July 2013 | கற்போம்

Samsung Galaxy Tab 3 இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price]

Samsung நிறுவனம் வெற்றிகரமான Galaxy Tab வரிசையில் புதியதாக 3-ஆம் தலைமுறை Tablet களை வெளியிட்டுள்ளது. இவை கடந்த வாரம் இந்தியாவில் வெளியாகி தற்போது அனைத்து Online Store களிலும் கிடைக்கவிருக்கின்றன. இவை பற்றி இன்று காண்போம்.

Galaxy Tab 3ல் மொத்தம் 3 வகையான Tablet கள் தற்போது வெளியாகி உள்ளன. ஒரு 7 inch Tablet மற்றும் இரண்டு  8 inch Tablet. 8 inch tablet -இல் ஒன்று GSM Support உடனும் மற்றொன்று Wi-fi Only என்றும் கிடைக்கும்.  இதன் Specification களை கீழே காணலாம். 

Windows 7-இல் Startup Sound-ஐ Disable செய்வது எப்படி?

Windows கணினிகளை ON செய்யும் போது Desktop க்கு வரும் வேளையில் Startup Sound என்று ஒரு Default Sound வருவதுண்டு. நிறைய பேருக்கு அதில் விருப்பம் இல்லை. இன்றைய பதிவில் அதை எப்படி Disable செய்வது என்று பார்ப்போம். 

இன்ஸ்டால் செய்த மென்பொருட்களின் சீரியல் நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?

மென்பொருட்களை நிறுவும் போது நாம் கொடுக்கும் Serial Number களை இன்ஸ்டால் செய்யும் நேரத்தோடு மறந்து விடுவோம். ஆனால் மீண்டும் அவை தேவைப்படும் போது இணையத்திலோ அல்லது நண்பர்களிடமோ தேடிக் கொண்டிருப்போம். இந்த பிரச்சினையை தவிர்க்க அந்த தகவல்களை ஒரு மென்பொருள் மூலம் தெரிந்து கொண்டால் தேவைப்படும் போது பயன்படும் அல்லவா. அதற்கு பயன்படும் மென்பொருட்களை காண்போம். 




சீரியல் நம்பரை கண்டுபிடிக்க மிகச் சிறந்த மென்பொருள் என்றால் அது Belarc Advisor தான். Free Software என்பதோடு எந்த வித விளம்பரங்களும், டூல் பார்களும் இல்லாமல் வருவது இதன் ஸ்பெஷல். உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்தும்  எல்லா மென்பொருட்களின் சீரியல் நம்பர்களையும் இது கண்டுபிடித்து தரும். அத்தோடு அந்த மென்பொருட்களின் தற்போதைய Version, Security Update இன்ஸ்டால் செய்ய வேண்டி இருப்பின் அந்த தகவல்கள் என பலவற்றை தரும்.





இந்த மென்பொருளும் உங்கள் மென்பொருட்களின் Serial Number - களை கண்டுபிடித்து தரும். மிக எளிதாக கண்டுபிடித்து Text File ஆக நீங்கள் சேமித்துக் கொள்ளலாம்.

மற்ற சில மென்பொருட்களை கீழே காணலாம்.








10. RockXP

- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக்கின் புதிய Page Insights - ஒரு அலசல்

Facebook Page - களில் ஒரு முக்கியமான வசதி Insights. இதன் மூலம் உங்கள் Page குறித்த முழுத் தகவல்களையும் நீங்கள் காண முடியும். Likes, Shares, Comments, Reach, Engagement என்று பலவற்றை இதில் நீங்கள் பார்க்கலாம். இதைப் பற்றி தெரிந்து வைத்திருந்தால் உங்கள் Page Likes, shares போன்றவற்றை மேம்படுத்த இயலும். பல மாதங்களாக Insights இருந்தாலும் தற்போது அறிமுகம் ஆகி உள்ள புதிய Insights பற்றி இந்த பதிவில் காண்போம்.

உங்கள் Facebook Page-இல் Cover Photo-வுக்கு மேலே Insights என்று ஒன்று இருக்கும்.அதில் See All என்பதை கிளிக் செய்யுங்கள்.


1. Overview


இந்த பக்கத்தில் கடந்த ஏழு நாட்களுக்கான Page Likes, Post Reach, Engagement போன்றவற்றை காணலாம். இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் உங்கள் Page எந்த அளவுக்கு செயல்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.


2.  Page


இதை கிளிக் செய்தால் கடந்த ஒரு மாதத்தில் உங்கள் Page Likes, Post Reach, Page Visits போன்றவற்றை அறியலாம்.

