விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி?

கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது. 

இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது. 
அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம். 
முதலில் இந்த இணைப்பில் சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack – LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும். 
இது உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்யும் போது கீழே உள்ளது போல வரும்.

இதில் Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.

இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து “Apply display language to welcome screen and system accounts” என்பதை கிளிக் செய்து “Change Display Lanugage” என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.

இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.

தமிழில் டெஸ்க்டாப்

தமிழில் ஸ்டார்ட் மெனு

இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.

மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் “விசைப்பலகைகளும் மொழிகளும்” என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்):  Control Panel >>   Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.

- பிரபு கிருஷ்ணா
  • http://www.blogger.com/profile/07286829313885219000 Abdul Basith

    பயனுள்ள தகவல், நன்றி சகோ.!

  • http://www.blogger.com/profile/15721926610856465335 T.N.MURALIDHARAN

    அருமையான பயன்பாடு. பயன்படுத்திப் பார்த்து விடுகிறேன். இதே போல் ஃஆபீஸ் 2003 ஐ ஒரு முறை பயன் படுத்தி இருக்கிறேன்.

  • http://www.blogger.com/profile/06723112617788817508 Srini Vasan

    நல்ல பயனுள்ள தகவல் ! என்ன பலருக்கு சுத்தமான தமிழ் மொழி தெரியாதே !!!!!!!!

  • http://www.blogger.com/profile/03406170062367552472 Amudhavan

    என்னுடைய லேப்டாப் டெல்லில் விண்டோஸ்-7தான் பொருத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் காஸ்பர்பை என்ற ஆன்ட்டிவைரஸ் பொருத்தினேன். இப்போது என்னவென்றால் தமிழில் டைப் செய்ய NHM சாப்ட்வேரை அனுமதிக்கமாட்டேன் என்கிறது. எனக்குத் தெரிந்த சாப்ட்வேர் நண்பர்கள் என்னென்னமோ செய்துபார்த்துவிட்டார்கள். சம்பந்தப்பட்ட சாப்ட்வேரைப் புதிதாகத் தரவிறுக்கும்போது செய்யவேண்டிய ignore ஐ உபயோகித்தும் பார்த்துவிட்டார்கள். ஒருவேளை விண்டோஸ்7 இதனை அனுமதிக்கவில்லையா என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. இதற்கான தீர்வைத் தெரிவித்தீர்களானால் நன்றியுடையவனாயிருப்பேன்.
    அன்புடன்,
    அமுதவன்.
    எனது மெயில் முகவரி;amudhavan6@gmail.com

    • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

      விண்டோஸ் 7 – இல் எந்த பிரச்சினையும் இருக்காது. என்ன Error வருகிறது என்று சொல்ல முடியுமா?

  • http://www.blogger.com/profile/08677157441390654415 k.p.yogaraajan

    creat

  • http://www.blogger.com/profile/07276089011670790153 perumal karur

    தகவலுக்கு நன்றிங்க…

  • http://www.blogger.com/profile/04820130074309627754 அ.குரு

    Dear Brother many many thanks to u , for sharing this post . Now i am download tamil interface after using i will tel about tamil interface . Once again thanking to karpom Team.

  • http://www.blogger.com/profile/00275555432593779127 Mohanadoss J

    இது ஒரிஜினல் விண்டோஸ் க்கு மட்டும் பொருந்துமா? அல்லது சாப்ட்வேர் நண்பர்கள் போட்டுக்கொடுக்கும் விண்டோஸ்க்கும் பொருந்துமா? அதாவது நிறைய கம்யூட்டருக்கு ஒரே காப்பி போடுவார்களே அது.

    • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

      பயன்படுத்தலாம்.

  • http://www.blogger.com/profile/10833930134338651746 malar balan

    என் கணணியில் விண்டோ 7 -ன் போட்டால் ப்ரௌச பண்ண வேலை செய்ய முடிய வில்லை எப்போதும் ஷட்டொவ்ன் ஆகி ரீ ஸ்டார்ட் ஆகிறது ஏனென்று புரியவில்ல யாருக்கும். வாங்கி 2 வருடம் தான் ஆகிறது .சொனார்கள் என்று புது ரேம் கூட வாங்கி போடாகிவிட்டது ஆனாலும் உபயோகமில்லை எக் ஸ்பி மட்டுமே எடுக்கிறது

    • http://www.blogger.com/profile/09807298680261445497 Prabu Krishna

      உங்கள் கணினியில் என்ன பிரச்சினை என்று அறியாமல் தீர்வு சொல்வது கடினம். நீங்கள் கணினி வாங்கிய கடையை அணுகி உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள் தீர்வு கிடைக்கும்.