HTML1: தமிழில் HTML கற்கலாம் | கற்போம்

HTML1: தமிழில் HTML கற்கலாம்


வணக்கம் நண்பர்களே, நான் பலே பிரபு..............................
இன்று முதல் உங்களுக்கு ஒரு புதிய தொடர் அறிமுகம். ஆம் HTML பற்றி பயிலலாம். நீங்கள் ரெடி தானே.....

HTML-Hyper Text Markup Language 

ஆமா என்ன இது HTML, நீங்க ப்ளாக் எழுதும் போது உங்கள் போஸ்ட் டைப் பண்ணும் இடம், டிசைன் பகுதியல் உள்ள "Edit Template" போன்றவை பெரும்பாலும் HTML ஆகத்தான் இருக்கும்.(இப்போது XML  ஆக உள்ளது.)
இதன் மூலம் நீங்கள் உங்கள் ப்ளாக் அல்லது வெப்பேஜ் ஐ அழகூட்ட மட்டுமின்றி நிறைய பங்குகள் உள்ளன. HTML தான் இணையத்தின் முதுகெலும்பு என்றே சொல்லலாம். 

முதலில்  HTML இன் அறிமுகத்தை காண்போம்.

1989 ஆம்  ஆண்டு டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
Hypertext என்பது தமிழில் மீஉரை எனப்படும். இது உரையுடன் கூடிய, படங்கள் மற்றும் வேறு பல ஆவணங்களுடன் தொடர்புக் குறிப்புகள் போன்றவை இருக்கும். இணைய உலவிகள் (Internet Browsers) இந்தக் குறிப்புகளை பார்த்து, அவற்றுக்கு ஏற்றார்போல் தகவல்களை திரையில் காண்பிக்கும். மேலும் அதன் தொடர்புடைய செய்திகளை பெற்றுத்தரும்.

என்ன வேணும் இதை கற்றுக்கொள்ள???
எந்த சாப்ட்வேர்களும் இதற்கென்று தேவை இல்லை. 

Notepad 

Word-pad

MS-Word இவை போதும்.

தமிழுக்கான பொன்மொழி,பதமி போன்றவற்றையும் பயன்படுத்தலாம். உருவாக்கப்பட்ட பைல்களை ASCII TEXT ஆக சேமித்து வைக்கவும்.
நீங்கள் இந்த உரைகளை பார்வையிட InterNet Explorer, Firefox, chorme போன்றவற்றை பயன்படுத்தலாம்.

HTML பற்றி தெரியாமலே HTML பைல் களை தயாரிக்க முடியும். நாம் தயாரிப்பவற்றை HTML ஆக மாற்ற MS-Word போதும். 

File-->Save As----> other formats----> save as type (Web page) 
இதன் மூலம் உங்கள் பைல் HTML ஆக save ஆகிவிடும். 

ஆனால் நாம் இங்கு காணப்போவது உங்கள் ப்ளாக் அல்லது வெப்பேஜ் ஐ டிசைன் செய்யும் வழிகளை. என்ன ரெடியா?????

பலே ட்வீட்
ஒலிம்பிக்கில் தங்கம் அள்ள ஒரே வழி அதை நாம் நடத்துவதுதான். அப்பத்தான் ஒரு பயலும் வரமாட்டான்.  
                                                             -thirumarant@twitter.com 
 

7 comments

மிகவும் பயனுள்ள தகவல்களை அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் சூப்பர்.

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

Reply

பலே..! பலே..!

Reply

ஹாய் பலே பாண்டியா,,
புதிது புதிதாக தகவல்கள் தருகிறீர்கள் ..
நன்றி ..

Reply

நன்றி நண்பர்களே
"பலே பாண்டியா" Prabu Krishna

Reply

நன்றி பலே

Reply

Post a Comment