Page Likes பகுதியில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு Likes, Unlikes வந்துள்ளது. எங்கிருந்து லைக் செய்துள்ளார்கள் போன்ற தகவல்களை காணலாம். ஒவ்வொன்றையும் கிளிக் செய்து ஒரு நாளில் வந்த Like எங்கிருந்து வந்தது Dislike செய்த இடம் எது போன்ற தகவல்களை அறியலாம். Dislikes அதிகமாக இருப்பின் அதை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.



இதே பகுதியில் Post Reach என்பதில் உங்கள் போஸ்ட்களை எத்தனை பேர் பார்த்தார்கள், அதற்கு வந்த Likes, Comments, Shares, Hide, Report as Spam and Unlikes போன்ற தகவல்களை காணலாம். Hide, Report as Spam and Unlikes பகுதி மிக முக்கியமானது. இதில் எந்த போஸ்ட்டை நீங்கள் பகிர்ந்த போது அதிக Negative Response கிடைத்தது என்பதை அறியலாம்.



இதற்கு அடுத்து உள்ள Page Visits என்ற பகுதியில் உங்கள் Page - இல் நடந்த Activity-களை காணலாம். குறிப்பிட்ட Tab-ஐ பார்த்தவர்கள் எண்ணிக்கை, உங்கள் Page-ஐ Tag செய்தவர்கள் எண்ணிக்கை, Page-இல் போஸ்ட் செய்தவர்கள் எண்ணிக்கை போன்ற தகவல்களை காணலாம். இதில் இன்னொரு முக்கிய வசதி எந்த தளத்தில் இருந்து உங்கள் Page க்கு அதிகாக வந்துள்ளார்கள் என்று. அது External Referrers என்ற பகுதியில் இருக்கும்.

3. Posts


இதில் மூன்று வகையான தகவல்களை காணலாம்.  All Posts, When Your Fans Are Online, Best Post Types என்ற இந்த மூன்றுமே மிக முக்கியமானவை.



All Posts என்பதில் நீங்கள் பகிர்ந்த போஸ்ட் ஒவ்வொன்றும் எவ்வளவு Likes, Comments, Shares, Reach போன்றவற்றை பெற்றுள்ளது என்று காணலாம். இதன் மூலம் எது குறித்த தகவல் அதிகம் பேரை கவர்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

When Your Fans Are Online - இந்த வசதி ரொம்பவே முக்கியமானது. நாம் போஸ்ட் செய்யும் நேரத்தில் Fans ஆன்லைனில் இல்லாவிட்டால் போடும் போஸ்ட் நிறைய பேரை சென்றடையாது. அதனால் இதன் மூலம் என்று அதிகமான Fans ஆன்லைனில் இருக்கிறார்கள், அதுவும் எந்த நேரத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்து பகிரலாம்.

Best Post Types - உங்கள் Facebook பக்கத்தில் போஸ்ட்களை Status, Photo, Link என்ற பகிரலாம். இதில் எந்த வகையான போஸ்ட் அதிகம் பேரை சென்றடைந்துள்ளது என்று இதன் மூலம் அறியலாம். பெரும்பாலும் போட்டோவுடன் பகிர்ந்தால் நிறைய பேருக்கு Reach ஆகும்.

4. People 


இந்த பகுதியில் Your Fans, People Reached, People Engaged போன்ற தகவல்களை காணலாம்.

Your Fans என்பதில் யார் அதிகம் லைக் செய்துள்ளார்கள் ஆண்களா? பெண்களா ? என்று அறியலாம். அத்தோடு எந்த இடத்தில் இருந்து லைக் செய்துள்ளார்கள், எந்த மொழி அறிந்தவர்கள் என்றும் காணலாம்.



People Reached என்பதில் கடந்த ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் ஒரு முறையேனும் உங்கள் போஸ்ட்களை பார்த்த நபர்களை காணலாம். இதிலும் ஆண், பெண், இடம், மொழி போன்றவற்றை அறியலாம்.

 People Engaged என்பதிலும் கடந்த ஒரு மாதத்தில் உங்கள் பேஜ் போஸ்ட்களை Like, Comment, Share செய்த ஆண், பெண், இடம், மொழி போன்ற தகவல்களை அறியலாம்

இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்தால் உங்களுக்கு பல ஐடியாக்கள் கிடைக்கும். அதன் படி உங்கள் Facebook Page-ஐ நீங்கள் மேம்படுத்த இயலும். இந்த தகவல்களை Export Data என்ற வசதி மூலம் டவுன்லோட் செய்து பார்க்கலாம்.

