February 2013 | கற்போம்

BlackBerry Z10 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


கடந்த மாதம் BlackBerry 10 OS உடன் வரும் முதல் மொபைலான Z10-ஐ அறிவித்தது Blackberry நிறுவனம். இதன் தற்போதைய விலை ரூபாய் 43490*.இதைப் பற்றிய விவரங்களை காண்போம். 

BlackBerry 10 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 3264 x 2448 pixels அளவுக்கு போட்டோவும்,  Full HD (1080P) வீடியோவும் எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging, Continuous Auto-Focus, Image Stabilization, Face Detection போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும் 2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம். 

இது 4.2 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Gyro, Proximity, Compass ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 2 GB RAM மற்றும் 1.5 GHz Dual Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 16GB மற்றும் 64 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1800 mAh பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

BlackBerry Z10 Specifications

Operating System BlackBerry 10 OS
Display 4.2 inches (768 x 1280 pixles) of  Capacitive Touch Screen
Processor 1.5GHz Krait Dual-core processor
RAM 2 GB
Internal Memory 16 GB
External Memory microSD (up to 64GB)
Camera 8 MP Rear Camera with LED Flash & 2 MP Front Camera
Battery Li-Ion 1800 mAh
Features 3G, 4G, Bluetooth, Wi-Fi, GPS, Java, NFC, Micro USB

கற்போம் Review: 

BlackBerry போன்கள் எப்போதும் விலை அதிகமாகவே இருக்கும். கொடுக்கும் 43,000 த்துக்கு BlackBerry 10 OS மட்டுமே புதியதாக தெரிகிறது. ஸ்டைலிஷ் ஆக போன் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.

* - விலை Update செய்த தேதி 28-02-2013.

நன்றி - Tech Hints

- பிரபு கிருஷ்ணா

படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?


தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம். 

இதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Size மட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமே Upload செய்ய  முடியும். 


மேலே உள்ள படத்தின் ஒரிஜினல் சைஸ் 2.4 MB. JPEGmini இதனை 500KB அளவுக்கு குறைத்துள்ளது.

இதே போல உங்கள் ஒரிஜினல் படத்தின் Size பொறுத்து Compress ஆகி குறைந்த Sizeக்கு கிடைக்கும். உத்தேசமாக கீழே உள்ளபடி படத்தின் அளவு குறைக்கப்படும்.


JPEG Photo Resolution

Typical JPEGmini file size reduction

8 MP and higher

70 - 80%

3 - 7 MP

50 - 70%

1 - 2 MP

40 - 60%

Lower than 1 MP

30 - 50%

JPEGmini என்ற தளத்திற்கு சென்று Try It Now என்பதை கிளிக் செய்து படங்களை Upload செய்யலாம். ஒவ்வொரு படமாக செய்ய விரும்புபவர்கள் தளத்தில் Signup செய்ய தேவை இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களை Size குறைக்க விரும்பினால் அந்த தளத்தில் இலவசமாக Sign Up செய்து மொத்தமாக நிறைய படங்களை Upload செய்து அளவை குறைக்கலாம். ஒரே சமயத்தில் 1000 படங்கள் வரை Upload செய்யலாம். Image Size 200MB க்குள் இருக்க வேண்டும்.

படம் Size குறைக்கப்பட்ட பின் Download Photo என்பதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

முகவரி -  JPEGmini

- பிரபு கிருஷ்ணா

நோக்கியாவின் நான்கு புதிய போன்கள் - Nokia 105, 301, Lumia 520, Lumia 720


நேற்று தொடங்கிய MWC எனப்படும் Mobile World Congress மாநாட்டில் பல மொபைல் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. முழுக்க முழுக்க மொபைல் பற்றிய இந்த மாநாட்டின் முதல் நாளில்  இரண்டு ஸ்மார்ட் போன்கள், இரண்டு பட்ஜெட் போன்கள் என  நான்கு புதிய போன்களை வெளியிட்டுள்ளது நோக்கியா நிறுவனம். அவை பற்றிய விவரங்களை காண்போம். 

