விண்டோஸில் File Extension – களை மாற்றுவது எப்படி?

Image Credit
www.vectorstock.com 

சில நேரங்களில் நமக்கு நாம் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட File ஒன்றின் Extension -ஐ மாற்ற வேண்டி வரும். உதாரணமாக ஜிமெயிலில் நம்மால் .exe போன்ற File களை இணைத்து மின்னஞ்சல் செய்ய முடியாது. அப்போது Extension -ஐ மாற்றி நாம் மின்னஞ்சலில் Attach செய்ய முடியும்.

இதே போல பல சமயங்களில் File Extension மாற்ற வேண்டி வரும். எப்படி மாற்றுவது என்று பார்ப்போம். 

Windows XP Users: 
1. ஏதேனும் ஒரு Folder ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்போது  Menu வில் Tools என்பதை கிளிக் செய்து Folder Options என்பதை கிளிக் செய்யுங்கள். 
2. இப்போது வரும் சிறிய விண்டோவில் View Tab – இல் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்து விடுங்கள். 
ஏற்கனவே Uncheck ஆகி இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள். 
3. இப்போது குறிப்பிட்ட File ஐ Rename செய்யும் போது Extension என்ன உள்ளதோ அதை உங்கள் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். 
Windows 7 Users: 
Organize>> Folder and Search options>> View( in the pop up window) இதில் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்ய வேண்டும். 
Windows 8 Users: 
View >> File Name Extensions என்பதை Check செய்ய வேண்டும். [கவனிக்க இதில் Enable செய்ய வேண்டும்.]

அவ்வளவே. இதே போல எந்த File க்கு வேண்டும் என்றாலும் மாற்றலாம். தேவைப்படும் போது மீண்டும் ஒரிஜினல் Format க்கு மாற்றிக் கொள்ளலாம்.  
தெரியும் File Extension ஐ மறைக்க மேலே சொல்லி உள்ளபடி வந்து இப்போது முன்பு இருந்ததை போல மாற்றி விட வேண்டும்.

நன்றி – FAQ in Tech

- பிரபு கிருஷ்ணா
  • http://www.blogger.com/profile/05232943809680695408 திண்டுக்கல் தனபாலன்

    பயனுள்ள தகவல்…

    மிக்க நன்றி…

  • http://www.blogger.com/profile/08453862450427701604 சீனு

    கணினி பற்றி ஆரம்ப அறிவு உள்ளவர்களுக்கு உபயோகமான பதிவு

  • http://www.blogger.com/profile/07276089011670790153 perumal karur

    நல்ல தகவல் நன்றிங்க

  • http://www.blogger.com/profile/00895343797588608185 Uzhavan Raja

    தகவல் பரிமாற்றத்திற்கு நன்றி நண்பா..

  • Anonymous

    Could you publish a article related to virtual setup (vmware). like windows xp and 7 or linux and windows 7

  • Kirubashankar

    Thanks for the information

  • http://www.blogger.com/profile/01902022015630295592 Satham hosain

    Thanks for the information