- பிரபு கிருஷ்ணா

ஜிமெயிலின் புதிய இன்பாக்ஸ்

புதிய புதிய வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து தனது பல பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், சில பயனர்களுக்கு துன்ப  அதிர்ச்சியையும் தருவது ஜிமெயில்  மட்டுமே. அவ்வகையில் தற்போது வந்துள்ள புதிய வசதி உங்கள் ஜிமெயில் இன்பாக்சை Category ஆக பிரித்துக் கொள்ளும் வசதி. இது பலனுள்ளதா இல்லையா என்பதை பதிவில் காண்போம்.

பேஸ்புக் பேஜில் போஸ்ட்களை Schedule செய்வது எப்படி?

பேஸ்புக் பேஜ்கள் பற்றி நாம் அனைவரும் அறிவோம். பல தனியார்/அரசு நிறுவனங்கள், அமைப்புகள், நபர்கள் இவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் ஒரு பேஜ் வைத்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் பேஜில் பகிர நினைத்து அந்த நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தால் உங்களால் பகிர முடியாமல் போகலாம். அதை சமாளிக்க பேஸ்புக் பேஜ்களில் உள்ள ஒரு வசதி தான் போஸ்ட்களை Schedule செய்வது. 

SMS மூலம் IRCTC-யில் Ticket புக் செய்வது எப்படி?

IRCTC-யில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய விரும்புவர்களுக்கு பெரிய தொல்லை அதன் வேகம்.  அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே சர்வர் மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி வழங்கப்படுவதால் மெதுவாக இருக்கும் புக்கிங் சேவையை வேகமாக்க இன்னொரு வசதியை கொடுத்துள்ளது IRCTC. தற்போது நீங்கள் உங்கள் போனில் இரண்டே இரண்டு SMS மூலம் டிக்கெட் புக் செய்து விடலாம். எப்படி என்று பார்ப்போம்.


தேவையானவை: 
  1. மிக முக்கியமாக வங்கிக்கணக்கு மற்றும் IRCTC Account இருக்க வேண்டும்
  2. நீங்கள் புக் செய்ய பயன்படுத்தும் மொபைல் நம்பர் IRCTC & Bank இரண்டிலும் Register செய்யப்பட்டிருக்க வேண்டும். 
  3. பேங்க்கில் இருந்து MMID, OTP (One Time Password) போன்ற தகவல்களை நீங்கள் பெற வேண்டும்.
  4. OTP என்பது One Time Password என்பதால் ஒரு முறை மட்டுமே இதை நீங்கள் பயன்படுத்த முடியும். எனவே இதை எப்படி தொடர்ந்து பெறுவது என்பதை உங்கள் வங்கியில் கேட்டுக் கொள்ளுங்கள். சில வங்கிகள் சில வழிமுறைகளை பின்பற்றுகின்றன. அதனை அறிய - How to generate OTP

இவையே தேவையானவை. இதில் ஒன்று இல்லை என்றாலும் உங்களால் டிக்கெட் புக் செய்ய இயலாது.



தற்போது எப்படி டிக்கெட் புக் செய்வது என்று பார்ப்போம்.

முதலில் கீழே உள்ளது போன்ற SMS - ஐ 139 அல்லது 5676714 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

 BOOK <TrainNo> <FromCity> <ToCity> <TravelDate(DDMM)> <Class> <Passenger1-Name> <Age> <Gender> <Passenger2-Name> <Age> <Gender> (Upto 6 passengers)

உதாரணம்:
BOOK 16232 SBC TPJ 1307 SL Prabu 24 M  Prabha 24 F

நீங்கள் மேலே உள்ளது போன்று சரியான பட்சத்தில் அனுப்பினால் உங்களுக்கு 139 இல் இருந்து ஒரு SMS வரும்.

Trans Id: 12345678 Ticket Amount: 460 IRCTC SC: 11.24 Total Amount: 461.24 Seat: AVAILABLE-240. For Payment SMS PAY <34004567> IMPS <MMID> <OTP> IRCTCUserID to 139 to book ticket.

இப்போது டிக்கெட்க்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

 PAY <Transaction ID as received> IMPS <MMID as received from bank> <OTP as received from bank for this transaction> <IRCTCUserID>

உதாரணம்:
PAY 12345678 IMPS 98765432 271089 prabu2710

இதையும் சரியாக அனுப்பும் பட்சத்தில் உங்களுக்கு பின் வரும் SMS வரும்.

