4 புதிய குறைந்த விலை Samsung Touch Mobile-கள் | கற்போம்

4 புதிய குறைந்த விலை Samsung Touch Mobile-கள்


என்னதான் Samsung நிறுவனம் அதிகமான Android பயனர்களை கொண்டிருந்தாலும், Nokia மற்றும் Micromax போல அதனால் மற்ற மாடல் போன்களை இந்தியாவில் வெற்றி பெற வைக்க முடியவில்லை. Nokia, Micromax போன்றவை மிகக் குறைந்த விலைக்கு போன்களை தருவது தான் இதற்கு காரணம். இந்த நிலையில் அவற்றின் போட்டியை சமாளிக்க இன்று நான்கு புதிய குறைந்த விலை Touch Mobile-களை அறிமுகம் செய்துள்ளது Samsung நிறுவனம். அவற்றை பற்றி பார்ப்போம்.

இவை REX Series என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. REX 60, REX 70, REX 80 மற்றும் REX 90 ஆகிய நான்கும் தான் தற்போது வந்துள்ள போன்கள். இவற்றின் விலை 4280 ரூபாயில் இருந்து 6400 ரூபாய்க்குள் உள்ளது. குறைந்த விலை என்பதால் Android மற்றும் 3G வசதிகள் இதில் எந்த போனிலும் கிடையாது. அனைத்து போன்களும் Dual Sim வசதி உடையவை, 10 Gameloft Full Version Game களை இலவசமாக கொண்டுள்ளன.

Samsung REX 90:
பட்டியலில் விலை அதிகமான மொபைல் இது தான். இதன் விலை ரூபாய் 6400* ஆக இருக்கும். இது 3.5 inch Capacitive Touch Screen, 3.2 MP கேமரா, WiFi வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் 1000 mAh பாட்டரி 15 மணி நேர Talk Time தரும்.

மேலும் விவரங்களுக்கு - Samsung Rex 90 Specifications, Price and Release Date

Samsung REX 80:

இதன் விலை ரூபாய் 5500* என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 3 inch Capacitive Touch Screen, 3.2 MP கேமரா, WiFi வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் 1000 mAh பாட்டரி 14.7 மணி நேர Talk Time தரும்.

மேலும் விவரங்களுக்கு - Samsung Rex 80 Specifications, Price and Release Date


Samsung REX 70:

இதன் விலை ரூபாய் 4500* என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 3.5 inch Capacitive Touch Screen, 2 MP கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் 1000 mAh பாட்டரி 13 மணி நேர Talk Time தரும்

மேலும் விவரங்களுக்கு - Samsung Rex 70 Specifications, Price and Release Date


Samsung REX 60:

இதன் விலை ரூபாய் 4280* என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2.8  inch Resistive Touch Screen, 1.3 MP கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் 1000 mAh பாட்டரி 15 மணி நேர Talk Time தரும்.

மேலும் விவரங்களுக்கு - Samsung Rex 60 Specifications, Price and Release Date

கற்போம் Review: 

REX 60, REX 70 ஆகிய இரண்டும் மிகக் குறைந்த வசதிகளையே கொண்டுள்ளன. குறிப்பாக REX 60 Resistive Touch Screen என்பது ஒரு மிகப் பெரிய குறை. இதன் இரண்டின் விலை இன்னும் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம்.

REX 80 மற்றும் REX 90 ஆகிய இரண்டும் சரியான விலையை கொண்டுள்ளன. Wi-Fi வசதி இருப்பது மிக முக்கியமான பிளஸ் பாயிண்ட்.

Smartphone களை விரும்பாதவர்கள் இவற்றை வாங்கலாம்.

* - மொபைல் போன் விலை Update செய்த தேதி - 14-02-2013

- பிரபு கிருஷ்ணா

2 comments

தகவலுக்கு நன்றி சகோ.!

Reply

High Price for the basic models

Reply

Post a Comment