Power Failureக்கு பிறகு கணினியை Auto Restart செய்வது எப்படி? | கற்போம்

Power Failureக்கு பிறகு கணினியை Auto Restart செய்வது எப்படி?

தமிழ்நாட்டில் இப்போது உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சினை மின்சாரம். சிலர் தமது கணினி எப்போதும் ஆன் செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைப்பர். அதாவது Power Failure ஆனாலும் திரும்ப Power வரும்போது கணினி தானாகவே ஆன் ஆக வேண்டும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

1. உங்கள் கணினி On ஆகும் போது நீங்கள் BIOS Settings பகுதிக்குள் நுழைய வேண்டும். இதை F2 வை பிரஸ் செய்வதன் மூலம் செய்ய முடியும். 

2. இப்போது ACPI / Power settings பகுதியில் அல்லது வேறு பகுதியில் "Action after A/C power failure" என்பதை கண்டுபிடியுங்கள். அதில் 3 வசதிகள் இருக்கும். 


3. இதில் Power On அல்லது Last State என்பதை தெரிவு செய்து கொள்ளவும். 

4. இனி Settings Save செய்து விடவும். 

5. உங்கள் கணினியில் இரண்டு OS இருந்தால் எது Boot ஆக வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்

இதற்கு My Computer மீது ரைட் கிளிக் செய்து Properties >> Advanced System Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது System Properties என்ற பகுதி ஓபன் ஆகும்,  அதில் Advanced பகுதியில் Startup and Recovery என்பதற்கு கீழே உள்ள Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.


உங்கள் கணினியில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட OS இருந்தால் எது Boot ஆக வேண்டும் என்பதை நீங்கள் சொல்லலாம். 


கவனிக்க, குறிப்பிட்ட OS க்கு Password வைத்து இருந்தால் அந்த பகுதிக்கு வந்து விடும். இதனால் Team Viewer போன்ற மென்பொருள் மூலம் Access செய்ய இயலாது. Remote Access செய்ய நினைப்பவர்கள் Password வைக்காமல் இருப்பது நல்லது. 

அவ்வளவு தான் இனி Power போய்விட்டு வந்தாலும் உங்கள் கணினி On செய்யப்பட்டே இருக்கும். 

- பிரபு கிருஷ்ணா

7 comments

பயனுள்ள தகவல் சகோ.! அதுவும் தமிழ்நாட்டுக்கு அவசியமான பதிவு!

Reply

THANK YOU, I AM USING THIS OPTION VERY USEFUL TO US FOR THESE DAYS PRABHU.

Reply

மிக்க நன்றிங்க......

Reply

அருமையான தகவல் நண்பரே...

Reply

அன்பின் பிரபு கிருஷ்ணா - நல்லதொரு தக்வல் - பயன் படுத்த முயல்கிறேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Reply

சைனா போன்களில் கேம்ஸ் இன்ஸ்டால் செய்வது எப்படி. அதற்ட்கன விதி முறைகளை கூறுங்கள் அண்ணா.

Reply

Java சப்போர்ட் செய்தால் தான் முடியும். சைனா போன்களுக்கு Java Support இல்லை என்று நினைக்கிறேன்.

Reply

Post a Comment