Facebook தளம் என்பதுஇணையத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் ஒரு முக்கிய தளம். அதுவும் வலைப்பூ வைத்துள்ளநம்மைப் போன்றவர்கள் நிச்சயமாய் பயன்படுத்த வேண்டிய தளம். கடந்த மாதம் Google+ வந்த போது Facebook கொஞ்சம் ஆட ஆரம்பித்தது. அதனால் சில மாற்றங்களை அது இப்போது கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே நான் Facebook இதெல்லாம் இருக்கா என்று இரண்டு பதிவுகளை எழுதினேன் ஒன்று User Name அமைப்பது எப்படி?, மற்றொன்று தமிழில் Facebook பயன்படுத்துவது எப்படி என்பதும். இப்போது புதிய இரண்டு வசதிகளை காணலாம்.
Friend Lists:
இதன் மூலம் நாம் தேவையான நண்பர்களின் செய்திகளை மட்டும் படிக்க முடியும். இதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் நம் நண்பர்களை சரியான List க்குள் நாம் சேர்க்க வேண்டும். Facebook ஆனது Default ஆக சில லிஸ்ட் கொண்டு இருக்கும். உதாரணமாக எனக்கு பெங்களூர் என்று ஒரு லிஸ்ட் அமைத்து உள்ளது இதன் மூலம் நான் பெங்களூரில் உள்ள நண்பர்களின் Status மட்டும் தனியாக பார்க்க முடியும். இது போலவே மற்ற எல்லாம். இவற்றை மாற்ற நினைத்தால் Listபக்கம் சென்று மாற்றலாம்.
இதே போல குறிப்பிட்ட list நண்பர்களிடம் மட்டும் கூட நீங்கள் உங்கள் Status செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம்.
இதையெல்லாம் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கா ஆமா Google + கொண்டுள்ளது இதை எல்லாம்.
Subscribe Option :
இதுவரை நண்பர்களின் செய்திகளை மட்டுமே நாம் படித்து வந்தோம். ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர், நடிகைகள் போன்று நம் நண்பர்களாக இல்லாதவர் செய்திகளையும் இனி பெற முடியும். இதற்கு அவர்கள் subscribe என்பதை Activate செய்து இருக்க வேண்டும் அவ்வளவே. அவர்கள் Profile க்கு சென்று நீங்கள் subscribe செய்ய வேண்டும்.
நீங்கள் இதை activate செய்ய நினைத்தால் https://www.facebook.com/about/subscribe இங்கு செல்லவும்.
இன்னொரு விஷயம் ஏற்கனவே உங்களுக்கு நண்பர்களாக இருப்பவர்களுக்கு நீங்கள் subscribe செய்துள்ளதாக இருக்கும்.உங்களை யாரெல்லாம் subscribe செய்துள்ளார்கள் என்று உங்கள் Profile பக்கத்தில் உங்கள் போட்டோக்கு கீழ் உள்ள subscribers Button மூலம் அறியலாம்.
அவ்வளவுதான் நண்பர்களே. புதிய விஷயங்கள் எந்த அளவுக்கு பயன்படும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாட்டின் அணு உலைகள் பாதுகாப்பானதே! -ஜெயலலிதா #அப்போ தலைமைச் செயலகத்தை கல்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்யலாமே#Koodankulam
13 Reasons Why We Do Not Want the#Koodankulam Nuclear Power Project. http://www.kalpakkam.net/2011/09/thirteen-reasons-why-we-do-not-want.html
◘பலே ட்வீட் ◘
தமிழ்நாட்டின் அணு உலைகள் பாதுகாப்பானதே! -ஜெயலலிதா #அப்போ தலைமைச் செயலகத்தை கல்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்யலாமே
13 Reasons Why We Do Not Want the
Twitter , Facebook தளத்தில் உள்ள நண்பர்கள் கூடங்குளம் குறித்த செய்திகளை பகிரவும். நம் மக்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை. மேலும் அறிய #Koodankulam , மற்றும் ஆணிவேர் வலைப்பூ இங்கே செல்லவும்.
18 comments
Very useful informationVery useful information
Replyஎன் முக நூல் கணக்குச் செயலற்று இருக்கிறது.உங்கள் வழிகாட்டிதலில், செயலாக்கி விடுகிறேன்.
Replyநல்ல பதிவு.
Replyபலே பிரபு, பலே...
Replyஅருமையான பதிவு பிரபு சார்!
Replyபுது வசதிகள் அனைத்தும் கலக்கல் .......
Replyநானும் இன்று பார்த்தேன் பாஸ் நல்ல வசதி தகவலுக்கு நன்றி ...
Replygood post
ReplySuper info. Thanks
Replyபுதிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.!
Replyதமிழ்மணம் ஏழு..
:) :) :)
பலே பலே பிரபு சார்
Replyஇன்று கூடல் பாலாவின் வலையில்
வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்
பகிர்வுக்கு நன்றி தம்பி....
Replyகலக்கல்......
Replyபகிர்வுக்கு நன்றி
Replyவணக்கம் பாஸ்
Replyவார இறுதியில் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்தேன்.
அதான் வர முடியலை...
எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.
மன்னிக்க வேண்டும்!
வணக்கம் பாஸ்
Replyவார இறுதியில் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்தேன்.
அதான் வர முடியலை...
எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.
மன்னிக்க வேண்டும்!
பேஸ் புக்கில் உள்ள இதுவரை நாம் அறியாத அசத்தலான Subscription விடயங்களைத் தொகுத்தளித்தமைக்கு நன்றி பாஸ்..
Replyதமிழ்நாட்டின் அணு உலைகள் பாதுகாப்பானதே! -ஜெயலலிதா #அப்போ தலைமைச் செயலகத்தை கல்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்யலாமே #Koodankulam //
Replyஹி.....ஹி....
இது செம குத்து.
Post a Comment