படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி? | கற்போம்

படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?


தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம். 

இதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Size மட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமே Upload செய்ய  முடியும். 


மேலே உள்ள படத்தின் ஒரிஜினல் சைஸ் 2.4 MB. JPEGmini இதனை 500KB அளவுக்கு குறைத்துள்ளது.

இதே போல உங்கள் ஒரிஜினல் படத்தின் Size பொறுத்து Compress ஆகி குறைந்த Sizeக்கு கிடைக்கும். உத்தேசமாக கீழே உள்ளபடி படத்தின் அளவு குறைக்கப்படும்.


JPEG Photo Resolution

Typical JPEGmini file size reduction

8 MP and higher

70 - 80%

3 - 7 MP

50 - 70%

1 - 2 MP

40 - 60%

Lower than 1 MP

30 - 50%

JPEGmini என்ற தளத்திற்கு சென்று Try It Now என்பதை கிளிக் செய்து படங்களை Upload செய்யலாம். ஒவ்வொரு படமாக செய்ய விரும்புபவர்கள் தளத்தில் Signup செய்ய தேவை இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களை Size குறைக்க விரும்பினால் அந்த தளத்தில் இலவசமாக Sign Up செய்து மொத்தமாக நிறைய படங்களை Upload செய்து அளவை குறைக்கலாம். ஒரே சமயத்தில் 1000 படங்கள் வரை Upload செய்யலாம். Image Size 200MB க்குள் இருக்க வேண்டும்.

படம் Size குறைக்கப்பட்ட பின் Download Photo என்பதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

முகவரி -  JPEGmini

- பிரபு கிருஷ்ணா

17 comments

பயனுள்ள தகவல் சகோ.! மொபைலில் எடுக்கும் படங்களின் அளவு 1MB-யை விட அதிகமாக உள்ளது.

Reply

இதைத் தான் ரொம்ப நாளா தேடினேன் உங்கள் தயவால் கிட்டியது, நன்றிகள் !

Reply

நன்றி... பயன்படுத்திப் பார்க்கிறேன்...

Reply

Thagavalukku nantri inaiya inaippu ilatharathil ithai payanpadutha iyalaathu so exe file vadivil kidaithaal nalam. Namathu potokalai inaiyathil upload seiyathu paathukaakalaam...

Reply

பயனுள்ள தகவல்! பகிர்வுக்கு நன்றி!

Reply

பயனுள்ளா தகவல்கள். நிச்சியம் உதவியாக இருக்கும்

Reply

பயனுள்ள தகவல்

Reply

நல்ல தகவல்... நான் FastStone Photo Resizer உபயோகிக்கிறேன்... அதுவும் நன்றாக இருக்கிறது...

Reply

தரமோ அளவோ குறையாமல் மென்புகைப்படங்களில் நீர்முத்திரை-வாட்டர்மார்க்- இடும் வசதியைத் தரும் மென்பொருள் ஏதாவது இருக்கிறதா? நன்றி

Reply

Paint, Paint.NET, Photoshop மென்பொருட்கள் தான் சிறந்தவை

Reply

thangaludaiya pani sirakka vaazhththukkal
nandri
surendran
surendrnath1973@gmail.com

Reply

நல்ல உபயோகமான தகவல் . நன்றி

Reply

THANKS FOR UR INFORMATION

Reply

சகோ 200mb என்பதில் சிறு ஐயம் விளக்கவும்

Reply

ஒன்றோ அல்லது நிறைய எப்படி இருந்தாலும் இமேஜ் அளவு 200 MB.

Reply

Post a Comment