அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், வருடத்தின் முதல் கற்போம் இதழ் அட்டகாசமான இரண்டு புதிய பகுதிகளுடன் வெளிவருகிறது. இரண்டுமே தொடர்கள்.
1. புது நுட்பம் (சந்தைக்கு புதுசு)
பேஸ்புக்கில் மிகப் பிரபலமான திரு.Ravi Nag அவர்களின் பதிவுகள் இந்த பகுதியில் இடம் பெறும். தொழில்நுட்ப உலகின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்களை இந்த பகுதியில் நீங்கள் படிக்கலாம்.
2. தமிழில் போட்டோஷாப்
போட்டோஷாப் பயில நினைக்கும் அனைவருக்கும் ஒரு பெரிய கவலை, அது குறித்து தமிழில் அதிகமாக இல்லையே என. ஆனால் எளிய தமிழில் போட்டோஷாப் குறித்து அனைத்தையும் தமிழில் தன் வலைப்பூவில் எழுதி வருபவர் திரு. தாவூத் கான். அந்த பதிவுகள் இனி கற்போம் இதழில் தொடராக வரும்.
கற்போம் இதழுக்கு தங்கள் பதிவுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்த இருவருக்கும் நன்றி.
இனி இந்த மாத இதழ்,
கட்டுரைகள்:
- TABLET PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
- பிட்.. பைட்… மெகாபைட்….!
- விக்கிபீடியா கட்டுரைகளை EBOOK ஆக டவுன்லோட் செய்வது எப்படி ?
- லேப்டாப் வாங்க போறீங்களா….? உங்களுக்காக சில டிப்ஸ்
- புது நுட்பம் (சந்தைக்கு புதுசு) – புதிய தொடர்
- பதில்!
- தமிழில் போட்டோஷாப் – புதிய தொடர்
தரவிறக்கம் செய்ய
- பிரபு கிருஷ்ணா

