Google Calendar என்பது இணையதள பயனர்கள் பலரும் அறிந்த ஒன்றுதான். இருந்தும் இது தெரியாதவர்களுக்கு.எப்படி ஒரு Event உருவாக்குவது, நம் போனுக்கு SMS அனுப்ப Google calendar ஐ எப்படி பயன்படுத்துவது என இதில் பார்ப்போம்.
முதலில் Google Calender பற்றி சிறு குறிப்பு:
Google calendar ஆண்டு 2006 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. பலவிதமான remainder பயன்பாடுகளுக்கு இது வாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது. SMS, இமெயில் என இரண்டிலும் உங்கள் முக்கியமான வேலைகளை நினைவு படுத்த இதை பயன்படுத்த முடியும்.
Google Calender Link: http://calendar.google.com/
இதில் நீங்கள் உங்கள் ஜிமெய்ல் கணக்கை பயன்படுத்தியே நுழைந்து கொள்ளலாம். அல்லது ஒரு Google account இருந்தாலே போதும்.
நீங்கள் புதியவராக இருந்தால் Welcome to Google Calendar என்ற பக்கத்தை முதலில் நிரப்பவும். இதில் நீங்கள் தற்போது இருக்கும் நாட்டினை குறிப்பிடவும். இப்போது calendar பகுதிக்கு நீங்கள் வந்து விடுவீர்கள். இதன் வலது மேல் மூலையில் calendar view தெரிவு செய்து கொள்ளவும்(Day,week,month,.. ).
இதில் சிவப்பு நிறத்தில் வட்டமிடப்பட்டுள்ள settings பகுதிக்கு செல்லவும். இதில்தான் உங்களுக்கு தேவையான செட்டிங்க்களை நீங்கள் உருவாக வேண்டும்.
இப்போது வரும் புதிய பகுதியில் "General" என்பதை தெரிவு செய்யவும். இதில் உங்களுக்கு ஏற்ற செட்டிங்களை மாற்றவும். முக்கியமாக நாடு, time zone போன்றவை. இதை இப்போது save செய்து விடவும்.
இப்போது இதே settings வழியாக "calendar" என்ற பகுதிக்கு வரவும். இதில் default ஆக உள்ளவற்றை மாற்ற விரும்பினால் மாற்றிக் கொள்ளவும். NOTIFICATIONS நேரம், காலம் கூட மாற்றிக் கொள்ளலாம்.
Share வசதி மூலம் உங்கள் calendar ஐ வேறு இமெயில் உடன் share செய்து கொள்ளலாம். அலுவலக பணிகளுக்கு இது உதவியாக இருக்கும்.
மேலும் இந்த பகுதியில் உள்ள Browse interesting calendars » என்பதன் மூலம் உங்களுக்கு தேவையான Holidays , Cricket match, என மேலும் பலவற்றை subscribe செய்து கொள்ளலாம். இதில் உங்களுக்கு விருப்பமானதை Subscribe செய்யும் போது அது உங்கள் Calendar இல் Add ஆகிவிடும்.
இப்போது அடுத்த பகுதியான "Mobile Setup" க்கு வரவும். இதில் உங்கள் நாடு, மொபைல் எண் கொடுத்து Verification code வாயிலாக உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளவும்.
"Labs" என்ற பகுதியில் உங்களுக்கு விருப்பமானதை Enable செய்து கொள்ளவும்.
இவற்றை save செய்த பின் main calendar பகுதிக்கு வரவும். இதில் ஏதாவது ஒரு தேதி மீது கிளிக் செய்தாலே Event/Task தோன்றுவதை காணலாம்.
Event பெயர் கொடுத்தவுடன் Create Event என்பதை கொடுத்து விடவும். பின்னர் Save ஆன Event பெயரை கிளிக் செய்து Edit Event Details கொடுக்கவும். இப்போது வரும் பகுதியில் event Details குறிப்பிடவும். இதில் Repeat என்பதை தெரிவு செய்து உங்களுக்கு ஏற்றார் போல இதே event ஐ மீண்டும் Repeat செய்து கொள்ளலாம்.
இப்போது கீழே Find Time என்ற இடத்தில் ஏதேனும் ஒரு நேர இடைவெளியை தெரிவு செய்யவும். (like 1 to 3 , 1.30 to 2.30 ). இது தேதி குறிப்பிட்டுள்ள இடத்தில் add ஆகிவிடும். இப்போது Save கொடுக்க வேண்டாம். மாறாக Event Details வரவும்.
இதில் Remainder என்ற இடத்தில் Remainder எதன் வழியாக பெற வேண்டும் என்பதை கொடுக்கவும். Email,Pop up,SMS இதில் ஏதேனும் ஒன்றை கொடுக்கவும். எந்த நேரம் என்பதை கூட இதில் கொடுக்கலாம்.குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு SMS, or Mail (நீங்கள் தெரிவு செய்தது) வந்து சேரும்.
இப்போது Save செய்து விடவும்.மாற்றி ஏதாவது கொடுத்து விட்டால் event மீது வைத்து ஒரு கிளிக் செய்து அந்த Event ஐ Delete செய்து விடலாம்.
அவ்வளவுதான் நண்பர்களே.உங்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும்.
◘பலே ட்வீட் ◘
ஒருவருசம் முன்னாடி செம்மொழியான தமிழ்மொழியாம்.! இப்ப கம்பிக்கு பின்னால கனிமொழியாம்.!!
_minimeens@twitter.com
நாளைக்கு எத்தனை மணிக்கு உலகம் அழியப்போகுது ? சாயங்காலம் ஒரு பார்ட்டி இருக்கு.
_njganesh@twitter.com
இது என்னோடது:
அடுத்தது என்ன ? கனிமொழி வீட்டில் ஆலோசனை # கருணாநிதி : நைட் எனக்கு 2 இட்லி போதும் வேற ஏதும் வேணாம்.
_baleprabu@twitter.com
♦பலே பத்து ♦
7 comments
கூகுள் காலண்டரில் இவ்வளவு விஷயங்களா? பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி... வாழ்த்துகள்...
Replyநன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்...
Replyஎன்ன மொழிங்க இது?
Replyமொதல்ல ஒரு மாதிரி வந்ததுங்க. இப்ப சரியாப்போச்சு.
Replyநல்ல தேடல் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் பிரபு
Replyதிருடபட்டுள்ள எனது பதிவு
Replyநண்பர்களே எனது கடந்த பதிவு, மற்றும் நண்பர் வந்தேமாதரம் சசி அவர்களின் ஒரு பதிவு கீழே உள்ள தளத்தில் அப்படியே copy, paste செய்யப்பட்டு உள்ளது.
உங்கள் மொபைல் போனுக்கு Mobile English to English Dictionary.
http://www.tamilkanani.com/?p=1953
Angry Birds Game-ல் அனைத்து லெவலையும் சுலபமாக Unlock செய்ய.
http://www.tamilkanani.com/?p=1939
இது போன்று வேறு ஏதாவது இருப்பின் எனக்கு தெரிவிக்கவும்.இது போன்றவர்களுக்கு ஆதரவும் தர வேண்டாம் என்பது என் கருத்து.
@குடந்தை அன்புமணி
Reply@கந்தசாமி
@DrPKandaswamyPhD
@மகாதேவன்-V.K
நன்றி....
Post a Comment