Micromax நிறுவனத்தின் அதிரடியான வெளியீடுகளில் ஒன்று A115 Canvas 3D. இது தற்போது ரூபாய். 9,999 - க்கு கிடைக்கிறது. குறைந்த விலைக்கு 3D வசதி உள்ள போன் தற்போதைக்கு இது தான். 3D வசதி மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை 3D Effect மூலம் பார்க்கலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1.2 (Jelly Bean) OS – ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
இது 5 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.Dual Sim & Dual Standby வசதியுடனும் வருகிறது இந்த போன்.
இது 1 GB RAM, 1 GHz dual-core processor மற்றும் MediaTek MT6577 Chipset கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4 GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 2000 mAh பேட்டரியுடன் 4.30 மணி நேர Talk Time கொண்டுள்ளது.
இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
Micromax A115 Canvas 3D Specifications:
Operating System | Android 4.1.2 Jelly Bean |
Display | 5 inch (480 x 800 pixels) TFT capacitive touch screen |
Processor | 1 GHz dual-core processor |
RAM | 1 GB RAM |
Internal Memory | 4 GB Internal Memory |
External Memory | microSD, up to 32 GB |
Camera | Rear Camera: 5 MP, 2592х1944 pixels, autofocus, LED flash |
Front Camera: 0.3 MP | |
Battery | Li-Ion 2000 mAh |
Features | 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector |
கற்போம் Review:
பத்தாயிரம் ரூபாய்க்கு 3D போன் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. எப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் 3D தவிர்த்த மற்ற விசயங்களும் கொடுக்கும் விலைக்கு உகந்தது போலவே உள்ளது. குறைந்த விலை போன் ஒன்றை வாங்க விரும்பும் நபர்கள் கட்டாயம் வாங்கலாம்.
- பிரபு கிருஷ்ணா
Post a Comment