Facbook இதெல்லாம் கூட இருக்கா -2 | கற்போம்

Facbook இதெல்லாம் கூட இருக்கா -2

Facebook பற்றி நான் என்னுடைய கடந்த பதிவில் எழுதி இருந்தேன். அது பலருக்கு புதியதாகவும், சிலருக்கு ஏற்கனவே  தெரிந்த ஒன்றாகவும் இருக்கக் கூடும். இன்றும் அதே போல ஒரு பதிவு . Facebook இல் பயனுள்ள இரண்டு விஷயங்கள் இன்று பகிர்ந்து கொள்கிறேன். படித்து விட்டு கருத்து சொல்லுங்கள். 

என்னுடைய முந்தைய பதிவை படிக்க:


1. Facebook இல் உங்கள் வலைப்பூ பக்கத்துக்கு  (Page) user Name பெறுவது எப்படி? 

நீங்கள் Facebook பயனாளியாக இருந்து ஒரு page உருவாக்கி இருந்தால் இது உங்களூக்கு பயனுள்ள ஒன்று. Page இல்லாதவர்கள் "வந்தேமாதரம்" சசிகுமார் அவர்களின் இந்த பதிவை படிக்கவும்.  


இப்போது ஏற்கனவே Page வைத்து உள்ளவர்கள் இதை கவனிக்கவும் , உங்கள் பக்கத்தை குறைந்த பட்சம் 25 நபர்கள் Like செய்து இருந்தால் நீங்கள் User Name உருவாக்க முடியும்.  


இதற்கு Facebook இல் உங்கள் Page க்கு செல்லவும். அதில் Get Started என்பதற்க்கு கீழ் Edit info என்பதைக் காணவும். அதில் இரண்டாவது Option ஆக User Name என்பது இருக்கும். அதை click செய்து வரும்  window மூலமாக உங்கள் Page க்கு user Name கொடுத்து பின்னர் Confirm செய்யவும்.

இதில் முக்கியமான ஒன்று ஒரு முறை நீங்கள் User Name கொடுத்து விட்டால் அதை எப்போதும் மாற்ற முடியாது. எனவே ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துவிட்டு கொடுக்கவும்.

என்னுடைய வலைப்பூ உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்களும் இங்கே  Like செய்யுங்கள்.





2. Facebook- முகப்புத்தகம் ஆக்குவோம்.

நான் கடந்த பதிவில் Facebook ஐ எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று சொல்லி இருந்தேன். அத்துடன் Facebookஐ தமிழ்ப்படுத்துவதில் நமது உதவியை Facebook எதிர் நோக்கி உள்ளது. நம்மால் முடிந்தவரை  Facebook ஐ தமிழில் Translate செய்ய வேண்டும்.

நீங்கள் உங்கள் Account ஐ தமிழுக்கு மாற்றி விட்டாலே இந்த  வேலையை நீங்கள் செய்ய இயலும். அதே சமயம் பின்னர் உங்கள் அக்கவுண்ட் ஆங்கிலத்துக்கு மாறினால் கூட இதை செய்ய இயலும். இருப்பினும் தமிழுக்கு மாறிவிட்டு பின்னர் இந்த Link க்கு வரவும் http://www.facebook.com/translations/index.php. 

(எப்படி தமிழுக்கு மாறுவது என்பதை மேலே உள்ள என்னுடைய கடந்த பதிவின் மூலம் அறியலாம்.)

இதில் நீங்கள் உங்களால் முடிந்த அளவு Translate செய்யலாம். நானும் இதில் ஒரு Translator ஆக உள்ளேன்.

(படத்தை பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும். )




இதில் Translate என்ற பகுதிக்கு சென்று உங்களால் முடிந்த அளவு Translate செய்யுங்கள், ஏற்கனவே Translate செய்தவறறுக்கு Vote செய்ய முடிந்தால் Vote, Review பகுதிக்கு சென்று வாக்களிக்கவும்.மற்றவர்கள் மொழிபெயர்த்து உள்ளது தவறாக இருந்தால் அதே இடத்தில் நீங்களும் Translate செய்யலாம். 

உங்கள் நண்பர்களை Translate செய்ய அழைக்க Invite Friends செல்லவும். ஒரு நேரத்தில் 16 பேரை Invite செய்ய முடியும். ஏற்கனவே Translate செய்தவர்களை காண LeaderBoard செல்லவும்.  Preference என்ற பகுதியில் Translations App Language தமிழ் ஆக மாற்றியும் Translate,Vote செய்யலாம்.

Facebook நமது அரட்டைகளுக்கு மட்டுமல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறது. நாமும் அதற்கு ஆதரவுக்கரம் கொடுத்து நம்முடைய தாய்மொழியில் பேஸ்புக்கை உருவாக்குவோம். 

உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும். குறைகளை சுட்டிக் காட்டவும். 

7 comments

தம்பி அசத்தல்....!!!!

Reply

சரியான அசத்தல் பதிவு...
நன்றி நண்பரே..

Reply

தம்பி அசத்தல்

Reply

பேஸ் புக், பற்றிய பயனுள்ள விடயங்களைப் பகிர்ந்தமைக்காக நன்றிகள் சகோ.

Reply

நீங்கள் குறட்டை விடுவதை உங்களால் உணர முடிகிறதென்றால் நீங்கள் இன்னும் தூங்கவில்லை என்று பொருள்!
_selvu@twitter.com//

ஐயோ, கொன்னூட்டீங்களே....

நல்லாத் தான் யோசிக்கிறாங்க சகோ.

Reply

பேராசைப்படுவதிலேயே மோசமான பகுதி எதுவென்றால் நாம் பேராசைப் படுகிறோம் என்று நமக்கு தெரிந்தும் அதை நம்மால் நிறுத்த முடியாததுதான்.!//

தத்துவம் அசத்தல் சகோ.

Reply

how to add particular label feed only in google reader

https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US

please forward this to others...d..

Reply

Post a Comment