Nokia 105



மிகக் குறைந்த விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த போன். போனை வெறும் அழைப்புகளுக்கு பயன்படுத்தும் நபர்களுக்கு உகந்த மாடல் இது. FM Radio மற்றும் சில கேம்ஸ் உடன் வருகிறது. இதன் பாட்டரி 35 நாட்கள் Standby என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு - Nokia 105 Full Specifications

Nokia 301



குறைந்த விலையில் கேமராவுடன் வரும் போன் இது. 3.2 MP கேமராவுடன் வரும் இந்த போன் 3G வசதி உடையது குறிப்பிடதக்கது. அத்தோடு ப்ளூடூத், FM Radio வசதியும் இதில் உள்ளது. பட்ஜெட் போன் வாங்க விரும்பும் நபர்களுக்கு உகந்த போன். 

மேலும் விவரங்களுக்கு - Nokia 301 Full Specifications

Nokia Lumia 520


Microsoft Windows Phone 8 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த போன் 4.0 Inch IPS LCD capacitive touch screen உடன் வருகிறது.5 MP Camera, 1 GHz Dual-core Processor, 512 MB RAM, 8 GB Internal Memory போன்ற வசதிகளும் இதில் உள்ளது. 

மேலும் விவரங்களுக்கு - Nokia Lumia 520 Specifications

Nokia Lumia 720



இதுவும் Microsoft Windows Phone 8 இயங்கு தளத்தில் இயங்கும் போன். இது 4.7 Inch TFT capacitive touch screen உடன் வருகிறது.6.7 MP Camera, 1 GHz Dual-core Processor, 512 MB RAM, 8 GB Internal Memory போன்ற வசதிகளும் இதில் உள்ளது. 

மேலும் விவரங்களுக்கு - Nokia Lumia 720 Specifications

இவற்றில் எந்த போனும் இன்னும் வெளியிடப்படவில்லை. விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

நன்றி - Tech Hints & Specs Of All

- பிரபு கிருஷ்ணா

LG Optimus G E975 முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது LG Optimus G E975. மிக அதிகமான விலைக்கு Android Phone வாங்க விரும்புபவர்களுக்கு இது உகந்த ஒன்று. இதன் தற்போதைய விலை ரூபாய் 30990*.இதைப் பற்றிய விவரங்களை காண்போம். 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android OS, v4.1.2 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 13 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் Full HD (1080P) வீடியோ எடுக்க முடியும். LED Flash, Auto Focus, Geo-tagging, Face Detection, Image Stabilization போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும் 1.3 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4.7 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity, Compass, Gyro ஆகிய சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 2 GB RAM மற்றும் 1.5 GHz Quad Core Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 32GB. External Memory Card வசதி இதில் இல்லை.அத்தோடு இது 2100 mAh லித்தியம் பாலிமர் வகை பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G,4G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

LG Optimus G E975 Specifications

Operating System Android 4.1.2 (Jelly Bean)
Display 4.7-inch (1280 x 768 pixels) True HD IPS + Display with 15:9 aspect ratio
Processor 1.5GHz quad-core processor Qualcomm APQ 8064 processor with Adreno 320 GPU
RAM 2GB DDR2 RAM
Internal Memory 32GB
External Memory No
Camera Rear Camera:  13 MP, autofocus, LED flash

Front Camera: 1.3 MP
Battery Li-Po 2100 mAh
Features 3G, 4G, WiFi 802.11 b/g/n, Bluetooth, GPS, Java, Micro USB 2.0 connector

கற்போம் Review

13 MP கேமரா, 4G என்பது இதன் பெரிய பிளஸ் பாயிண்ட். அத்தோடு இன்டர்னல் மெமரி மற்றும் Processor இரண்டும் விலைக்கு உகந்ததாக உள்ளது. அதிக விலை கொடுத்து நல்ல போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த போன் இது. 

நன்றி - Specs Of All

* - விலை Update செய்த தேதி 25-02-2013.  
- பிரபு கிருஷ்ணா

இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer


ஆன்லைனில் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் தெரிந்த தளம் Flipkart. இது கடந்த ஆண்டு Flyte என்ற பெயரில் ஆன்லைன் மியூசிக் ஸ்டோர் ஒன்றை ஆரம்பித்தது. இதில் பணம் செலுத்தி புதிய பட, ஆல்பம் பாடல்களை நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். தற்போது இதன் முதல் பிறந்த நாளையொட்டி தினமும் பல பட,ஆல்பம் பாடல்களை இலவசமாக தரப்படுகின்றது.

இதில் உங்களுக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடா, மராத்தி, பெங்காலி மற்றும் பல மொழி பாடல்களை டவுன்லோட் செய்ய முடியும். இந்த Offer 28-02-2013 வரை உள்ளது. அதுவரை தினமும் 100 க்கும் மேற்ப்பட்ட ஆல்பங்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும். 

