Facebook இதை இணையத்தில் அறியாதவர் யார்?. இன்று இதில் கொஞ்சம் உள்ளே புகுந்து பார்த்ததில் எனக்கு கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1.உங்களுக்கென தனியாக User Name
ரொம்ப நாளாக எழுத நினைத்த பதிவு இது. இது நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும் அதாவது நீங்கள் ஆரம்பத்தில் Facebook இல் Join செய்யும்போது உங்கள் profile Name ஆக ஒரு எண் கொடுக்கப்படும். இது 15 Digit கள் வரை இருக்கக் கூடும். இதனை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டுமா?
இதற்கு உங்கள் Account Settings செல்லவும். (Logout செய்யும் இடத்தில் இது இருக்கும். ) இதில் Settings இல் User Name என்ற இடத்தில் உங்கள் பெயர் கொடுக்கவும். அது available ஆக இருந்தால் உங்களுக்குUser Name கிடைத்து விடும் இல்லை என்றால், உங்களுக்கு ஏற்ற பெயரை வைத்துக் கொள்ளவும்.
உதாரணம்: நான் prabu எனக் கொடுத்த போது அது available ஆக இல்லை. அதனால் இப்போது baleprabu என வைத்து உள்ளேன். இதனால் என்னை Facebook இல் http://www.facebook.com/baleprabu என்று தேடினால் கிடைப்பேன். இதனால் உங்கள் நண்பர்களை User Name கொண்டு எளிதாக கண்டு பிடிக்கலாம். (படத்தில் User Name "baleprabu என்பதை கவனிக்கவும். இந்த இடத்தில் Change செய்து உங்கள் User Name ஐ மாற்றியும் கொள்ளலாம்.")
2. Facebook தமிழில்
நம்மில் பெரும்பாலானோர் Facebook ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறோம். நம்முடைய தாய் மொழியான தமிழிலேயே உள்ளது. மிக எளிதான தமிழில் உள்ளதால் பயபடுத்துவதும் எளிது. ஆங்கிலம் தெரியாதவர்கள் இதனை பயன்படுத்தலாம். இதற்கு
Account Settings--> Language--> Primary Language:--> தமிழ்
தெரிவு செய்த சிறிது நேரத்தில் நீங்கள் தமிழ் மொழிக்கு மாற்றப் படுவீர்கள்.
(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும். )
(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும். )
படத்தில் உள்ள வலது கீழில் உலக உருண்டை படத்தை(Chat பகுதிக்கு அருகில்) click செய்து உடனடியாக ஆங்கிலத்துக்கும் மாறிக் கொள்ளலாம். இது தமிழ் மொழியை நீங்கள் தெரிவு செய்த உடன் வந்து விடும். உங்கள் விருப்பமான வேறு மொழிக்கும் கூட இங்கிருந்தே மாறிக் கொள்ளலாம்.
3. Manage your Notifications
நீங்கள் Facebook இல் உங்கள் நண்பர்கள் உடன் இணைந்த பிறகு உங்களுக்கு நீங்கள் சார்ந்துள்ள விஷயங்களில் இமெயில் வர ஆரம்பிக்கும் இதனை தவிர்க்க இதே பகுதியில் உள்ள Notification என்ற பகுதியில் தேவையில்லாதவற்றை Uncheck செய்து விடுங்கள். (அதிக நேரம் Facebook பயன்படுத்தும் நபர் என்றால் பெரும்பாலும் 90 % uncheck செய்வது நலம்.).
4. உங்கள் செல்போனில் SMS Notification பெற்றிடுங்கள்
இதற்கு இதே பக்கத்தில் உள்ள Mobile என்ற Tab வழியே செல்லவும். இதில் உங்கள் Mobile Number கொடுத்து SMS பெறலாம். இதற்கு உங்கள் Network பொறுத்து முதல் முறையும் மற்றும் அதன் பின் நீங்கள் அனுப்பும் SMS க்கும் பணம் பெறப்படும். ஆனால் நீங்கள் Receive செய்வதற்கு எந்த Amount ம் பெறப்படாது.
இன்றைய தகவல் நிறைய பேருக்கு தெரிந்து இருக்கலாம். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள உதவி செய்யுங்கள்.
தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். உங்கள் சந்தேகங்களை கேட்கவும்.
இன்றைய தகவல் நிறைய பேருக்கு தெரிந்து இருக்கலாம். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள உதவி செய்யுங்கள்.
தவறுகளை சுட்டிக் காட்டுங்கள். உங்கள் சந்தேகங்களை கேட்கவும்.
9 comments
Wow, interesting post, thanks for sharing with us. I do't have tamil font in my mobile. Sorry sako.
Replyமனைவிக்கும், சின்னவீடுக்கும் ஒரே மாதுரி புடவை எடுக்குரானே அவன்தான் உண்மையான நடுநிலைவாதி..
Reply_antojeyas@twitter.com
It's so funny. Lol
அப்படியா....
Replyநானும் தெரிந்துக் கொன்டேன்...
அருமை. நன்றி. என் முகநூல் இனி தமிழில்.
Replyரெம்ப நன்றிங்க... அது சரி ரெண்டு வீடும் இல்லாதவன் என்ன பண்றது...
Replyஅன்பின் பிரபு - தமிழிற்கு மாறி விட்டேன் - நன்Kஉ இயங்குகிறது - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
Reply@நிரூபன்
Reply@# கவிதை வீதி # சௌந்தர்
@bigilu
@♔ம.தி.சுதா♔
@cheena (சீனா)
அனைவருக்கும் நன்றி.
நன்றி
Replyநல்ல செய்தி பயன்படுத்துகிறேன்
ReplyPost a Comment