பேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி? | கற்போம்

பேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி?

பேஸ்புக் என்பது இன்று இணையத்தில் இயங்குபவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தினமும் பதிவுகளை பகிரும் போது குறிப்பிட்ட சிலருக்காக நாம் சில பதிவுகளை பகிராமல் போகலாம். அம்மாதிரியான பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் மறைத்து மற்ற அனைவருக்கும் தெரியும் படி செய்வது எப்படி எப்படி என்று பார்ப்போம். 

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், அலுவலகத்தில் இருக்கும் போது பேஸ்புக் பயன்படுத்தினால் மேலாளருக்கு மட்டும் நாம் போடும் பதிவுகள் தெரியக்கூடாது என்று விரும்பினால் அவ்வாறு செய்யலாம். 

முதலில் குறிப்பிட்ட பதிவை எழுதி முடியுங்கள். அதன் பின் கீழே படத்தில் உள்ளது போல Public என்பதை கிளிக் செய்யுங்கள்.சிலருக்கு அது Friends என்று இருக்கக் கூடும். வரும் Drop-Down மெனுவில் Custom என்பதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது வரும் பகுதியில் "Don't share this with These people or lists" என்பதில் குறிப்பிட்ட நபர்களின் பெயரை கொடுக்க வேண்டும். நீங்கள் ஒரு List வைத்திருந்தால் அப்படியும் கூட தரலாம். 



ஒரு சில நபர்கள் மட்டும் என்றால் ஒவ்வொரு பெயராக கொடுங்கள். 

நிறைய பேர் என்றால் அவர்களை ஒரு லிஸ்ட் போட்டு கொள்ளுங்கள்.பின்னர் லிஸ்ட் பெயரை தெரிவு செய்தால் அதில் இருக்கும் நபர்களுக்கு நீங்கள் பகிரும் போஸ்ட் தெரியாது. 


இதை முடித்து விட்டு Save Changes கொடுத்து விட்டு Post செய்து விட்டால் வேலை முடிந்தது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் போஸ்ட் தெரியாது. 

- பிரபு கிருஷ்ணா

14 comments

விளக்கத்திற்கு மிக்க நன்றி...

Reply

நான் தேடிய விவரம் ..மிக்க நன்றி

Reply

பயனுள்ள பதிவு சகோ.!

Dont Share with "Abdul Basith"

:) :) :)

Reply

அருமையான விளக்கப்பதிவு! மிக்கநன்றி!

Reply

நன்றி நன்றி :-)

Reply
This comment has been removed by the author.

இனிமேல் மறைச்சுட வேண்டியதுதான்..நன்றி நண்பா..

Reply

Ithai mobila panna mudiyuma
Senthil

Reply

ஓ..... அருமையான தகவல்.......

எனக்கு இப்படி ஒரு சூழல் பேஸ்புக்கில் ஏற்படாது....

Reply

தொடருபுக்கு வந்தால் error வரகிறது
நிங்கள் அனுப்பிய மெயில்லை கொண்டு டிக்கெட் கான்செல் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன்
1.my transactions
2.cancel e-ticket/refund click
3.go for cancellation
4.select for cancel
5.cancel ticket
6.aru you sure want to cancel the e-ticket
7.ok
8.கரெக்டா என்று செல்லுவும்

Reply

எஸ் கரெக்ட்.

Reply

THANK YOU VERY MUCH PRABHU

Reply

மிக்க நன்றி.. சகோ!

மிக பயனுள்ள பதிவு

Reply

Post a Comment