Your ticket booked successfully. PNR is: 10101010 Ticket No: :1234567890  Booking Status: Prabu CONFIRM S7 1 WS Prabha CONFIRM S7 4 WS Ticket Amt: 460.0 SC: 11.24 Src: Bangalore CY JN Dst: Tiruchchirapali Date of Journey: 13/07/2013 Sch Dep 19:05 hrs

டிக்கெட்டை Cancel செய்வது எப்படி? 


கஷ்டப்பட்டு புக் செய்த டிக்கெட்டை கான்செல் செய்ய மாட்டீர்கள் இருப்பினும் எப்படி என்று சொல்லி விடுகின்றேன் :-)

1. டிக்கெட் முழுமையாக கான்செல் செய்ய

கீழே உள்ளது போன்று SMS ஐ 139 க்கு அனுப்புங்கள்


CAN <10 Digit PNR> <IRCTC UserID>

உதாரணம்
CAN 10101010 prabu2710

இப்போது கீழே உள்ளது போன்ற ஒரு SMS உங்களுக்கு வரும்.

We have received your request for cancellation of tickets for < Passenger 1 Name> for PNR Number 10101010. Please confirm the cancellation by sending YES to 139 or for any change in cancellation data, send a fresh request.

இதை உறுதி செய்ய YES என்று 139 க்கு அனுப்ப வேண்டும். இப்போது உள்ளது போன்ற SMS வரும்.

Your ticket for <Passenger 1 Name> with PNR Number: 10101010 is cancelled. Amount: 400 will be refunded in your account.

2. குறிப்பிட்ட நபர்களின் பயணத்தை மட்டும் கான்செல் செய்ய 

சில சமயங்களில் 4/5 நபர்களுக்கு புக் செய்து விட்டு யாரேனும் ஒருவர் மட்டும் வரவில்லை என்றால் அவர்கள் Ticket - ஐ மட்டும் கூட நீங்கள் கான்செல் செய்யலாம்.

இதற்கு கீழே உள்ள வழிமுறையை பின்பற்றி 139 க்கு SMS அனுப்பவும்.

CAN <10 Digit PNR> <IRCTCUserID> <Passenger Number>

உதாரணம்
CAN 10101010 prabu2710 12 (Upto 6 Passengers)

இதற்கு ஒரு SMS உங்களுக்கு வரும்

We have received your request for cancellation of tickets for < Passenger 1 Name> for PNR Number 10101010. Please confirm the cancellation by sending YES to 139 or for any change in cancellation data, send a fresh request.

இதை உறுதி செய்ய YES என்று 139 க்கு அனுப்ப வேண்டும். இப்போது உள்ளது போன்ற SMS வரும்.

Your ticket for <Passenger 1 Name> with PNR Number: 10101010 is cancelled. Amount: 400 will be refunded in your account.

அவ்வளவே :-) .  இதை பயன்படுத்திய நபர்கள் கீழே உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள். பதிவில் ஏதேனும் தவறு இருப்பின் அதையும் குறிப்பிடுங்கள். AIRTEL பயனர்கள் *400# என்று Dial செய்து புக் செய்யலாம் (இது குறித்த பதிவை பின்னர் பார்ப்போம்).

கணினி மூலம் புக் செய்பவர்களுக்கு - IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி

- பிரபு கிருஷ்ணா

Samsung Galaxy S4 mini இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price]

அடிக்கடி புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு அசத்தும் Samsung நிறுவனத்தின் புதிய போன் Samsung Galaxy S4 mini. இது கடந்த மாதம் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 27990 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2.2 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற சாதாரண வசதிகள் உள்ளன.  அதே போல முன்னாலும்  ஒரு 1.9 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 4.3 Inch Super AMOLED Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1.5 GB RAM மற்றும் 1.7 GHz Krait dual-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8 GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1900 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Samsung Galaxy S4 mini Specifications

Operating SystemAndroid OS, v4.2.2 (Jelly Bean)
Display4.3 inch (540 x 960 pixels) Super AMOLED capacitive touchscreen
Processor1.7 GHz Krait dual-core processor
RAM1.5 GB RAM
Internal Memory8 GB Internal Memory (5 GB user memory)
External MemorymicroSD, up to 64 GB
CameraRear Camera: 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash
Front Camera: 1.9 MP
BatteryLi-Ion 1900 mAh Battery
Features3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

கொடுக்கும் விலைக்கு 1.5 GB RAM தவிர மற்றவை அனைத்தும் குறைவானவை தான். 1 GB RAM உடன் வரும் Samsung Galaxy S3 இதை விட சிறந்த போன். இரண்டில் எது சிறந்தது என்று இங்கே காணலாம். Samsung Galaxy S4 mini vs Galaxy S3

