Google Image தேடுதலில் வந்துள்ள புதிய மாற்றங்களும் வசதிகளும் | கற்போம்

Google Image தேடுதலில் வந்துள்ள புதிய மாற்றங்களும் வசதிகளும்


கூகுள் தேடுதல் எந்த அளவுக்கு நமக்கு பயனுள்ளது, அதே அளவுக்கு பயனுள்ளது Google Images, நமக்கு வேண்டிய படங்கள் முழுவதையும் இணையத்தில் இருந்து தேடித் தரும் இது தற்போது சில சிறிய மாற்றங்களை செய்துள்ளது, அதன் மூலம் நமக்கு புதிய வசதிகளும் கிடைத்துள்ளது. அதைப் பற்றி இன்று பார்ப்போம். 

மாற்றம் 1:

சில மாதங்களுக்கு முன்பு Goolge Images தளத்தில் படங்களை தேடும் போது Search Tools என்னும் வசதி பக்கத்தின் இடது புறம் இருக்கும். இதில் படத்தின் Size, Color, Type போன்ற வசதிகளை நமக்கு தேவையானபடி தெரிவு செய்து கொள்ளலாம். 

இப்போது இந்த வசதி Search க்கு கீழேயே வந்து விட்டது. (காண்க கீழே படம்) 


Search Tools குறித்து அறியாதவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். 

இதன் மூலம் உங்களுக்கு தேவையான படத்தை சரியான நிறத்தில், அளவில், வகையில், தேட முடியும். இதனால் உங்கள் தேவைக்கேற்ற படத்தை நீங்கள் பெற முடியும். 

மாற்றம் 2: 

இந்த வசதி மிக அருமையானது என்று சொல்லலாம். முன்பெல்லாம் தேவையான படத்தின் மீது கிளிக் செய்தால் அது ஓபன் ஆகும் போது அதன் பின்னணியில் அது எந்த தளத்தின் உள்ளதோ அந்த தளம் வரும். 

இப்போது அப்படி இல்லாமல் கீழே உள்ளது போல வரும். [பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்]



இது Google Images பக்கத்திலேயே ஓபன் ஆகி உள்ளது. இதில் View Page என்பதை கிளிக் செய்தால் படம் பகிரப்பட்டுள்ள பக்கத்திற்கு சென்றுவிடும். View Original Image என்பதை கிளிக் செய்தால் படத்தின் முழு அளவும் Open ஆகும். Image Details என்பதை கிளிக் செய்தால் Image குறித்த தகவல்கள் மற்றும் Visually similar images சில புதிய பக்கத்தில் வரும்.

இந்த மூன்றும் மேலே உள்ளதில் படம் எந்த தளத்தில் உள்ளது, என்ன அளவு என்பது சொல்லப்பட்டு உள்ளதை காணலாம். 

இரண்டுக்கும் அடுத்து உள்ள More Sizes என்பது தான் இதில் அருமையான வசதி. அதை கிளிக் செய்தால் இப்போது காட்டப்படும் படத்தையே வெவ்வேறு அளவுகளில் இணையத்தில் இருந்து தேடி உங்களுக்கு காட்டும். இதனால் உங்களுக்கு தேவையான படம் கிடைத்த பின், அது உங்களுக்கு வேறு அளவில் வேண்டுமானால் இதை கிளிக் செய்து கிடைக்கிறதா என்று தேடலாம். 

அதை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல வரும். 


படங்கள் இரண்டும் வெவ்வேறு அளவிலானவை என்பது படத்தின் மேலேயே இருப்பதை காணலாம்.

புதிய வசதிகளை பயன்படுத்தி பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.

-பிரபு கிருஷ்ணா

6 comments

புதிய வசதி நன்றாக உள்ளது!

Reply

ஆமா பிரபு...

இந்த புதிய வசதி பற்றி அறிந்துள்ளேன். படங்கள் தேடுதலுக்கு மிக்க துணையாக இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி.

Reply

கட்டாயம் பர்த்துடறேன்.பயனுள்ள விஷயம்

Reply

புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது...

Reply

ம்ம்ம்....

Reply

பயன்படுத்த நல்லா இருக்குங்க..

Reply

Post a Comment