கடந்த பதிவு வெப் ஹோஸ்டிங்க் பற்றி எழுதிய போது இது நிறைய பேருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நிறைய ஆர்வமாக எழுதலாம் என்று சொல்லி உள்ளீர்கள். சரி முதலில் ஆரம்பத்தில் இருந்தே சொல்வதுதானே சரி. அதனால் பிளாக் மற்றும் ஒரு வெப் சைட் இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று சொல்வதே இந்த பதிவு.
கடந்த பதிவின் பின்னூட்டத்தில் சகோ சூர்யஜீவா கேட்டு இருந்தார் இதனை. எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் இருக்கும். சரி வாருங்கள் பதில்களை பார்ப்போம்.
பிளாக் என்றால் என்ன?
நாம் நம்முடைய தினசரி டைரி எழுதுவது போன்றது இது. நாம் பார்ப்பது, படிப்பது என்று பகிர்வோம்.
வெப்சைட் என்றால் என்ன?
இது உங்கள் பயோ-டேட்டா போன்றது. என்ன பெயர்,என்ன படிப்பு. என்று சொல்வது. இதில் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் யார் என்று மட்டும் சொல்வது போன்றது.
பிளாக் vs வெப்சைட் என்ன வேறுபாடு?
மிக எளிது.மேலேயே தெரிந்து இருக்கும் இதற்கான பதில். நான் எளிதாக விளங்கும் வண்ணம் சொல்கிறேன்.
பிளாக் | வெப்சைட் |
பிளாக் என்பதன் முகப்பில் அதனுடைய சமீபத்திய பதிவுகள் இருக்கும், இது அடிக்கடி Update செய்யப்படும் | வெப்சைட் என்பதில்அந்ததளம் எது பற்றியது என்ற தகவல் இருக்கும். பெரும்பாலும் இந்த தகவல்கள்அடிக்கடி மாறாது. |
இணையம் பற்றி அடிப்படை தெரிந்த எவரும் எழுதலாம் | கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு தேவை. கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் |
HTML பற்றிய கவலை தேவை இல்லை. நீங்கள் எழுத வேண்டும் அதுவே முக்கியம் | எழுத வேண்டும் என்பதில் கவனம் தேவை இல்லை.வடிவமைப்புதான் முக்கியம். எனவே கொஞ்சம் HTML பற்றிய அறிவு அவசியம் |
இது தேதி வாரியாக பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த மாதத்தில் இத்தனை என்று கணக்கில் கொள்ளலாம். | இதில் static Pages எனப்படும் பக்க அமைப்பு இருக்கும். இதன் மூலம் தளத்தின் பக்கங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். உதாரணம்: Home, About Us, Contact Us, Products, இன்னும் பல. |
நீங்கள் கேட்கலாம் ஒரு வலைப்பூ என்பது வெப்சைட்க்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதே என்று. ஆனால் இதில் எல்லாமே ஒரு வரையறைக்கு உட்பட்டு தான் இருக்கும்.
ஒரு website ஆனது ஒரு பிளாக் ஆக கூட செயல்பட முடியும். ஆனால் ஒரு பிளாக் வெப்சைட் என்ற பெயரை, அமைப்பைக் கொண்டு இருக்கலாம், ஆனால் வெப்சைட் ஆகி விட முடியாது. இதுதான் மிக முக்கிய வேறுபாடு. அதைத்தான் மேலே ஒற்றை வரியில் சொல்லி இருந்தேன்.
blogger என்பது மிக மிக எளிதான பிளாக் வசதி இதை விட மேம்பட்ட வசதிகள் பல உள்ளன. Wordpress, Joomlaa, Typepad, இன்னும் பல.
என்னைக் கேட்டால் தனிமனிதர் ஒருவர் வெப்சைட் என்பது வைத்திருக்க என்ற அவசியம் இல்லை. அது நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு மட்டும் உகந்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம், ஒரு website கண்டிப்பாக பிளாக் என்பதை கொண்டிருத்தல் வேண்டும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்,
நான் ஒரு தொண்டு நிறுவனம் வைத்து உள்ளேன்என்றால், அது எதைப் பற்றியது, எங்கெங்கு உள்ளது, நோக்கம் என்ன? சாதித்தது என்ன? படிக்கும் நீங்கள் பங்கெடுப்பது எப்படி என்று என் வெப்சைட் மூலம் பகிர வேண்டும்.
