Youtube தளம் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. எந்த ஒரு வீடியோ வேண்டும் என்றாலும் இதில் கிடைக்கும் என்ற அளவுக்கு அவ்வளவு வீடியோக்கள் கொண்டுள்ளது. இது நாள் வரை நாம் வீடியோ Upload செய்தால் அதில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இப்போது உள்ள புதிய வசதி உங்கள் வீடியோ நல்ல Look உள்ளதாக மாற்ற உதவும்.
கடந்த முறை எழுதிய youtube ரகசியங்கள் பதிவில் வீடியோ பற்றி நிறைய தகவல் சொல்லி உள்ளேன். அடுத்த பதிவில் வீடியோ, ஆடியோ Editing Youtube இல் செய்வது எப்படி என்று சொல்லி இருந்தேன். இத்தோடு சேர்ந்துள்ள புதிய வசதிதான் நான் கூறப்போவது.
நீங்கள் உங்கள் வீடியோ Upload செய்து முடித்த உடன் உங்களது குறிப்பிட்ட வீடியோ பார்க்கும் இடத்துக்கு மேலே வீடியோ உங்களுடையது என்றால் படத்தில் உள்ளது போல Enhancements என்ற வசதி இருக்கும்.
இதில் பொதுவாக இருக்கும் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்.
Trim:(Old) அச்சச்சோ வீடியோ இரண்டு நிமிடம் அதிகம் சேர்த்து விட்டோமே கொஞ்சம் Cut செய்ய வேண்டுமே என்று நினைத்து இருந்தால் இது உங்களுக்கு தேவை. உங்கள் Video Start, End point களை இதில் மாற்ற முடியும். இதன் மூலம் ஆரம்பம் அல்லது முடிவில் தேவை இல்லாத பகுதிகளை நீக்கி விடலாம்.
கடந்த முறை Camera இல்லாமல் Computer Screen Record செய்வது எப்படி என்ற பதிவு எழுதிய போது அந்த Software சிறிது நேரம் உங்கள் வீடியோ வில் இருக்கும் அதை ஏதேனும் ஒரு வீடியோ எடிட்டர் பயன்படுத்தி நீக்கி விடலாம் என்று சொல்லி இருந்தேன். Video editor கூட தேவை இனி Youtube இல் Upload செய்து கூட நீங்கள் இதை செய்து விடலாம்.
Rotate: Trim க்கு நேரே வலது பக்கம் உள்ள வசதி இது. இதன் மூலம் உங்கள் வீடியோவை Right அல்லது Left ஆக Rotate செய்ய முடியும்.
Stabilize: இதன் மூலம் வீடியோவில் Shake இருந்தால் குறைக்க முடியும். ஆனால் இதை ஒரே கிளிக் மூலம் எப்படி இவர்கள் மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை.
Fine Tune Lighting and Color :
அம்புக் குறியில் உள்ள பட்டன் மீது கிளிக் செய்தால் வரும் நான்கு வசதிகள்.
Fine Tune Lighting and Color :
அம்புக் குறியில் உள்ள பட்டன் மீது கிளிக் செய்தால் வரும் நான்கு வசதிகள்.
Fill Light, Contrast, Saturation, Color Temperature, இதன் மூலம் உங்கள் வீடியோ Lighting , மற்றும் Color மாற்ற இயலும். இது உங்கள் வீடியோ ரொம்ப Dark என்று நீங்கள் நினைத்தால் எதாவது ஒன்றை முயற்சி செய்யலாம்.
Fill Light இதை பயன்படுத்தும் போது உங்கள் வீடியோ கொஞ்சம் பளிச் என்று இருக்கும்.அதாவது முகத்துக்கு கிரீம் பூசுவது போல.
Contrast: இது கிட்டத்தட்ட மேலே உள்ளது போலதான் என்ன ஒன்று இதில் லெவல் அதிகமாக வைத்தால் வீடியோ Black ஆகும், குறைத்தால் White ஆகும்.
Saturation இதுவும் நிறம் சம்பந்தப்பட்டதே இதை அதிகமாக்கினால் ஒரேடியாய் கலர் ஆக்கலாம் குறைத்தால் உங்கள் வீடியோ வை கருப்பு வெள்ளையாய் மாற்றலாம்.
Color Temperature இதில் basic கலர்கள் RGB யில் இருந்து RB மட்டும் தெளிவாக உள்ளது. அதாவது உங்கள் வீடியோவில் சிகப்பு மற்றும் நீல நிறத்தை கூட்ட இது உதவும்.
