4G என்பது இந்தியாவில் வரப்போகும் Mobile Telecommunication standard ஆகும். சில நாடுகளில் வந்தும் விட்டது. எவ்வளவோ உள்ளன அதைப் பற்றி தெரிந்து கொள்ள. எனக்கு தெரிந்த அளவு தங்களுக்கு இந்த பதிவில் பகிர்ந்து உள்ளேன்.
அதற்கு முன் நான் எழுதிய முந்தைய பதிவான 3G பற்றி தெரிந்து கொள்ளலாம் என்ற பதிவை படித்து விட்டு வரவும். அத்துடன் 4ஜி பற்றி என்னை எழுதத் தூண்டியவர் hajasreen.
சரி 4G என்றால் என்ன?
4G என்பது 3G ஸ்டாண்டர்டின் அடுத்த தலைமுறை ஆகும். இது LTE (Long term evolution) of 3G எனவும் சொல்லலாம். அதாவது 3G யின் கடைசி தான் 4G யின் ஆரம்பம். இது வாய்ஸ், டேட்டா,வீடியோ தரவிறக்கம, மொபைல் டிவி போன்றவற்றை பயனர்களுக்கு "Anytime Anywhere"என்ற அடிப்படையில் தரும்.
இந்த 4G ஆனது நிற்கும் மட்டும் மெதுவாக நகரும் பயனாளிகளுக்கு 1ஜிபி அளவிலான ஸ்பீட் டேட்டா ரேட் தரும். அதே நேரம் கார் மற்றும் ரயில் போன்றவற்றில் உள்ள வேகமாக நகர்பவர்களுக்கு 100எம்பி வேகம்(4G standard பொறுத்து இது கூடும் அல்லது குறையும்).
நீங்கள் 3ஜி யில் இருப்பதற்க்கும் 4ஜி யில் இருப்பதற்க்கும் உள்ள வித்தியாசம் கீழே படத்தில் காணலாம்.
2002 ஆம் ஆண்டு 4ஜி க்கான திட்டங்களை ITU-T கூறியது. 2005 ஆம் ஆண்டு தென் கொரியா WiMax தொழில்நுட்பம் உடன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதை தொடர்ந்து மற்ற சில நாடுகளும் இந்த சேவையினை தரத்தொடங்கின. 3G போலவே இது ஒயர்லெஸ் மோடம் ஆகவும் பயன்படுகிறது.
இதுவும் 3ஜி போலவே
---> வீடியோ காலிங்
---> மொபைல் டிவி
---> மிக வேகமான டேட்டா சர்வீஸ்
---> மிக அதிகமான ஏரியா கவரேஜ்
---> ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சர்வீஸ்
---> வீடியோ கான்பரன்சிங்
போன்றவற்றை தரும்.
மிக அற்புதமான பயன் என்றால் நீங்கள் 4ஜி மொபைல் சிஸ்டத்தை வேறு எந்த மொபைல் ஸ்டாண்டர்டிலும் பயன்படுத்தலாம்.அதாவது 3G, 2G போன்றவற்றில்.
அத்துடன் இது இணைய பயன்பாடுகளுக்கு ipv6 முறையை கையாளும்.(நாம் பயன்படுத்துவது ipv4) இதனால் மிக அதிக எண்ணிக்கையிலான wireless சர்வீஸ்கள் பயன்படுத்த முடியும்.
இது மிக அதிக திறன் வாய்ந்த அட்வான்ஸ்டு ஆன்டெனாக்களை பயன்படுத்துகிறது. இதனால் சிக்னல் கவரேஜ் ஆனது மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கும். இது முழுவதுமாக IP based Integrated Network. இதில் செய்திகள் மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும்.
4ஜியிலும் பல வகையான சேவை முறைகள் உள்ளன. இதில் WiMax (சில இடங்களில் WiFi ) ஆனது மொபைல் இன்டெர்நெட் சேவைக்கும் LTE ஆனது பொதுவான 4ஜி பயன்பாடுகளுக்கும் பயன்படுகிறது. இவை அனைத்துக்கும் 4G ஆனது 3ஜி UMTS களையே பயன்படுத்துகிறது.
