நமது personal Folder களை மறைக்க நாம் ஏதேனும் சாப்ட்வேர் பயன்படுத்துவோம். அந்த சாப்ட்வேர் கிராஷ் ஆகிவிட்டால் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் உங்கள் Folder அம்போதான். அப்படி இல்லாமல் எளிதாய் இதை செய்ய ஒரு வழி கூறுகிறேன். இது மிக எளிது. ஏற்கனவே ஒரு வழிநான் கூறி இருந்தாலும் இது அதை விட எளிது.
கடந்த முறை எழுதிய Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி
பதிவில் சில Coding கள் இருந்தது ஆனால் இதில் அவை எதுவும் இல்லை.
முதலில் Start--->Run--->cmd
இப்போது command Prompt ஓபன் ஆகும். இதில் C:\Documents and Settings\content இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc )
இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது
Folder Name--> Your Folder Name.
இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது
D:/>attrib +h +s Folder Name
இப்போது உங்கள் Folder மறைந்து இருக்கும். அதை மீண்டும் தெரிய வைக்க
D:/>attrib -h -s Folder Name
Password எதுவும் நினைவில் கொள்ள தேவை இல்லை நீங்கள். attrib ±h, ±s. இதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதில் முக்கியமான விஷயம் C Drive இல் உள்ள folder களை மட்டும் இதில் மறைக்க இயலாது.
◘பலே ட்வீட் ◘
கற்க கசடற! கற்ற பின் அந்த புத்தகங்களை, வாங்கிய என்னிடமே மறக்காமல் திருப்பித்தருக!
இன்று நாகேஷின் பிறந்தநாள்! சிவனை மறந்தாலும் புலவர் தருமியை உலகம் மறக்க முடியாமல் இருக்க செய்த கலைஞன்!
23 comments
பதிவுக்கு நன்றி சகோ....
Replyதமிழ்மணம் யாரேனும் இணைக்கவும்.
Replyஉபயோமான ஒரு பதிவு. தமிழ் மணத்தில் இணைத்துவிட்டேன்.
Replyஹா ஹா ஹா ஹா பலே டுவீட் சூப்பர்....!!!
Replyமுயற்சித்தேன் ...வெற்றி வெற்றி.......நன்றி சகா. . .
Replyநச்சுனு இருக்கு நன்றி நண்பா
Replyஉபயோமான ஒரு பதிவு.நன்றி
Replyஇனிய இரவு வணக்கம் பாஸ்.
Replyஎனக்கு இந்த தகவல் ஏலவே தெரியும்,
ஆனாலும் நீங்கள் விளக்க பூர்வமாகப் பகிர்ந்த விதம் அருமை.
எங்களே மாதிரி அபாட்டகாருக்கு தேவையான பதிவு தான்
Replyஅருமையான பதிவு.
Replyபிளாக் author எவ்வாறு பதிவுகளை பிறருடைய தளத்தில் எழுதுவது என்பதை விளக்கும் ஒரு பதிவினைத் தந்தால் உதவியாக இருக்கும்.
பகிர்வுக்கு நன்றி நண்பா
Replyதேவையான தொழில்நுட்பம்
Replyதங்கள் வலையில் ரிலேடட் ஆர்டிகில்ஸ் பகுதியை எவ்வாறு இணைத்தீர்கள் நண்பா..???
Replyதங்கள் வலையில் ரிலேடட் ஆர்டிகில்ஸ் பகுதியை எவ்வாறு இணைத்தீர்கள் நண்பா..???
Replyநண்பா..
Replyவிருந்துக்கு வாங்க..
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_565.html
@முனைவர்.இரா.குணசீலன்
Replyஇங்கே பாருங்கள் சகோ.
New Related Posts Link Gadget For Blogger
உங்கள் பதிவுகளுக்கு Related Post Link
பகிர்வுக்கு நன்றி பிரபு..!!
Replyநல்ல பகிர்வு.. ஆனால் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில் நேரிடையாக டைப் செய்தால் மறைக்கப்பட்ட போல்டர் திறக்க முடியும். உதாரணமான abc போல்டரை மறைந்து விட்டு d:\abc என பாத் டைப் செய்தால் திறந்து விடுகிறது
Reply@ Anonymous
Replyஅப்படி திறக்க போல்டர் பெயர் தெரிந்திருக்க வேண்டும் நண்பரே.
இதை விட எளிமையான வழி ஒன்று இருக்கு மறைக்க..
Replyஅந்த Folder ஐ Right-Click செய்து Properties போங்க. அதில் உள்ள "Hidden" என்கிற Options ஐ கிளிக் செய்யுங்க..
அப்புறம், எக்ஸ்ப்லோரரில் உள்ள Tools--> Folder Options போய் "Hidden Files and Folders" கீழ் "Donot Show hidden files and folders" என்பதைத் தேர்ந்தெடுங்கள்!!
அவ்வளவு தான்..
செய்முறை விளக்கம்:
http://www.online-tech-tips.com/computer-tips/how-to-hide-files-and-folders-in-windows-xp-the-easy-way/
போல்டெர் லாக் சரியாக வொர்க் ஆகவில்லை
Reply@ sudha anand
ReplyD:/>attrib +h +s Folder Name
D:/>attrib -h -s Folder Name
இவற்றை சரியாக கொடுத்தல் அவசியம்.
அன்பின் பிரபு - அரிய தகவல் -பகிர்வினிற்கு நன்றி - நாங்களெல்லாம் அந்தக் காலத்து ஆளுங்க - டாஸ் கமாண்ட்ஸ் எல்லாம் பயன் படுத்திய ஆளுங்க - ஜியூஐ - விண்டோஸ் மவுஸ் எல்லாம வரதுக்கு முன்னாடியே டாஸில் கொடி கட்டிப் பறந்தவங்க. எட்டு இஞ்சு தோசைக் கல் மாதிரி ஃபிளாப்பி பயன் படுத்துனவங்க. ம்ம்ம்ம்ம் - இருந்தாலும் இக்கால கணினி மேதைகளுக்குத் தேவையான பதிவு. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyPost a Comment