இதற்கு நீங்கள் Flipkart தள பயனராக இருக்க வேண்டும் . அதில் நுழைந்து நீங்கள் டவுன்லோட் செய்யலாம். உங்கள் பேஸ்புக் கணக்கின் மூலம் Log-in செய்தும் டவுன்லோட் செய்யலாம்.

அதற்கான முகவரி - Flyte Birthday


Flyte Application மூலமும் பாடல்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும். இதன் Application இணைப்புகள் கீழே உள்ளன. 

நான் என்னுடைய போனில் இருந்து எடுத்த Screenshot 





- பிரபு கிருஷ்ணா

உங்கள் ட்விட்டர் ட்வீட்டுகள் அனைத்தையும் டவுன்லோட் செய்ய புதிய வசதி


சமூக வலைத்தளங்கள் நித்தமும் ஏதேனும் செய்து தங்கள் பயனர்களை கவர நினைக்கிறார்கள். அதன்படி பேஸ்புக், கூகுள் பிளஸ் க்கு அடுத்தபடியாக உள்ள ட்விட்டர் தளம் சில வாரங்களுக்கு முன்பு நமது ட்விட்டர் கணக்கில் நாம் ட்வீட்டிய அனைத்து ட்வீட்களையும் டவுன்லோட் செய்யும் புதிய வசதியை வழங்கியது. இது இப்போது அனைவருக்கும் கிடைக்கத் தொடங்கி உள்ளது. 

இதை செய்ய உங்கள் ட்விட்டர் கணக்கில் நுழைந்து Settings பகுதிக்கு வரவும். 


இப்போது வரும் பக்கத்தை Scroll செய்து கீழே வந்தால் Request Your Archive என்று ஒரு வசதி உங்களுக்கு இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது உங்கள் ட்விட்டர் தகவல்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும். நீங்கள் ட்விட்டர் தளத்தில் Register செய்த மின்னஞ்சலில் அது கிடைக்கும். அது கீழே உள்ளது போல இருக்கும். 


அதில் உள்ள Go Now என்பதை கிளிக் செய்தால் ஒரு Zip File டவுன்லோட் ஆகும். 

அதை Extract செய்தால் உங்களுக்கு கிடைக்கும் Excel மற்றும் ஒரு HTML File மூலம் உங்கள் ட்வீட்களை நீங்கள் காணலாம். உங்கள் ட்வீட்கள் பெரும்பாலும் தமிழ் என்றால் HTML File -ஐ ஒரு Browser -இல் ஓபன் செய்யுங்கள். அது கீழே உள்ளது போல இருக்கும். 


நீங்கள் ட்விட்டர் தளத்தில் இதுவரை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ட்வீட்கள் ட்வீட்டி உள்ளீர்கள் என்ற தகவலுடன் உங்களின் எல்லா ட்வீட்களையும்யும் நீங்கள் பார்க்கலாம். அதில் View in Twitter என்பதை கிளிக் செய்து அவற்றை ட்விட்டர் தளத்தில் காணலாம், இதன் மூலம் அதற்கு வந்துள்ள Retweet, Reply, Favourite போன்றவற்றையும் காணலாம். 

- பிரபு கிருஷ்ணா

Micromax Funbook P600 - Voice Call வசதியுடன் உள்ள Android Tablet


Smartphone போலவே Tablet வாங்கவும் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கு உகந்த வகையில் பல நிறுவனங்கள் Tablet - களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவின் Micromax நிறுவனம் இதுவரை பல Tablet களை வெளியிட்டுள்ளது. தற்போது அதன் புதிய வெளியீடு Micromax Funbook P600. Voice Call வசதியுடன் வரும் இந்த Android Tablet விலை 9499 ரூபாய்* என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விபரங்களை பார்ப்போம். 

370 கிராம் எடையுடைய இந்த Tablet கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.0 Ice Cream Sandwich - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 2 MP மெயின் கேமராவை பின்னால் கொண்டுள்ளது. அதே போல முன்னாலும்  ஒரு கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 7 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது.