நோக்கியா சீமென்ஸ் ஆனது 2006 இல் 4ஜி யில் டவுன்லிங்கில்(Antenna to Mobile) இரண்டு பயனர்கள் HD-TV வீடியோ ஸ்ட்ரீமிங்கும் மற்றும் அப்லிங்கில் (Mobile to Antenna) Online Gaming போன்றவற்றை செய்தும் காட்டியது. இதன் பின்னர் எரிக்சன், மோட்டரோலா, எல்ஜி போன்றவை இதன் மேம்பட்ட பயன்பாடுகளை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை அறிமுகம் செய்தன.
4Gயில் மிகக் குறைவான cost இல் டேட்டா சர்வீஸ்களை பயன்படுத்த முடியும். ஆனால் இது இந்த சர்வீஸ் தருகின்ற ஆபரேட்டர் பொறுத்தது.
நான் உங்களுக்கு எளிதாக புரியும் விதத்தில் எளிதாக கொடுத்து உள்ளேன்.தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும். சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும். மேலும் இது குறித்த பல தொழில்நுட்ப தகவல்கள் விக்கிபீடியாவில் கிடைக்கும். கீழே அவற்றின் லிங்க் தந்து உள்ளேன்.
தகவல்கள் திரட்ட நான் தேடியது:
◘பலே ட்வீட்◘
பிரபலங்கள் தோற்கும் போது மட்டும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோளாறாகும் அதிசயம் இங்கு மட்டுமே நிகழும்.
_vedhalam@twitter.com
அரசியலில் மட்டுமே கருணாநிதிக்கு ஓய்வு: கி.வீரமணி, #நாராயணா ..இந்தக் கொசு தொல்லை தாங்க முடியலைடா !
_iyyanars@twitter.com
♦பலே பத்து♦
10 comments
மிக்க நன்றி அண்ணா.... வார்த்தைக்கு மதிப்பளித்து தெளிவுரை தந்ததற்கு..
Reply4G பற்றிய, தங்களின் அலசல் மூலம் அறியாத பல விடயங்களை அறிந்து கொண்டேன் சகோ.
Replyநல்ல தகவல்கள் பிரபு. நம்ம நாட்டில் வர பல ஆண்டுகள் ஆகும். இப்பதான் இதுக்கு முந்திய தொழில்நுட்பம் வந்து இருக்கு பார்ப்போம்
ReplyGOOD ONE.. Also you can avoid some wrong data put in to that... like the architecture..etc..
Replyமிக நல்ல தகவல்களின் தொகுப்பு உங்கள் பதிவு.
Replyமுதலில் நான் 3ஜிக்கு மாற வேண்டும்.
உங்களுடைய ட்விட்டுகள் மிக அருமையாக இருக்கிறது. அதிகம் ரசித்தேன் பிரபு.
Reply1,76,0000000000 vida neraya kidaikkuma?
Reply//Anonymous said...
ReplyGOOD ONE.. Also you can avoid some wrong data put in to that... like the architecture..etc..//
என் தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டலாம். அடுத்த முறை தவறில்லாமல் எழுத அது உதவும்.
//பாரத்... பாரதி... said...
Replyஉங்களுடைய ட்விட்டுகள் மிக அருமையாக இருக்கிறது. அதிகம் ரசித்தேன் பிரபு.//
மிக்க நன்றி நண்பரே....
//நம்ம நாட்டில் வர பல ஆண்டுகள் ஆகும். //
Replyஎன்னது இந்தியா ல இன்னும் இதெல்லாம் வரலையா ? லங்கா ல எப்பவோ 3G 3.5G ரெண்டும் வந்துடு இப்ப ஒரு வீக் முன்னாடி தான்
3.75G 4G வந்துச்சு. சும்மா சொல்ல கூடாது 3G எ செம ஸ்பீடு இதுல 4g வேற அடி பின்னுது
Post a Comment