Micromax Canvas 4 - அசத்தலான வசதிகளுடன் 17,999 ரூபாய்க்கு அறிமுகமானது

கடந்த மாதம் முதலே இந்தியாவில் மொபைல் பயனர்களால் மிக அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட போன் Micromax Canvas 4. சிறு சிறு விளம்பரங்களுடன் கடந்த மாதம் 28 ஆம் தேதி இதை Pre-book செய்யும் வசதியை அறிமுகம் செய்திருந்தது Micromax நிறுவனம். 11,500 பேர் ஆன்லைன் மூலம் புக் செய்திருந்த நிலையில் நேற்று டெல்லியில் இந்த போன் அறிமுகமானது.பல அசத்தலான வசதிகளுடன் வந்துள்ள இந்த போனின் விலை 17,999 ரூபாய் மட்டுமே.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.2.1 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற சாதாரண வசதிகளுடன் Continous (Burst) mode, Smile detection, Photosolid, High Dynamic Range Synthesis, 4 direction Panorama, Effects Library போன்ற புதிய வசதிகளும் உள்ளன. அதே போல முன்னாலும் ஒரு 5 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.



இது 5 Inch TRU-IPS HD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, G-Sensor ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது. Dual Sim & Dual Standby வசதியுடனும் வருகிறது இந்த போன்.

இது 1 GB RAM மற்றும் 1.2 GHz MediaTek 6589 quad-core processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

கேமராவின் புதிய வசதிகளில் 4 direction Panorama மூலம் Panorama வகையான Shot கேமராவை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். Burst mode மூலம் 15 நொடிகளில் 99 போட்டோக்களை எடுக்க முடியும், Effects Library மூலம் எடுத்த போட்டோக்களை மெருகேற்றலாம்.

அத்தோடு இந்த போனில் ஒரு வீடியோ பார்க்கும் போது கணினியை போல வீடியோ screen ஐ சிறிதாக்கி வேறு SMS, Email அனுப்புவது போன்ற வேலைகளை பார்க்கலாம். இதை Unlock செய்ய போனின் அருகில் சென்று ஒரு முத்தம் கொடுத்தால் போதும் ;-). குறிப்பிட்ட Call ஒன்றை Cut செய்ய போனை எடுத்து கவிழ்த்து வைத்தால் போதும் Ringtone Silent ஆகி விடும். பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்பீக்கரில் மாற்ற போனை கவிழ்த்தால் போதும்.

இன்னும் பல வசதிகள் உள்ளன. போன் வாங்கிய பின் அதை சொல்கிறேன் :-)

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Micromax Canvas 4 A210 Specifications

Operating SystemAndroid 4.2.1 Jelly Bean
Display5.5 inch (1280 x 720 pixels) TRU-IPS HD capacitive touch screen
Dual SimYes, Dual Sim, GSM+GSM and Dual Standby
Processor1.2 GHz MediaTek 6589 Quad Core processor
RAM1 GB RAM
Internal Memory16 GB Internal Memory 
External MemorymicroSD, up to 32 GB
CameraRear Camera: 13 MP, 4128 x 3096 pixels, autofocus, LED flash,  Full HD Recording
Front Camera: 5 MP
Battery2000 mAh battery
Features3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review:

RAM மற்றும் MediaTek Processor தவிர கொடுக்கும் விலைக்கு அதிகமான வசதிகள் பல உள்ளன இந்த போனில். போன் ஆர்டர் செய்திருப்பதால் மேலும் விவரங்களை பின்னர் பார்ப்போம். 

தகவல் - Specs Of All
-பிரபு கிருஷ்ணா

பேஸ்புக் சாட்டில் Sticker வசதி - தற்போது கணினிகளுக்கும்

அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி நம்மை கவர்வதில் பேஸ்புக்கிற்கு நிகர் அதுவே. அதன் தற்போதைய அறிமுகம் சாட் செய்யும் போது நண்பர்களுக்கு Sticker களை அனுப்பும் வசதி. கடந்த மாதமே மொபைல் பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி நேற்று முதல் கணினி பயனர்களுக்கும் கிடைத்துள்ளது. சாட்டில் அடிக்கடி வெறும் ஸ்மைலிகளை மட்டும் அனுப்பி போரடித்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு இந்த வசதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள குட்டி குட்டி படங்களை உங்கள் நண்பர்களுக்கு சாட் மூலம் அனுப்பலாம்.



கற்போம் ஜூலை மாத இதழ் – Karpom July 2013

கற்போம் ஜூலை மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”