இது 512 MB RAM, 4 GB ROM மற்றும் 1 GHz Cortex-A5 Dual Core கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 2GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Lithum Polymer வகை பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, Wi-Fi. HDMI Port போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே

Micromax Funbook P600 Specifications

Operating System Android OS 4.0.4 (Ice Cream Sandwich)
Display 7.0-inch (480 x 800 pixels) TFT Capacitive Touch screen,16 M Colors
Sim Card Yes, Voice call supported
Processor 1 GHz Cortex-A5 Dual Core Processor
RAM RAM 512 MB, ROM 4 GB
Internal Memory 2 GB
External Memory microSD (up to 32GB)
Camera 2 MP  Rear Camera, Front camera also available
Battery Lithum Polymer battery. Stand By Time: 224 hrs & Browsing Time: 4 hrs
Features  3G, HDMI, Wi-Fi, Micro USB v2.0

கற்போம் Review:

Voice Call Support இருப்பதால் தான் விலை கொஞ்சம் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன். மற்றபடி சாதாரண Tablet தான் இது. கொஞ்சம் விலை குறைவாக இருந்தால் வாங்கலாம். 

* - விலை Update செய்த தேதி 20-02-2013. 

நன்றி- Specs Of All

- பிரபு கிருஷ்ணா

Karbonn Smart A12 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


இந்திய மொபைல் நிறுவனங்களில் Micromax க்கு போட்டியாக கருதப்படும் நிறுவனம் Karbonn.சாதாரண போனில் ஆரம்பித்து ஸ்மார்ட்போன்களிலும் இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு  புதிய மாடல்களை வெளியிடுகின்றன. அந்த வரிசையில் புதிய போன் தான் Karbonn Smart A12. இதன்  விலை 7990 ரூபாய்* என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதைப் பற்றிய விவரங்களை காண்போம்.

இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.0 Ice Cream Sandwich - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 5 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 2592 x 1936 pixels அளவுக்கு போட்டோ எடுக்க முடியும். LED Flash, Auto Foucs, Geo-tagging போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும்  ஒரு கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 4.5 Inch Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 512 MB RAM, 4 GB ROM மற்றும் 1 GHz Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 1800 mAh பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே 

Karbonn Smart A12 Specifications

Operating System Android 4.0 (Ice Cream Sandwich)
Display 4.5 inch  qHD Capacitive Touch screen with 540 ×960 pixels
Processor 1GHz Processor
Dual Sim Yes, GSM+GSM and Dual Standby
RAM 512 MB RAM, 4 GB ROM
Internal Memory 4 GB
External Memory Yes, microSD, upto 32 GB
Camera Rear Camera  - 5 MP, Front Camera – Yes
Battery 1800 mAh
Features GPRS, EDGE, 3G, Bluetooth, Wi-Fi, Micro USB 2.0 connector

கற்போம் Review:

மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் 5MP கேமரா உடைய போன் இது. 512 MB RAM என்பது மட்டும் இதில் ஒரு குறை. மற்றபடி குறைந்த விலை போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு உகந்த மாடல் மற்றும் விலை.

* - விலை Update செய்த தேதி 20-02-2013.  


- பிரபு கிருஷ்ணா

Facebook Game மற்றும் Application அழைப்புகளை தடுப்பது எப்படி?


பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை நம் நண்பர்கள் ஏதேனும் Application அல்லது Game பயன்படுத்தும் போது நமக்கும் அதை பயன்படுத்த சொல்லி Invite வருவது. அது போன்ற அழைப்புகளை எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.

உங்களுக்கு வரும் Invite கீழே உள்ளது போல இருக்கும்.


இப்போது நீங்கள் இரண்டு விசயங்களை Block செய்யலாம் ஒன்று Invitation அனுப்பும் நபரை அது அனுப்ப இயலாதவாறு செய்யலாம். இதனால் அவர் உங்கள் நண்பர்கள் லிஸ்டில் இருப்பார், உங்கள் status களை அவரால் பார்க்க முடியும். அவரால் உங்களுக்கு எதுவும் Game, Application Request அனுப்ப இயலாது அவ்வளவே.

இரண்டாவது குறிப்பிட்ட Game அல்லது Application- ஐ Block செய்வது. இதனால் யார் அந்த Game அல்லது Application invite அனுப்பினாலும் உங்களுக்கு வராது.

நான் பரிந்துரைப்பது முதலாவது. வேண்டும் என்றால் இரண்டாவதையும் நீங்கள் செய்து கொள்ளலாம்.