இப்போது தெளிவாக புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். இது என்னுடைய பார்வை. உங்கள் பார்வை வேறு மாதிரியாய் இருக்கலாம். அதையும் பகிருங்கள். ஏன் என்றால் நான் கற்றது கையளவு மட்டுமே.
வெப்சைட்டில் ப்ளாக்
ஒரு வெப்சைட்க்கு ப்ளாக் என்பது சப்-டொமைன் ஆகவோ அல்லது, ஒரு பேஜ் ஆகவோ இருக்கும். உதாரணம்,
Sub-domain blog- http://blog.thiratti.com/
Blog Within The Domain- http://indli.com/static/add-indli-voting-widget-blogger
தமிழ்மணம் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ள போதும், அதன் நிர்வாகி ஒருவர் கூறிய சில முறையற்ற வார்த்தைகளுக்காக தமிழ்மணம் பதில் சொல்லும் வரை தமிழ்மணத்தை தற்காலிகமாக நான் எனது வலைப்பூவில் இருந்து நீக்கி வைக்கிறேன்.

அதே வெப்சைட்க்கு நான் ஒரு தனி பிளாக் என்று ஒன்று வைத்து நான் செய்த பணிகளை பட்டியலிட வேண்டும். என்னென்ன event நடத்தி உள்ளேன், யார் வந்தனர்,யார் பயன்பெற்றனர், இன்னும் பல.
இப்போது தெளிவாக புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். இது என்னுடைய பார்வை. உங்கள் பார்வை வேறு மாதிரியாய் இருக்கலாம். அதையும் பகிருங்கள். ஏன் என்றால் நான் கற்றது கையளவு மட்டுமே.
வெப்சைட்டில் ப்ளாக்
ஒரு வெப்சைட்க்கு ப்ளாக் என்பது சப்-டொமைன் ஆகவோ அல்லது, ஒரு பேஜ் ஆகவோ இருக்கும். உதாரணம்,
Sub-domain blog- http://blog.thiratti.com/
Blog Within The Domain- http://indli.com/static/add-indli-voting-widget-blogger
தமிழ்மணம் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ள போதும், அதன் நிர்வாகி ஒருவர் கூறிய சில முறையற்ற வார்த்தைகளுக்காக தமிழ்மணம் பதில் சொல்லும் வரை தமிழ்மணத்தை தற்காலிகமாக நான் எனது வலைப்பூவில் இருந்து நீக்கி வைக்கிறேன்.
36 comments
இலவச ப்ளாக் வழங்கிகள் மூலம் எழுதும்பொழுது ஒவ்வொரு பதிவுக்கும் "Publish" என்ற பொத்தானை அழுத்தியவுடன் தானாகவே ஒரு link உருவாக்கப்படுகிறது..
ReplyHTML கோடு எழுதும்பொழுது பொதுவாகவே "HOME" , "About US" , "Contact" போன்றவற்றிற்கு தனிதனி பக்கங்களை (Address) உருவாக்குகிறோம்..
ஒரு வெப்சைட்- ல் ப்ளாக் உருவாக்குவது எப்படி ? அதாவது வெப்சைட் இல் ப்ளாக் உருவாக்கி ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு "address" உருவாக்குவது எப்படி?
அருமை.வெப்சைட் பற்றிய நல்ல தகவல்கள், தொடரட்டும் பிரபு...பலருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
Replyதொண்டு நிறுவனம் உதாரணம் மூலம் வெப்சைட் பற்றி விளக்கமாக புரியவைத்துவிட்டீர்கள். நன்றி சகோ.!
Reply//தமிழ்மணம் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ள போதும், அதன் நிர்வாகி ஒருவர் கூறிய சில முறையற்ற வார்த்தைகளுக்காக தமிழ்மணம் பதில் சொல்லும் வரை தமிழ்மணத்தை தற்காலிகமாக நான் எனது வலைப்பூவில் இருந்து நீக்கி வைக்கிறேன். //
வரவேற்கிறேன் சகோ.!
தமிழ்மணம் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ள போதும், அதன் நிர்வாகி ஒருவர் கூறிய சில முறையற்ற வார்த்தைகளுக்காக தமிழ்மணம் பதில் சொல்லும் வரை தமிழ்மணத்தை தற்காலிகமாக நான் எனது வலைப்பூவில் இருந்து நீக்கி வைக்கிறேன். //
Replyஅட...அருமையா சொன்னீங்க
அனைவருக்கும் புரியம் வகையில் மிகத் தெளிவாக
Replyஉதாரணங்களுடன் எழுதியிருப்பது அருமை
தொடர வாழ்த்துக்கள்
நல்லா அலசி இருந்தீங்க! வலை பூவை விட வலை தளத்தில், தேடு இயந்திரத்தில் தேட வசதியாக இருக்கும் என்று ஒன்றை சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன?
