ஹாக் செய்யப்பட கூகுள் அக்கௌன்ட் ஐ மீட்பது/மீட்டது எப்படி?? | கற்போம்

ஹாக் செய்யப்பட கூகுள் அக்கௌன்ட் ஐ மீட்பது/மீட்டது எப்படி??

வணக்கம் நண்பர்களே புது இடுகை போட்டு ஒரு வாரம் ஆக போகுது. என்ன பண்றது நான் ரொம்ப பிரபலம் ஆனதுனால(??) என் கூகுள் அக்கௌண்ட யாரோ ஹாக் பண்ணிட்டாங்க. ரொம்ப முயற்சி பண்ணி திரும்ப கொண்டு வந்து இருக்கேன்.





இந்த இடுகை அத பத்தி தான். உங்கள் கூகுள் அக்கௌண்ட எப்படி பாதுகாப்பா வச்சுக்கிறது நான் சொல்ல போறேன்.


முதலாவதா நீங்க உங்க கம்ப்யூட்டர் ல வைரஸ் இருக்கான்னு ஸ்கேன் பண்ணுங்க. நல்ல ஆண்டி வைரஸ் மட்டும் பத்தாது அத அடிக்கடி அப்டேட் பண்ணனும். பெரும்பாலும் உங்கள் அக்கௌன்ட் இதனால் தான் ஹாக் செய்யப்படும். அப்படி ஹாக் பண்ணிட்ட வர பிரச்சினைகளை எப்படி சமாளித்து நமது அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது??.


முதலாவதா கூகுள் ஹோம் பேஜில்  இருந்து உங்கள் அக்கௌன்ட்க்கு sign in ஆகுங்க இப்போ அக்கௌன்ட் செட்டிங்க்ஸ்ல நீங்க இருக்கணும்.


இதுல "Personal Settings " ல "Change password recovery options" இந்த பக்கத்துக்கு போங்க. இப்போ recovery email address ல உள்ள email id இப்போ நீங்க உபயோகிக்கிற உங்களோட இரண்டாவது அக்கௌன்ட் ஐ அதில் கொடுத்துடுங்க.


எப்போதும் பயன்படுத்துகிற உங்கள் மொபைல் நம்பர் மூலமாகவும் நீங்கள் உங்கள் recovery option ஐ செட் செய்ய முடியும். ஆனா முக்கியமான ஒன்று அந்த எண்ணை நீங்கள் எப்போதும் மாத்தவே கூடாது.


அடுத்தது security question , நீங்கள் ரொம்ப நாள் முன்னாடி உங்கள் அக்கௌன்ட் உருவாக்கி இருந்தால் இந்த கேள்வி அதில் இருந்திருக்காது(எனக்கும் இல்லை.)அந்த option ஐ நீங்கள் இப்போது உருவாக்கி கொள்ளுங்கள். இதில் நீங்கள் உங்களது சொந்த கேள்வியை கேட்டும் பதில் செட் செய்து கொள்ளலாம். எப்போதும் இதை மறந்து விட கூடாது.


இப்போது முடிந்து விட்டதா என்றால், இல்லை. ஏன் என்றால், இதை எல்லாம் உங்கள் அக்கௌன்ட் ஐ ஹாக் செய்பவன் மாற்றி விட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் மாற்றி விட்டால் பின்னர் எப்படி அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது ?


இதற்கு ஒரு form fill up செய்து கூகுள்க்கு அனுப்ப வேண்டும். அதில் நீங்கள் கூறியது எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் அக்கௌன்ட் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்??


உங்கள் account க்குள் நீங்கள் நுழைய முடியவில்லை என்றால் உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.


1 . revovery ஈமெயில் அட்ரஸ் மூலம் உங்கள் அக்கௌன்ட் ஐ திரும்ப பெறலாம்.

2 . security question மூலம் பெறலாம்.

3 . account recovery form fill up செய்து பெறலாம்.


இதில் முதல் இரண்டு வாய்ப்புகளில் உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மூன்றாவது வழியை பயன்படுத்த வேண்டும். அந்த form கீழே உள்ளது.



இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நாம் சரியாக தரும் பட்சத்தில் நாம் நம் அக்கௌன்ட் ஐ திரும்ப பெற முடியும்(நான் இதன் மூலம் தான் பெற்றேன்).வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பது சிறந்தது இல்லையா. எனவே நான் கூறப் போகும் விவரங்களை நீங்கள் முதலில் தயார் செய்து பாதுகாத்துக் கொள்ளவும்.

அதற்கான லிங்க்:  account recovery form


• உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் ஆரம்பித்த தேதியை நீங்கள் உங்கள் ஜிமெயில் இன் முதல் மெயிலில் சென்று குறித்து கொள்ளுங்கள்.

