மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்துள்ளது Xolo நிறுவனத்தின் புதிய போன் Xolo X1000. முதன் முதலாக 2Ghz Intel Atom Processor வந்துள்ள இது ரூபாய் 19,999* க்கு ஆன்லைன் தளமான Flipkart-இல் கிடைக்கிறது இதன் தகவல்களை காண்போம்.
Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v4.0.4 (Ice Cream Sandwich) - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது.இதன் மூலம் Full HD Video Recording செய்ய முடியும். LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது. அதே போல முன்னாலும் ஒரு 1.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.
இது 4.7 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Ambient Light, Magnetometer, Accelerometer, Proximity, Gyroscope ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.
இது 1 GB RAM மற்றும் 2Ghz Intel Atom Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 8GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1900 mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் Standby Time 2G இணைப்பில் 336 மணி நேரம். Talk Time 2G மற்றும் 3G இரண்டிலும் 9 மணி நேரம்.
இந்த போனில் Full HD வீடியோக்களை பார்க்க முடியும் வசதி உள்ளது.அத்தோடு இதன் 400 MHz GPU (Graphics Processing Unit) விளையாட்டு பிரியர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் என்று சொல்லப்படுகிறது.
இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.
இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
Xolo X1000 Specifications
Xolo X1000 Specifications
Operating System | Android v4.0.4 (Ice Cream Sandwich) |
Display | 4.7 inch (1280 x 720 Pixels) TFT LCD Capacitive Touchscreen |
Processor | 2 GHz Intel Atom Processor with Hyper Threading Technology |
RAM | 1GB RAM |
Internal Memory | 8GB |
External Memory | microSD, up to 32 GB |
Camera | Rear Camera: 8 MP, autofocus, LED flash |
Front Camera: 1.3 MP | |
Battery | 1900 mAh |
Features | 3G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector |
கற்போம் Review:
Xolo X1000 கிட்டத்தட்ட Samsung Galaxy Grand-க்கு இணையான அளவு வசதிகளை கொண்டுள்ளது. சந்தையில் Grand வாங்க நினைப்பவர்களின் மற்றொரு விருப்பமாக இது அமையக்கூடும். அதே சமயம் 20,000 ரூபாய்க்கு Intel Processor மட்டுமே Grand - ஐ விட சிறந்ததாக உள்ளது.
மற்றபடி பயனர்களை ஈர்க்கும் வண்ணம் புதியதாக வேறு எதுவும் இல்லை. விலை குறைந்தால் வாங்கலாம்.
Xolo X1000 மற்றும் Samsung Galaxy Grand இரண்டின் ஒப்பிடல் இங்கே Xolo X1000 vs Samsung Galaxy Grand
- பிரபு கிருஷ்ணா
6 comments
like
Replyநன்றிங்க
ReplyBathil.com website open aaga maatengudhu, yen boss?
Replyஹோஸ்டிங் பிரச்சினையால் தளம் முடங்கி விட்டது. கூடிய விரைவில் மீண்டும் செயல்படத் தொடங்கும்.
Replymigundha edhirparpudan...
Replymigundha edhirpaarpudun...
ReplyPost a Comment