April 2013 | கற்போம்

Nokia Lumia 720 -தற்போது இந்தியாவில் - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


நோக்கியா Lumia 520 உடன் அறிவித்த போன் Lumia 720. 520 ஐ விட கொஞ்சம் அதிகமான வசதிகளுடன், மிக அதிகமான விலையுடன் சந்தைக்கு வந்துள்ளது இந்த மாடல். இதன் ஆரம்ப விலை ரூபாய் 18,999 என்று அறிவித்துள்ளது நோக்கியா. 

இது windows phone 8  - ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 6.7 MP கேமராவை கொண்டுள்ளதுடன்  1.3 MP Front கேமராவையும் கொண்டுள்ளது.  இரண்டின் மூலமும் HD Video Recording செய்ய முடியும். Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  

இது 4.3 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 512 MB RAM மற்றும் 1 GHz Dual-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 2000 mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் Talk Time 23.20 மணி நேரம் மற்றும் Standby Time 520 மணி நேரம்.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

Flipkart தளத்தில் இதை நீங்கள் வாங்கலாம். நோக்கியாவின் ஆன்லைன் ஷாப்பிலும் இது கிடைக்கிறது.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Nokia Lumia 720 Specifications

Operating System Microsoft Windows Phone 8
Display 4.3 inch (800 x 480 pixels) IPS LCD capacitive touchscreen display
Processor 1 GHz dual-core processor
RAM 512MB RAM
Internal Memory 8GB
External Memory microSD, up to 64 GB
Camera 6.7 MP rear camera with LED flash and 1.3 MP front camera
Battery Li-Ion 2000 mAh Battery with Up to 23 hrs 20 mins talk time and 520 hrs standby time.
Features 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS,  Micro USB 2.0 connector

கற்போம் Review: 

8GB Internal Memory, HD Recording போன்ற சிறப்பம்சங்கள்  இருப்பினும்  கொடுக்கும் விலைக்கு ஏற்ற அளவு வசதிகள் இல்லை. விலை 15,000 என்றால் ஓகே. 

தகவல் - Specs Of All

- பிரபு கிருஷ்ணா

Sony Xperia SP முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]



Sony நிறுவனத்தின் புதிய போன் ஒன்றை வாங்க நினைப்பவர்களுக்கு சற்றே அதிகமான விலையில் ஒரு மாடலை அறிமுகம் செய்துள்ளது அது. Xperia SP என்ற புதிய மாடல் ரூபாய் 27490 க்கு தற்போது இந்தியாவில் கிடைக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம். 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.1 (Jelly Bean) OS - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு 0.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4.6 Inch HD TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM மற்றும் 1.7 GHz Dual-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 2370 mAh பேட்டரியுடன் வருகிறது. இது 635 மணி நேர Stand By Time மற்றும் 10.25 மணி நேர Talk Time கொண்டுள்ளது. 

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

Sony நிறுவனம் இந்த போனுடன் இலவசமாக ரூபாய் 1,990 மதிப்புள்ள Mobile Case ஒன்றை தருகிறது. 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Sony Xperia SP Specifications:

Operating System Android 4.1 Jelly Bean
Display 4.6 inch (1280×720 pixels) HD TFT capacitive touch screen display
Processor 1.7 GHz Dual-Core Qualcomm Snapdragon S4 MSM8960Pro processor
RAM 1 GB RAM
Internal Memory 8 GB Internal Memory (5.8 GB user memory)
External Memory microSD, up to 32 GB
Camera Rear Camera: 8 MP, 3264 x 2448 pixels, autofocus, LED flash
Front Camera: 0.3 MP
Battery Li-Ion 2370 mAh
Features 3G, 4G,WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review: 

விலை சற்றே அதிகம் தான். கேமரா 13 MP ஆக இருந்திருந்தால் இந்த விலைக்கு ஓகே. இன்னும் கொஞ்சம் விலை குறைந்த பின் வாங்கலாம். 

* - விலை Update செய்த தேதி 15-04-2013.

