Google நாம் அதிகமாக பயன்படுத்தும் தேடுதல் இயந்திரம். இதில் நாம் தேடும்போது நமக்கு தேவை இல்லாத பல விசயங்களும் வர வாய்ப்பு உள்ளது. இதை தவிர்த்து எப்படி நமக்கு தேவையானதை மட்டும் தேடுவது எப்படி என பார்ப்போம் வாருங்கள்.
1.Use Of '+' sign:
இந்த + Sign ஐ பயன்படுத்துவதால் நாம் ஒரு சொற்றொடரை தரும்போது அதில் எந்த வார்த்தைக்கு முன் + ஐ தருகிறீர்களோ அது கண்டிப்பாக உங்கள் தேடுதலில் கிடைக்கும்.
உதாரணம்: Reviews of +DELL and ACER
இதில் உங்களுக்கு ரிசல்ட் Reviews அல்லது ACER உள்ளதோ இல்லையோ கண்டிப்பாக DELL இடம்பெறும்.
2. Use Of '-' sign:
இது மேலே உள்ள +signக்கு எதிரான வேலையை செய்யும். அதாவது - sign உள்ள வார்த்தை உங்கள் தேடலில் இடம்பெறாது.
3. Use Of '~' sign:
இந்த sign ஐ ஒரு வார்த்தைக்கு முன் சேர்த்தால் அதன் இணை பொருட்சொல்லையும்(synonyms) தரும்.
4. Search a particular site:
ஒரு குறிப்பிட்ட தளத்தில் இருந்து தகவலை தேட விரும்பினால் இந்த முறையை பயன்படுத்தலாம்.
Search: site:www.xyz.com abc
உதாரணம்: site:baleprabu.blogspot.com/ computer tricks
5. Define a word:
ஒரு சொல்லின் பொருள்(Definition) அறிய இந்த முறையை பயன்படுத்தவும்.
Search: define:abc
உதாரணம் : Search: define:Computer
6. Search for exact phrase:
ஒரு சொற்றொடரை தேட இது உதவும்.
Search: "contact us"
7. Using the wild card '*':
இது ஒரு சொல்லின் முழுதான வார்த்தை தெரியவில்லை என்றால் பயன்படுத்தவும்.
Search: friend*
இப்போது உங்களுக்கு friend, friends, friendship போன்ற வார்த்தைகளை தேடிதாரும்.
8. Using the '?' sign:
ஒரு வார்த்தைக்கு முழு spelling தெரியாத போது பயன்படுத்தலாம்.
Search: :fri??d
இப்போது உங்களுக்கு மேலே உள்ள spelling உடன் தொடர்பு உடைய வார்த்தைகளை காட்டும்.
9. Use of boolean operators :
AND,OR,NOT இவைதான் boolean operators. இவற்றை இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் சேர்ப்பதால் அந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஒரு link இல் தரும்.
உதாரணம் :
Search: swim OR float
இங்கு AND,OR,NOT போன்றவற்றை Capital letter ஆக மட்டுமே கொடுக்க வேண்டும்.
5 comments
மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே...
Replyபகிர்வுக்கு நன்றுகள்..
பயனுள்ள பதிவு
Replyநன்றி சகோதரம்
அறிய தந்தமைக்கு நன்றி
Reply:)..thanks
Replyகனினி நுட்ப பதிவுகளுக்கு தனி வலைப்பூ உருவாக்கி டாப் டென்னில் இடம் பெறலாமே
ReplyPost a Comment