Auto Fix : மேலே சொன்ன நாளையும் ஒன்றாக செய்வதுதான் இதன் நோக்கம். ஆனால் இது அந்த அளவுக்கு Effect தராது என்றுதான் நான் சொல்வேன். சிறு மாற்றதுக்கு இதை முயற்சிக்கலாம். இதை நீங்கள் கிளிக் செய்தால் மேலே உள்ள நான்கும் Disable ஆகி விடும். மீண்டும் ஒரு முறை கிளிக் செய்து இதை Disable செய்து மற்றவற்றை பயன்படுத்தலாம்.
Fill Light இதை பயன்படுத்தும் போது உங்கள் வீடியோ கொஞ்சம் பளிச் என்று இருக்கும்.அதாவது முகத்துக்கு கிரீம் பூசுவது போல.
Contrast: இது கிட்டத்தட்ட மேலே உள்ளது போலதான் என்ன ஒன்று இதில் லெவல் அதிகமாக வைத்தால் வீடியோ Black ஆகும், குறைத்தால் White ஆகும்.
Auto Fix : மேலே சொன்ன நாளையும் ஒன்றாக செய்வதுதான் இதன் நோக்கம். ஆனால் இது அந்த அளவுக்கு Effect தராது என்றுதான் நான் சொல்வேன். சிறு மாற்றதுக்கு இதை முயற்சிக்கலாம். இதை நீங்கள் கிளிக் செய்தால் மேலே உள்ள நான்கும் Disable ஆகி விடும். மீண்டும் ஒரு முறை கிளிக் செய்து இதை Disable செய்து மற்றவற்றை பயன்படுத்தலாம்.
உங்கள் வீடியோவுக்கு Dramatic effect கொடுக்க இது உதவும். பெரும்பாலும் இது படங்களை பயன்படுத்தி Slide Show போன்ற வீடியோ உருவாக்கி இருந்தால் இது பயன்படும். மற்றவற்றுக்கு இது அவ்வளவாக பயன்படாது. கொஞ்சம் வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இதை முயற்சி செய்யலாம்.
Additional Features : இதை கிளிக் செய்து "Blur All Faces" என்பதை கொடுத்தால் வீடியோவில் இருக்கும் நபர்களின் முகங்கள் Blur ஆகி விடும்.
இதை எல்லாம் செஞ்ச அப்புறம் பிடிக்காட்டி என்ன பண்ண என்று கேக்குறீங்களா? ரொம்ப சுலபம். அப்புடியே Revert To Original என்ற ஒரு பட்டன் இருக்கும். ஒரே கிளிக் மறுபடி பழைய வீடியோ கிடைச்சுடும்.
இனி Youtube இல் வீடியோ எடிட் செய்து கலக்குங்கள்.
13 comments
அருமையான தகவல் நண்பா! ஈழத்தமிழர்கள் குறித்த உங்கள் டுவீட்டும் அருமை!
Replyதகவலுக்கு நன்றி பாஸ் ...
Replyரொம்ப பயனுள்ள பதிவு. தமிழ் மணம் 1
ReplyGood Post.Thanks
Replyபயனுள்ள புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி சகோ.!
Replyஅடடா...வீடியோ அப்லோட் செய்து, எடிற் பண்ணுவதற்கேற்ற அருமையான தகவல்.
Replyஇலங்கை தமிழர்கள் பணத்தால் போர் செய்யாமல், அரசியல் வாதிகளுக்கு லஞ்சமாக வெட்டி இருந்தால், தமிழ் ஈழம் கொடுத்து இருப்பார்கள்.
Reply_Thaaymanam@twitter.com//
ஆகா...சூப்பாராப் புரிஞ்சு வைச்சிருக்கிறாரே...இலங்கைத் தமிழர்கள் + அரசியல்வாதிகளைப் பற்றி.
அருமையான தொழில்நுட்பக் குறிப்பு..
Replyஆஹா YOUTUBE-லஇதெல்லாம் கூட வந்துட்டா
Replyபயனுள்ள புதிய தகவல்.
ReplyScreen Lock - இந்த மென்பொருள் என்னால் உருவாக்கப்பட்டது
This post has lot of info. I have learned something new today.. Thanks for the Post.. Keep it up prabhu..
Replyபயனுள்ள பகிர்வு. . .நன்றி சகா. . .
Replyநல்ல பயனுள்ள தகவல்.பகிர்வுக்கு நன்றி .
ReplyPost a Comment