இப்போது Facebook >> Privacy Settings பகுதிக்கு வரவும் (காண்க கீழே படம்)



வரும் பக்கத்தின் இடது புற Side Bar பகுதியில் Blocking என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது Manage Blocking என்ற இந்த பக்கத்தில் "Block app invites" என்ற பகுதியில்  Invite அனுப்பும் நண்பரின் பெயரை கொடுக்க வேண்டும். இதனால் இனிமேல் அவரிடம் இருந்து உங்களுக்கு Invite எதுவும் வராது.


அடுத்து "Block Apps" என்ற பகுதியில் குறிப்பிட்ட Application அல்லது Game பெயரை கொடுத்து அவற்றையும் Block செய்யலாம்.


அவ்வளவு தான் இனி Game, Application  என எந்த தொல்லையும் இல்லாமல் பேஸ்புக்கில் உங்கள் வேலையை பார்க்கலாம்.

பின் குறிப்பு: இதே பக்கத்தில் நீங்கள் Event Invite அனுப்பும் நபர்களை கூட Block செய்யலாம். "Block event invites" என்ற பகுதியில் அதை செய்யலாம்.

- பிரபு கிருஷ்ணா

Lava Xolo A1000 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


தினம் தினம் ஒரு Android மொபைல் வெளிவரும் இந்த வருடத்தில் சமீபத்திய வரவு Lava Xolo A1000. அசத்தலான வசதிகளுடன் வந்துள்ள இந்த போனின் விலை ரூபாய் 13999* என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை காண்போம். 

இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. வெள்ளை வண்ணத்தில் கிடைக்கிறது. 

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android OS, v4.1 Jelly Bean Version - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 8 MP மெயின் கேமராவை கொண்டுள்ளது, இதன் மூலம் 3264 x 2448 pixels அளவுக்கு போட்டோ எடுக்க முடியும். LED Flash, Auto Foucs, Geo-tagging, touch focus, face detection போன்ற வசதிகளும் இதில் உள்ளது.  அதே போல முன்னாலும் 1.2 MP கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 5.0 Inch IPS LCD Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 1 GB RAM, 4GB ROM மற்றும் 1 GHz Dual Core Processorr கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 4GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது 2100 mAh பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில். 

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே 

Lava Xolo A1000 Specifications

Operating System Android OS v4.1 Jelly bean
Display 5-inch IPS LCD Capacitive Touch screen with 1280 x 720 Pixels
Dual Sim Yes, GSM+GSM and Dual Standby
Processor 1 GHz Dual Core Processor
RAM 1 GB RAM, 4 GB ROM
Internal Memory 4 GB
External Memory Yes, microSD, upto 32 GB
Camera Rear Camera  - 8 MP, Front Camera – 1.2 MP
Battery 2100 mAh
Features GPRS, EDGE, 3G, Bluetooth, Wi-Fi, Micro USB 2.0 connector

கற்போம் Review: 

கிட்டத்தட்ட Micromax A116 Canvas HD போனின் Specifications (Processor தவிர) இது குறைந்த விலையில் அதிக வசதி உள்ள போனை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்தது.

* - விலை Update செய்த தேதி 18-02-2013. 

நன்றி - Tech Hints


- பிரபு கிருஷ்ணா

விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி?


கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது. 

இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது. 

அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

முதலில் இந்த இணைப்பில் சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Lanugage Interface Pack - LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும். 


இது உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்யும் போது கீழே உள்ளது போல வரும்.


இதில் Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.


இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து "Apply display language to welcome screen and system accounts" என்பதை கிளிக் செய்து "Change Display Lanugage" என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.

இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.

தமிழில் டெஸ்க்டாப்

தமிழில் ஸ்டார்ட் மெனு
இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.

மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் "விசைப்பலகைகளும் மொழிகளும்" என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்):  Control Panel >>   Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.

- பிரபு கிருஷ்ணா

Mario Parody - ஆன்ட்ராய்டு போனில் Mario Game


கம்ப்யூட்டரில் Mario விளையாட்டை விளையாடதவர்கள் யாரேனும் இருப்பார்களாக என்று நாம் கணக்கு போட்டால் அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அந்த அளவுக்கு நிறைய பேரை ரசிக்க வைத்த அருமையான விளையாட்டு Mario. 

கணினிகளில் தற்போது பல விளையாட்டுகள் வந்து விட நாம் பழைய Mario - வை மறந்து விட்டோம், ஆனால் இன்னும் பலர் அதை ரசிக்கத் தான் செய்கிறார்கள். இப்போது அதே போன்ற விளையாட்டு Android பயனர்களுக்கு வந்து விட்டது. 