• இந்த gmail id மூலம் நீங்கள் பயன்படுத்திய google product களை பயன்படுத்த ஆரம்பித்த தேதி.

• இதுவரை கவனிக்க தவறினாலும் இனி குறித்து கொள்ளவும்

• உங்கள் வலைப்பூ முகவரி

• உங்கள் orkut profile முகவரி

• கடைசியாக வைத்திருந்த password .

• நீங்கள் அடிக்கடி(frequent ) தொடர்பு கொள்ளும் mail id க்கள்

• உங்கள் நான்கு label களின் name .


இந்த பதிவை நீங்கள் copy செய்து கொள்ளவும் இது உங்களுக்கு பின்னாளில் பயன்படலாம்.அந்த பக்கத்திற்கு சென்று பாருங்கள் ஏதேனும் புரியவில்லை என்றால் கேட்கவும்.

தொடர்பு  கொள்ள  

மெயில் id: krishnaprabu2710@gmail.com
phone: +91 9566887721

டிஸ்கி:
Contact information and problem details பாகத்தில் நீங்கள் கொடுக்க வேண்டியது உங்கள் புது ஜிமெயில் id. 

product information மற்றும் அதன் பின்னர் வரும் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் ஹாக் செய்யப்பட id விவரங்களை  கொடுக்க வேண்டும்.  இதை மறந்து விடாதீர்கள்.





◘பலே ட்வீட் ◘ 
 

தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாரா? -பா.ஜ.க # குழந்தைகளா இங்க விளையாடாதிங்க ... பந்து மேல பட்டுடும்! ரெண்டு பேரும் ஓரமா போயி விளையாடுங்க
                                                                                                           _rajan&allinall@twitter.com
அப்பாடா ! இங்கிலிஷ்ல பேச வராதது எவ்வளவு நல்லதாப் போச்சு ! இந்நேரம் நீர ராடியாவோட பேசி பெரிய சிக்கலாகி இருக்கும். தமிழ் வாழ்க! # அழகிரி 
                                                                                                           _jkavinmalar@twitter.com

23 comments

எல்லோருக்கும் தேவையான பதிவு நண்பா

Reply

@ரஹீம் கஸாலி
நன்றி நண்பரே!!

@மகாதேவன்-V.K
நன்றி நண்பரே!!

Reply

நான் தேடி கொண்டு இருந்த தகவல் மிக்க நன்றி

Reply

@சௌந்தர்
நன்றி நண்பரே!!

Reply

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

Reply

account recovery form
புதிய தகவலுக்கு நன்றி

Reply

பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

Reply

நன்றி நண்பரே

Reply

Ya it was quite a nice post. Can u give me an idea how to hack the Google account without knowing the password and recovery answers.

Reply

@சிவகுமாரன்
நன்றி நண்பரே!!

@நீச்சல்காரன்
நன்றி நண்பரே!!

@மாணவன்
நன்றி நண்பரே!!

@THOPPITHOPPI
நன்றி நண்பரே!!

@Arun
நன்றி நண்பரே!!

Reply

@Arun
நிச்சயமாக ஒரு பதிவு எழுதுகிறேன்.

Reply

எல்லோரும் பயன்பெறும் வகையில் இட்ட பதிவுக்கு நன்றிகள்!!!

தெளிவா சொல்லியிருக்கீங்க சகோ

Reply

நன்றி நண்பரே

உங்களுக்கு என்னோட புத்தாண்டு வாழ்த்துக்கள்

Reply

@ஆமினா
நன்றி தோழி!!

@விக்கி உலகம்
நன்றி நண்பரே!!

Reply

மிகச்சிறப்பான பதிவு.. அனைவருக்கும் பயன்படும் என்பதில் ஐயமில்லை..!

Reply

thanks for sharing the information. It is really useful. Just now I refer this link to my friend to recover his account..

Reply

தற்காலத்தில் அவசியமான பதிவு தகவல் நன்றி
காவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு

Reply

@தங்கம்பழனி
நன்றி நண்பரே!!

@ராசா
நன்றி நண்பரே!!

@டிலீப்
நன்றி நண்பரே!!

Reply

//ராசா said...

thanks for sharing the information. It is really useful. Just now I refer this link to my friend to recover his account..//

Account திரும்ப பெறுவதில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் உங்கள் நண்பரை என்னை தொடர்பு கொள்ள சொல்லவும்.

Reply

மிகவும் உபயோகமான பதிவு மிக்க நன்றிகள்....

Reply

account ah epdi hack panlamnu solliruntha nallarukkum. he he he

Reply

Post a Comment