தகவல் - Specs Of All Blog
-பிரபு கிருஷ்ணா

Facebook Game மற்றும் Application Request-களை தடுக்க புதிய வழி


எப்போது நாம் பேஸ்புக்கில் நுழைந்தாலும் யாரேனும் நண்பர்கள் நமக்கு Game மற்றும் Application Request களை தந்திருப்பார்கள். அது போன்ற அழைப்புகளை நாம் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து வருவதை தடுக்க முடியாது. 

அவற்றை தடுக்க முன்பு Privacy Settings பகுதியில் Block செய்யும் முறையை பகிர்ந்திருந்தேன். இம்முறை சொல்லப்போகும் வழி இன்னும் எளிதானது. 

உங்களுக்கு வந்திருக்கும் Request -கள் வலது புற Side Bar பகுதியில் இருக்கும். 


இப்போது அதன் மீது Mouse ஐ Hover செய்தால் வலது புறம் ஒரு சிறிய பெருக்கல் குறி (X) தோன்றும். அதன் மீது கிளிக் செய்யுங்கள். 

அதில் இரண்டு வசதிகள் இருக்கும் ஒன்று Remove All Requests மற்றொன்று Block. Block என்பதில் Game பெயரும் இருக்கும். 


Remove All Requests என்பதை கொடுத்தால் தற்போது வந்துள்ள Game மற்றும் Application Request கள் நீக்கப்பட்டு விடும். Block என்பதை கிளிக் செய்து பின்னர் Confirm செய்தால் குறிப்பிட்ட Game அல்லது Application ஐ நீங்கள் Block செய்து விடலாம். 

மறுபடி வேறு நண்பர்கள் குறிப்பிட்ட Game அல்லது Application Request ஐ உங்களுக்கு அனுப்பும் போது அது வராது. 

- பிரபு கிருஷ்ணா

ரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]

தினம் தினம் பல புதிய மொபைல் போன்கள் வெளியாகின்றன, பலருக்கு எந்த போனை வாங்குவது என்று குழப்பமாக இருக்கும். அதை போக்க இந்த மாதத்தின் சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் அதுவும் ரூபாய் 10,000 க்கும் குறைவாக உள்ளவற்றை இங்கே காண்போம். 

பட்டியலில் உள்ள போன்கள் ஐந்தும் குறைந்த பட்சம் 5MP கேமரா உள்ளவைகளாக தெரிவு செய்துள்ளேன்.

விலை Flipkart தளத்தில் இருந்து Update செய்யப்பட்டுள்ளது. தேதி 10-04-2013. மற்ற தளங்களில் விலை மாறுபடலாம்.




Intel Processor மூலம் தனது மார்கெட்டை தொடங்கிய XOLO நிறுவனத்தின் சமீபத்திய வரவு A800. 4.5 Inch IPS Display, 1 GHz Dual Core Processor, 8 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim என அசத்தலான வசதிகளுடன் உள்ளது. கொடுக்கும் விலைக்கு மேலேயே வசதிகள் கிடைக்கின்றன. குறைந்த விலைக்கு மிக அதிகமான வசதிகளை எதிர்நோக்கும் நபர்களுக்கு உகந்த மாடல். 

Micromax A101 - ரூபாய் 9999


குறைந்த விலை போன்களின் ஆதர்ச நிறுவனமான Micromax இன் இந்த மாடல் 5 Inch TFT Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் வருகிறது. 5 Inch Display என்பது குறிப்பிடத்தக்க விஷயம். 

Samsung Galaxy Ace S5830i - ரூபாய் 9230 Full Specifications


சாம்சங் நிறுவனம் 2011 ஆண்டு வெளியிட்ட இந்த போன் இன்னும் பல வாசகர்களுக்கு பிடித்துள்ளது. இது 3.5 Inch TFT Capacitive Touchscreen, 832 MHz Processor, Android v2.3 (Gingerbread) OS மற்றும் 5 MP Camera போன்றவற்றுடன் வருகிறது. OS பழைய Version மற்றும் கேமராவில் Flash இல்லை போன்றவை குறைபாடுகள். இவை பற்றிய கவலை இல்லாதவர்கள் வாங்கலாம்.

