3ஜி , 3ஜி இன்று எந்த TV சேனல் திருப்பினாலும் ஏதேதோ விளம்பரம்ல சொல்லுறாங்களே அப்படின்னு நிறைய பேர் நினைக்கலாம். இப்போ இருக்கும் 2ஜி க்கும், புது ரிலீஸ் ஆன 3ஜி க்கும் என்ன வித்தியாசம் அப்புறம் ஏன் நாம் 3ஜி க்கு மாறணும் பாக்கலாம் வாங்க.
சரி இப்போ ஏன் நாம 3ஜி போறோம்னா நாம இப்போ பயன்படுத்துற 2ஜி ல நமக்கு சில குறைகள் இருக்கு அதாவது உங்களுக்கு அருகில் டவர் இல்லை என்றால் சிக்னல் ப்ராப்ளம் ஆவதுதான்,வாய்ஸ் கிளாரிட்டி,டேட்டா ரேட் போன்றவை கூட.
சரி 3ஜில என்ன இருக்கு?
---> வீடியோ காலிங்
---> மொபைல் டிவி
---> மிக வேகமான டேட்டா சர்வீஸ்
---> மிக அதிகமான ஏரியா கவரேஜ்
---> ஒரே நேரத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டா சர்வீஸ்
---> வீடியோ கான்பரன்சிங்
இன்னும் நிறைய இருப்பினும் அவை அனைத்தும் டெக்னிகல் தொடர்பானவை. அவற்றுக்கும் கீழே லிங்க் தருகிறேன் அதில் பார்க்கவும்
2ஜி ஐ நாம் GSM(Global System for Mobile Communication ) என்பது போல 3ஜி ஐ IMT2000 என குறிப்பிடலாம். 2000 என்பது அதன் frequency. இதிலும் நிறைய வகைகள் உள்ளன.
3ஜி ஆனது உலகில் முதன் முதலாக 2001 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டில் இது டொகோமோ நிறுவனத்தால் அறிமுகபடுத்தப்பட்டது. பின்னர் பல நாடுகள் இதை பயன்படுத்த தொடங்கின. நம் இந்தியாவுக்கு இது 2008 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் BSNL (MTNL). தனியார் நிறுவனம் டொகோமோ 5/11/2010 அன்று 3ஜி சேவை தர ஆரம்பித்தது. இந்தியாவில் 67,718.95 கோடி ரூபாய்க்கு 3ஜி சேவையை அனைத்து நிறுவனங்களும் பெற்று உள்ளன. எந்த நிறுவனம் எவ்வளவு என்று அறிய கிளிக் செய்யவும்
இதன் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் இதன் வேகமான டேட்டா ரேட் தான். அதாவது, நிற்கும் அல்லது நடக்கும் நபர்களுக்கு 2 MBPS, வாகனங்களில் செல்பவர்களுக்கு 384 Kbps. இது எல்லா இடங்களிலும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது. இன்னொன்று இதன் செக்யூரிட்டி.
2ஜி யில் மொபைல் மூலம் பிரவுசிங் செய்யும் போது போன் கால் வந்தால் இணைய இணைப்பு கட் ஆகிவிடும். ஏதாவது Download கொடுத்து இருந்தால் அது Failed ஆகி இருக்கும். ஆனால் 3ஜி யில் இரண்டும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். இதில் GPRS சேவைக்கு EGPRS, EEGPRS போன்ற பல முறைகள் உள்ளன.
இப்போது நாம் பயன்படுத்தும் போன்கள் மூலமாக 3ஜி சேவைகளை பெற முடியாது என்பது இதன் குறையாக இருப்பினும் அடிக்கடி போன் மாற்றுவதால் அடுத்த முறை போன் வாங்கினால் 3ஜி சேவை உள்ளதா எனக் கேட்டு வாங்கவும். சாம்சங், நோக்கியாவில் குறைந்த விலைக்கே 3G போன்கள் கிடைக்கின்றன. அதிலும் முன் காமிரா இருந்தால் மட்டுமே வீடியோ கால் பெற முடியும். (நோக்கியா 2730வில் இது இல்லை) 3ஜி சேவை MODEM பயன்பாடுகளுக்கும் நம் நாட்டில் கிடைப்பது ஒரு நல்ல விஷயம்.
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ஒரே 10எம்பி பாடலை நீங்கள் டவுண்லோட் செய்யமுடியும். ஐடியா வில் அபிஷேக் பச்சன் சொல்வது போல இனி பேஸ்புக் பார்க்க loading..... , loading..... என்று நாமும் ஒப்பிக்க தேவை இல்லை.
எல்லாம் சரி இது எல்லார்க்கும் இப்போ கிடைக்கல, தமிழகத்தில் சென்னை, கோவையில் மட்டும் இந்த வசதி கிடைக்கும் (8/05/2011 அன்று).
இந்தியாவில் ஏர்டெல்,வோடாபோன், ரிலையன்ஸ், டாடா, ஏர்செல், ஐடியா, எஸ் டெல் போன்ற நிறுவனங்கள் 3ஜி சேவை தருகின்றன. எல்லா நிறுவனங்களும் எல்லா இடத்திலும் தருவது இல்லை. தமிழகத்துக்கான உரிமை இப்போது (8/05/2011 ) ஏர்டெல்,வோடாபோன், ஏர்செல் போன்றவை பெற்று உள்ளன . வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் அந்த மாநிலத்தில் எந்த நிறுவனம் தருகிறது என்பது பார்த்து மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலம் மாறிக்கொள்ளவும்.
தகவல்கள் திரட்ட நான் தேடியது:
1. 3G
2. 2G
3.3G Spectrum auction India - 3ஜி உரிமம் பெற்ற நிறுவனம் ,மாநிலம்
4. 3ஜி
5. 2ஜி
இன்னொரு விஷயம் நம் 2G அலைக்கற்றை ஊழலையும் விக்கிபீடியா தனி பக்கத்தில் போட்டு இருப்பதுதான்.
6. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு
இந்த பதிவை படித்தவர்கள் பெரும்பாலானோர் முன்னரே 3ஜி பற்றி தெரிந்து இருக்க கூடும்.தெரியாதவர்கள் மேலும் ஏதாவது கேட்க விரும்பினாலும் கீழே கமெண்ட்டில் கேளுங்கள்.
◘பலே ட்வீட் ◘
ஃபேஸ்புக் நிரம்ப அம்மா பாடல்கள், இதில் எத்தனை பேர் இன்று தம் தாயோடு மனம் விட்டுப் பேசினார்களோ
_kanapraba@twitter.com
போற போக்க பாத்தா,வெறும் போஸ்டர மட்டும் திரைல ஒட்டிட்டு,"வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும்”னு விளம்பரம் செய்வாங்கபோல டிவில #sunpics
_kolaaru@twitter.com
♦பலே பத்து♦
4 comments
3g ஓகே இப்ப லங்கா ல (TODAY 8 -5 -2011 ) 4G அறிமுகபடுத்தி உள்ளங்க அத பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்
Reply@ hajasreen
Replyகூடிய விரைவில் 4ஜி பற்றி எழுதுகிறேன்.
//கூடிய விரைவில் 4ஜி பற்றி எழுதுகிறேன்//
Replyஇதுக்காக காத்திருப்பேன்
When 3G service will be available in other cities???
ReplyIs it possible that "3G will be available in all the places"???
Post a Comment