Replyநல்ல தகவல் சகோ
Replyநல்ல தகவல் சகோ
Replyஎளிமையாக சொல்லி இருப்பது இன்னும் அருமை...!!!
Replyவணக்கம் சகோ,
Replyவெப் ஹோஸ்ட்டிங்,
ப்ளாக் பற்றி
அருமையான விளக்கப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.
அனைவருக்கும் புரியும்படியான எளிமையான விளக்கம் ....
Replyமிகவும் எல்ளிமையாக தெளிவாக விளக்கிய விதம் அருமை. நன்றியும் பாராட்டுக்களும்.
Reply"தமிழ்மணம் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ள போதும், அதன் நிர்வாகி ஒருவர் கூறிய சில முறையற்ற வார்த்தைகளுக்காக தமிழ்மணம் பதில் சொல்லும் வரை தமிழ்மணத்தை தற்காலிகமாக நான் எனது வலைப்பூவில் இருந்து நீக்கி வைக்கிறேன்"
Replyஅவர்களிடம் இருந்து நல்ல பதில் கிடைக்குமா பிரபு ?
மானமும், அறிவும் மனிதருக்கு அழகு - பெரியார்
@ யூர்கன் க்ருகியர்
Replyநீங்கள் கேள்வி கேட்டபின் தான் தோன்றியது ஆக அதை மறந்து விட்டோமே என்று. இடையில் சேர்த்து உள்ளேன் பாருங்கள்.
//வெப்சைட்டில் ப்ளாக் //
இதுதான். நீங்கள் வெப்சைட் ஒரு இடத்தில் வாங்கலாம், பிளாக் ஒரு இடத்தில் எழுதலாம்.
@ Kousalya
Replyநன்றி அக்கா.
@ Abdul Basith
Replyஅதை மட்டும் படித்தாலே இந்தப் பதிவின் அர்த்தம் புரிந்து விடும் இல்லையா சகோ?
@ ’’சோதிடம்’’ சதீஷ்குமார்
Replyநண்பர்களின் உணர்வை மதிக்கிறேன். பார்ப்போம் என்ன பதில் சொல்கிறார்கள் என.
@ Ramani
Replyநன்றி ஐயா.
@ suryajeeva
Replyஇது எனக்கு புரியவில்லை சகோ.
ஆனால் வலைதளங்கள் பெரும்பாலும் அவை நடத்தும் வலைப்பூ மூலம் எளிதில் தேடுபொறி இயந்திரத்தில் வார இயலும்.
உங்கள் கேள்விக்கு இது பதில் இல்லை என்று தெரியும். ஆனால் நீங்கள் கேட்க வந்த விஷயம் எனக்கு தெளிவாய் புரியவில்லை மன்னிக்கவும்.
@ தமிழ்கிழம்
Replyநன்றி சகோ.
@ வைரை சதிஷ்
Replyநன்றி சகோ.
@ MANO நாஞ்சில் மனோ
Replyஎல்லோருக்கும் புரியவேண்டும். அதுவே என் விருப்பம்.
@ MANO நாஞ்சில் மனோ
Replyநன்றி அண்ணா !
@ நிரூபன்
Replyநன்றி சகோ. கடந்த பதிவிலும் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.
@ koodal bala
Replyநன்றி சகோ.
@ atchaya
Replyநன்றி சகோ.
@ ♠புதுவை சிவா♠
Replyபார்ப்போம் சகோ.
கருத்துக்கு நன்றி.
எளிதில் புரியும்படி விளக்குகிறீர்கள், தொடரட்டும் தங்கள் பணி!
Replythanks
Replyஎளிமையான தொடக்கம் தொடர்ந்து எழுதூங்கா
Replyநல்ல பகிர்வு. விளக்கம் எளிமையா இருக்கு
Reply@ நம்பிக்கைபாண்டியன்
Replyநன்றி சகோ.
@ shameem
Replyநன்றி.
@ கார்த்தி கேயனி
Replyநன்றி சகோ.
@ தமிழ்வாசி
Replyநன்றி சகோ.
குறைந்த செலவில் நிறைவான வெப்ஹோஸ்டிங் பெற ZHosting
ReplyPost a Comment