Mario Parody என்ற பெயரில் உள்ள இந்த விளையாட்டு, அப்படியே Mario போலவே உள்ளது.இதை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். தற்போது சில புதிய கதாபாத்திரங்களும் இந்த விளையாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.


பல monster  களை அவற்றின் தலையில் குதித்து கொன்று விடலாம். சிலவற்றை அப்படி செய்ய முடியாது. அவற்றை விட்டு செல்லலாம், அல்லது நெருப்பை பயன்படுத்தலாம்.

தற்போது மொத்தமாக 45 லெவல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் முந்தயதை விட கடினமானது. இதன் அடுத்த வெர்சன் மார்ச் மாதம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்:

  • Size - 3.1 MB
  • Required - Android 2.1 and Up
  • App2SD - Yes
டவுன்லோட் செய்ய: 


அல்லது 

QR Code - ஐ ஸ்கேன் செய்யுங்கள் 



- பிரபு கிருஷ்ணா

4 புதிய குறைந்த விலை Samsung Touch Mobile-கள்


என்னதான் Samsung நிறுவனம் அதிகமான Android பயனர்களை கொண்டிருந்தாலும், Nokia மற்றும் Micromax போல அதனால் மற்ற மாடல் போன்களை இந்தியாவில் வெற்றி பெற வைக்க முடியவில்லை. Nokia, Micromax போன்றவை மிகக் குறைந்த விலைக்கு போன்களை தருவது தான் இதற்கு காரணம். இந்த நிலையில் அவற்றின் போட்டியை சமாளிக்க இன்று நான்கு புதிய குறைந்த விலை Touch Mobile-களை அறிமுகம் செய்துள்ளது Samsung நிறுவனம். அவற்றை பற்றி பார்ப்போம்.

இவை REX Series என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. REX 60, REX 70, REX 80 மற்றும் REX 90 ஆகிய நான்கும் தான் தற்போது வந்துள்ள போன்கள். இவற்றின் விலை 4280 ரூபாயில் இருந்து 6400 ரூபாய்க்குள் உள்ளது. குறைந்த விலை என்பதால் Android மற்றும் 3G வசதிகள் இதில் எந்த போனிலும் கிடையாது. அனைத்து போன்களும் Dual Sim வசதி உடையவை, 10 Gameloft Full Version Game களை இலவசமாக கொண்டுள்ளன.

Samsung REX 90:
பட்டியலில் விலை அதிகமான மொபைல் இது தான். இதன் விலை ரூபாய் 6400* ஆக இருக்கும். இது 3.5 inch Capacitive Touch Screen, 3.2 MP கேமரா, WiFi வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் 1000 mAh பாட்டரி 15 மணி நேர Talk Time தரும்.

மேலும் விவரங்களுக்கு - Samsung Rex 90 Specifications, Price and Release Date

Samsung REX 80:

இதன் விலை ரூபாய் 5500* என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 3 inch Capacitive Touch Screen, 3.2 MP கேமரா, WiFi வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் 1000 mAh பாட்டரி 14.7 மணி நேர Talk Time தரும்.

மேலும் விவரங்களுக்கு - Samsung Rex 80 Specifications, Price and Release Date


Samsung REX 70:

இதன் விலை ரூபாய் 4500* என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 3.5 inch Capacitive Touch Screen, 2 MP கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் 1000 mAh பாட்டரி 13 மணி நேர Talk Time தரும்

மேலும் விவரங்களுக்கு - Samsung Rex 70 Specifications, Price and Release Date


Samsung REX 60:

இதன் விலை ரூபாய் 4280* என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2.8  inch Resistive Touch Screen, 1.3 MP கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் 1000 mAh பாட்டரி 15 மணி நேர Talk Time தரும்.

மேலும் விவரங்களுக்கு - Samsung Rex 60 Specifications, Price and Release Date

கற்போம் Review: 

REX 60, REX 70 ஆகிய இரண்டும் மிகக் குறைந்த வசதிகளையே கொண்டுள்ளன. குறிப்பாக REX 60 Resistive Touch Screen என்பது ஒரு மிகப் பெரிய குறை. இதன் இரண்டின் விலை இன்னும் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம்.