Lava Iris 501 - விலை 9199 Full Specifications


ஸ்மார்ட்போன் மார்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வரும் Lava நிறுவனத்தின் Iris 501 மாடல் 5 Inch Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் வருகிறது. மேலே சொன்ன Micromax A101 போலவே 5 Inch Screen என்பது சிறந்த அம்சம்.





மறுபடியும் அதே Xolo தான். இந்த B700 போனும்  4.3 Inch IPS Display, 1 GHz Dual Core Processor, 5 MP Camera, Android v4.0 (Ice Cream Sandwich) OS மற்றும் Dual Sim போன்ற வசதிகளுடன் உள்ளது. மிகக் குறிப்பிடத்தக்க விஷயம் 3450 mAh பாட்டரி. இது 23 மணி நேரம் Talk Time மற்றும் 380 மணி நேரம் Standby Time போன்றவற்றுடன் வருகிறது. 

இந்த ஐந்து போன்களை தவிர மற்ற சிறந்த போன்கள் கீழே உள்ளன. 
  1. XOLO B700 - Rs. 8999
  2. XOLO X500 - Rs. 8499
  3. XOLO A700 - Rs. 7999
  4. Karbonn Smart A12 - Rs. 7990
  5. Huawei Ascend Y300 - Rs. 7980
இது எனது பரிந்துரை மட்டுமே. உங்கள் பார்வையில் இந்த விலைப் பட்டியலில் வேறு போன்கள் இருந்தால் அவற்றை கீழே சொல்லுங்கள். 

இந்த பகுதியை இனி தொடரலாம் என்று நினைக்கிறேன், அதற்கான உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள். 

- பிரபு கிருஷ்ணா

இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy Y Plus மற்றும் Galaxy Young முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


ஒரு மாதத்திற்கு பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து புதிய பயனர்களை கவருவதில் Samsung kk நிகர் அதுவே. அந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள போன்கள் Samsung Galaxy Y Plus மற்றும் Galaxy Young. இரண்டுமே Dual Sim போன்கள் ஆகும். 

Samsung Galaxy Y Plus Specifications


Operating System

Android 4.0 (Ice Cream Sandwich)

Display

2.8 inch  (240 x 320 pixels) capacitive touch screen display

Dual SIM

 Yes, GSM + GSM

Processor

850 MHz processor

RAM

Detail Not Available

Internal Memory

4GB

External Memory

microSD, up to 32 GB

Camera

2MP camera

Battery

1200 mAh

Features

3G, Bluetooth, GPS and Java

Samsung Galaxy Young specifications


Operating System

Android OS,v 4.1 (Jelly Bean)

Display

3.27 inch ( 480 × 320 pixels) capacitive touch screen display

Dual SIM

 Yes, GSM + GSM

Processor

1 GHz processor

RAM

768 MB RAM

Internal Memory

4GB

External Memory

microSD, up to 64 GB

Camera

3MP rear camera

Battery

1300 mAh

Features

3G, Bluetooth, GPS and Java

Flipkart தளத்தில் Galaxy Y Plus ரூபாய் 6290 க்கும், Galaxy Young ரூபாய் 8290 க்கும் கிடைக்கிறது. 

கற்போம் Review: 

குறைந்த வசதிகள் கொண்ட போனை வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம். Jelly Bean, Ice cream sandwich OS உடன் வருவது சிறப்பசம்சம். 

* விலை Update செய்த தேதி - 09/04/2013

- பிரபு கிருஷ்ணா

LG Optimus L3 II Dual & Optimus L7 II Dual தற்போது இந்தியாவில் முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]

LG நிறுவனம் தனது இரண்டு புதிய Dual Sim ஸ்மார்ட்போன்கள்  LG Optimus L3 II Dual & Optimus L7 II Dual ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டுமே ஆன்ட்ராய்ட் 4.1.2 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குபவை.



