஹோஸ்ட் க்கு மாற்ற வேண்டும் என்று நீங்கள் என்னும் போது பல விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். Bandwidth, Disk Space, DataBase, Number Of Domains, Site Creation Tools, Programming Language, SEO Service .இவைதான் அந்த விஷயங்கள்.
சிறந்த வெப் ஹோஸ்டிங் தளங்கள் பல உள்ளன. அவை பற்றியும், மற்ற பல தகவலும் கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.
என்னுடைய பார்வையில் தவறு இருக்கலாம். இருந்தால் சொல்லுங்கள். அதே நேரம் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் அதை கீழே கேளுங்கள்.
30 comments
அருமையான விளக்கம் அண்ணே ..
Replyஷர்ட் கட் URL எளிதாக உருவாக்கலாம் ஒரே நொடியில்
தகவல்களுக்கு நன்றி
Replyஇது பெரிய topic ...
நீங்க என்ன பண்ணலாம்னா ஒவ்வொரு விஷயமா எடுத்து ஒரு பதிவு போடலாம்..
ஒன்று
வலைதளத்திற்கு வலைப்பூவை விட என்ன பெரிய advantage ?
இரண்டு
வலைப்பூவுக்கு வலை தளத்தை விட என்ன பெரிய advantage ?
மூன்று
இதே போல் ஒரு பதிவு போடுங்கள் அங்கு கேக்கிறேன்
@ suryajeeva
Replyஉண்மையில் இதை ஒரே பதிவுடன் முடிக்கும் எண்ணத்துடன் ஆரம்பித்தேன். ஆனால் முடிக்கும் போதுதான் தொடராக எழுதும் எண்ணம் வந்தது. நீங்கள் சொன்னது குறித்து கண்டிப்பாக எழுதுகிறேன்.
சூப்பர் பிரபு.. தொடருங்கள்..!!
Reply//எழுதலாம்//
Replyஅபப்படின்னு வோட் பண்ணி இருக்கேன் ஏமாத்திராதீங்க
எழுதுங்கா பாஸ்
Replyநண்பா blogger செய்வதும் web hosting தான். அது reseller hosting (மொத்தமாக வாங்கி சில்லறையில் விற்பது போன்றாகும் ஆனால் google blogger-இல் அது இலவசம்) எனப்படும். நாம் அவ்வளவு சுலபமாக hosting செய்ய முடியாது, web designer தனியாக காசு கொடுத்து நியமிக்க வேண்டும். அது ஒரு கடல், முத்து எடுக்க உதவவும்.. (write more)
ReplySuper Gud Post
ReplySuper Gud Post
Replyகட்டாயம் எழுதுங்கள்... காத்திருக்கிறோம்!
Replyபயனுள்ள தொடர். அவசியம் தொடருங்கள் சகோ.!
Replyநல்ல பதிவு.
Replyதொடருங்கள்.
வாழ்த்துக்கள்.
நல்ல விசயஙளை தள்ளி போடாதீஙக! சீக்கிரமே எழுதுங்க!
Replyதமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
Replyஉங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
machi ne asthu da.............
Reply@ என்டர் தி வேர்ல்ட்
Replyநன்றி சகோ.
@ தங்கம்பழனி
Replyநிச்சயம் சகோ.
@ யூர்கன் க்ருகியர்
Replyஉங்களை ஏமாற்ற முடியுமா? கண்டிப்பாக தொடர்கிறேன்.
@ கார்த்தி கேயனி
Replyகண்டிப்பாக சகோ.
@ தமிழ்கிழம்
Replyஇது குறித்து அடுத்த பதிவில் எழுத வேண்டி இருந்தது தகவலுக்கு நன்றி சகோ.
@ வைரை சதிஷ்
Replyநன்றி சகோ.
@ middleclassmadhavi
Replyசீக்கிரமே ஆரம்பிச்சுடலாம் அக்கா.
@ FOOD
Replyகண்டிப்பாக அப்பா.
@ Abdul Basith
Replyகண்டிப்பாக சகோ.
@ Rathnavel
Replyகண்டிப்பாக ஐயா
@ atchaya
Replyகூடிய விரைவில் அடுத்த பதிவு தருகிறேன் சகோ.
@ Jeyamaran
Replyநீ இல்லாமல் கண்டிப்பாக இது சாத்தியம் இல்லை மச்சி. எனக்கு சந்தேகம் வந்தால் உன்னிடம் தான் கேப்பேன்.
வெப் ஹோஸ்ட்டிங் பற்றி எனக்கு இருந்த சந்தேகத்திற்கு பயனாக அமையும் வண்ணம் அருமையான விளக்கப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.
Replyஅன்பு பதிவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் எனது தளத்தை தரிசித்தமக்கு, நன்றி!!!!!!!!!!
Replyவெப்டிசைநிங் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் : https://www.youtube.com/watch?v=YtXOWFMd3Uw
ReplyPost a Comment