REX 80 மற்றும் REX 90 ஆகிய இரண்டும் சரியான விலையை கொண்டுள்ளன. Wi-Fi வசதி இருப்பது மிக முக்கியமான பிளஸ் பாயிண்ட்.

Smartphone களை விரும்பாதவர்கள் இவற்றை வாங்கலாம்.

* - மொபைல் போன் விலை Update செய்த தேதி - 14-02-2013

- பிரபு கிருஷ்ணா

5GB வரை File-களை மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?


ஜிமெயில் பயனர்களுக்கு கூகுள் வழங்கும் வசதிகள் ஏராளமானது. அந்த வசதிகளுள் ஒன்று தான் 10 GB வரையிலான File - களை மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி. 

10 GB வரை File களை அனுப்பும் வசதி நமக்கு கூகுள் டிரைவ் மூலம் தரப்படுகிறது. கூகுள் டிரைவில் ஜிமெயில் பயனர்கள் ஒவ்வொருவருக்கும் 5 GB இலவச Space தரப்பட்டிருக்கும். எனவே இலவசமாக 5 GB வரை அனுப்ப முடியும். 10 GB வரை அனுப்ப நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே இலவசமாக அனுப்ப வழி தரும் 5GB யை நாம் பார்ப்போம்.

ஜிமெயிலில் இருந்து அனுப்ப: 

கூகுள் டிரைவ் மூலம் என்றாலும் File - களை நீங்கள் உங்கள் ஜிமெயிலில் இருந்தே அனுப்பலாம். இதற்கு நீங்கள் புதிய Composing Method ஐ உபயோகிக்க வேண்டும்.

புதிய மெயில் Compose செய்யும் போது + Icon மீது கிளிக் செய்தால் Google Drive Icon வரும் அதை கிளிக் செய்து File ஐ Upload செய்திடலாம்.


ஏற்கனவே Upload செய்திருந்த File என்றால் My Drive என்பதில் இருந்து File - ஐ தெரிவு செய்து கொள்ளலாம். 

கூகுள் டிரைவில் இருந்தே அனுப்ப

முதலில் Google Drive தளத்துக்கு சென்று உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலம் Sign in செய்து கொள்ளுங்கள். இப்போது வரும் பக்கத்தில் இடது புறம் உள்ள Upload Icon மீது கிளிக் செய்யுங்கள்.

அதில் Files அல்லது Folder என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள். ஒரே ஒரு File என்றால் File, நிறைய File என்றால் Folder.

இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு File அல்லது Folder  - ஐ நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். 5GB க்கு மேல் இருந்தால் Not enough storage என்று வந்து விடும். எனவே 5GB உள்ளதை கொடுத்து விட்டால் சில மணி நேரங்களில் அது Upload ஆகி விடும்.



Upload ஆன பின் குறிப்பிட்ட File அல்லது Folder - ஐ நீங்கள் Drive - இல் காணலாம். அந்த File ஐ Check செய்து விட்டு More என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது Share பகுதியில் நீங்கள் Email As Attachment என்பதை கிளிக் செய்து File - ஐ குறிப்பிட்ட நபருக்கு மின்னஞ்சல் செய்து விடலாம்.

- பிரபு கிருஷ்ணா

Micromax Ninja A27 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


தன்னுடைய Smartphone - கள் வரிசையில் அடுத்து வெளிவரப் போவதாக சமீபத்தில் Micromax அறிவித்த மாடல் Ninja A27. இது தற்போது சந்தைக்கு வந்துள்ளது. இதன் ஆரம்ப விலை Rs.3399* ஆக உள்ளது. Flipkart போன்ற ஆன்லைன் தளங்கள் இதை விற்க ஆரம்பித்துவிட்டன. 

இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை.  கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது.

Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android v2.3.5 Gingerbread Version - ஐ கொண்டுள்ளது. 0௦.3MP கேமராவை கொண்டுள்ளது. LED Flash, Auto Foucs  வசதிகள் கிடையாது.

இது 3.5 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. Accelerometer, Proximity ஆகிய இரண்டு சென்சார்களையும் கொண்டுள்ளது.

இது 256 MB RAM, 512 MB ROM மற்றும் 1GHz Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 160 MB மற்றும் 16 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.

இதன் 1400 mAh பேட்டரி 4.30 மணி நேர Talk Time, 260 மணி நேர Stand By Time உடையது.

இவற்றோடு Bluetooth, Wi-Fi, GPS, Java போன்ற சிறப்பம்சங்களும் கிடைக்கின்றன.