LG Optimus L3 II Dual specifications:

Operating System Android 4.1.2 (Jelly Bean)
Display 3.2 inch (320 x 240 pixels) IPS LCD capacitive touch screen display
Processor 1 GHz processor
RAM 512MB RAM
Internal Memory 4GB
External Memory microSD, up to 32 GB
Camera 3.2 MP camera
Battery 1540 mAh battery
Features 3G, Bluetooth, GPS and Java

LG Optimus L7 II Dual specifications:

Operating System Android 4.1.2 (Jelly Bean)
Display 4.3 inch (800 × 480 pixels) IPS LCD capacitive touch screen display
Processor 1 GHz dual-core Snapdragon MSM8225 processor
RAM 768MB RAM
Internal Memory 4 GB (1.78 GB User Memory)
External Memory microSD, up to 32 GB
Camera 8 MP rear camera with LED Flash and HD recording and VGA front camera
Battery 2460 mAh battery
Features 3G, Bluetooth, GPS and Java



கற்போம் Review: 

குறைந்த விலையில் அதிக வசதிகளை விரும்பும் பயனர்களைக் குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளன இந்த போன்கள். விலைக்கு தகுந்தார் போலவே வசதிகளும் உள்ளன. 

* விலை Update செய்த தேதி - 06/04/2013


தகவல் - Specs Of All
- பிரபு கிருஷ்ணா

Nokia Lumia 520 - குறைந்த விலை விண்டோஸ் போன் - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]



இதுவரை வந்த நோக்கியாவின் விண்டோஸ் போன்கள் அனைத்துமே விலை அதிகமாக தான் வந்தன. குறைந்த விலையில் போன் வாங்க நினைப்பவர்களை கவர தற்போது ரூபாய் 10390* க்கு Lumia 520 என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது நோக்கியா நிறுவனம். 

இது windows phone 8  - ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 5 MP கேமராவை கொண்டுள்ளது. இதன் மூலம் HD Video Recording செய்ய முடியும். Auto Focus, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  

இது 4.0 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 512 MB RAM மற்றும் 1 GHz Dual-core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Li-Ion 1430 mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் Talk Time 14 மணி நேரம் மற்றும் Standby Time 360 மணி நேரம்.

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து இதை வாங்க முடியும் என்று நோக்கியா அறிவித்து இருந்தது. ஆனால் இதை Snapdeal மற்றும் Flipkart போன்ற தளங்களில் இப்போதே நீங்கள் ஆர்டர் செய்ய முடியும். 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Nokia Lumia 520 Specifications

Operating System Microsoft Windows Phone 8
Display 4 inch (800 x 480 pixels) IPS LCD capacitive touchscreen with Multi touch facility
Processor 1 GHz dual-core processor
RAM 512MB RAM
Internal Memory 8GB
External Memory microSD, up to 64 GB
Camera Rear Camera: 5  MP, autofocus
Battery 1430 mAh Li-Ion Battery with 14 hrs talk time and 360 hrs standby time
Features 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS,  Micro USB 2.0 connector

*விலை Update செய்த தேதி ஏப்ரல் 04, 2013

நன்றி - Specs Of All

- பிரபு கிருஷ்ணா

கற்போம் ஏப்ரல் மாத இதழ் - Karpom April 2013

கற்போம் ஏப்ரல் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்ட புது நுட்பம் பகுதியில் கட்டுரைகள் கிடைப்பதில் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. எனவே இந்த மாதம் முதல் அதில் கடந்த மாதங்களில் வெளியான மொபைல் போன்களில் சிறந்த மூன்றையும் அவற்றின் விவரம், விலை போன்றவற்றையும் வெளியிடத் தீர்மானித்துள்ளேன்.

இந்த மாத கட்டுரைகள் : 


  1. ஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்
  2. பதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்
  3. பேஸ்புக் – எரிச்சலூட்டும் தொல்லைகளும் தீர்வுகளும்
  4. இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்
  5. பிட்.. பைட்... மெகாபைட்....!
  6. பேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி?
  7. GOOGLE PLAY MOVIES தற்போது இந்தியாவிலும்
  8. புது நுட்பம் – தொடர்
  9. தமிழில் போட்டோஷாப் – 4
தரவிறக்கம் செய்ய:


இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம் 

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும். 

- பிரபு கிருஷ்ணா