Micromax Ninja A27 Specifications:

Operating System Android OS 2.3 (Gingerbread)
Display 3.5-inch (480 x 320 pixels) capacitive touch screen display
Dual SIM GSM + GSM with Dual Standby
Processor 1 GHz Spreadtrum SC6820 processor
RAM 256 MB, ROM 512 MB
Internal Memory 160MB
External Memory microSD (up to 16GB)
Camera 0.3 MP Rear Camera
Battery 1400 mAh, Talk Time – 4.5 hours and Standby time 260 hours
Features Wi-Fi, Micro USB v2.0

கற்போம் Review:


பள்ளி மாணவர்களுக்கு ஒரு போன் வாங்கித் தரவேண்டும் என்று நினைப்பவர்கள் இதை வாங்கித் தரலாம். அதே போல Android phone என்றாலும் எனக்கு அதிக வேலைகள் கிடையாது, போட்டோ கூட எடுக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் இந்த போனை வாங்கலாம். 

நிறைகள்: 

1 GHz Processor மற்றும் 3.5-inch Screen என்பது இதன் நிறைகள். 

குறைகள்: 

இதில் இருக்கும் கேமரா மிகக் குறைந்த குவாலிட்டி உடையது. அதே போல 3G வசதி கிடையாது என்பது ஒரு முக்கியமான குறை. அத்தோடு 256 MB RAM என்பதால் போன் மிக மெதுவாக இயங்கக் கூடும்.


* - விலை Update செய்த தேதி 13-02-2013.

- பிரபு கிருஷ்ணா

Nokia வின் புதிய Asha 310 - முழு விவரங்கள் மற்றும் விலை [Specifications and Price]


நோக்கியா இந்தியாவின் ஆஸ்தான போனாக இருந்த காலம் மாறி இப்போது மற்ற நிறுவன மொபைல் போன்கள் அதை இடத்தை ஆக்கிரமித்து இருந்தாலும் இன்னும் நோக்கியா மார்க்கெட் இழக்கவில்லை. இதை உறுதிப்படுத்த அவ்வப்போது புதிய போன்களை விட்டு பயனர்களை கவர்கிறது நோக்கியா. அந்த வகையில் வரப்போகிற புதிய மொபைல் தான் Asha 310. அடுத்த மாதம் சந்தைக்கு வரவிருக்கும் இதன் விலை ஏறக்குறைய 5500* ரூபாய்க்குள் இருக்கும். 

இது ஒரு Dual Sim மொபைல். இரண்டும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை.Asha S40 OS - இல் இயங்கும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு, வெள்ளை, கோல்டன் லைட் வண்ணங்களில் இது கிடைக்கும். 

இதன் 2MP கேமரா மூலம் 1600x1200 pixels அளவுக்கு போட்டோக்களும், 176x144 அளவுக்கு வீடியோக்களும் எடுக்க முடியும். ஆனால் கேமராவில் LED Flash, Auto Foucs  வசதிகள் கிடையாது.

இது 3 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது. அத்தோடு Accelerometer சென்சாரை கொண்டுள்ளது.

இது 128 MB ROM, 64 MB RAM மற்றும் 1GHz Processor கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 20 MB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது. 2GB Card போன் வாங்கும் போது இலவசமாக தரப்படும்.

இதன் 1110 mAh பேட்டரி 17 மணி நேர Talk Time, 600 மணி நேர Stand By Time உடையது.

இவற்றோடு Bluetooth, Wi-Fi, Java போன்ற சிறப்பம்சங்களும் கிடைக்கின்றன.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே.

Nokia Asha 310 Specifications

Operating System Asha S40 OS
Display 3 inch QVGA Capacitive Touch Display with Scratch Proof Screen (240×320 Resolution)
Processor 1Ghz Processor
Dual Sim Yes
RAM 128 MB ROM, 64 MB RAM
Internal Memory 20MB
External Memory Upto 32 GB (microSD), 2GB comes with sales pack
Camera 2MP Rear Camera
Battery Li-Ion 1110 mAh - 17hours of talktime, 25 hours of Standby time
Features WiFi,Bluetooth,Micro USB 2.0 connector, Preloaded with 40 EA Games and Nokia Maps

* - விலை Update செய்த தேதி 12-02-2013. 

நன்றி - Tech Hints

- பிரபு கிருஷ்ணா