Youtube மூலம் Adsense கணக்கு உருவாக்குவது எப்படி? | கற்போம்

Youtube மூலம் Adsense கணக்கு உருவாக்குவது எப்படி?


சில மாதங்களுக்கு முன்பு Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்றொரு பதிவை எழுதி இருந்தேன். இதில் பலருக்கு இருக்கும் சந்தேகம் எப்படி Adsense கணக்கை உருவாக்குவது என்று. இன்று Youtube மூலம் எப்படி Adsense கணக்கை உருவாக்குவது என்று பார்ப்போம். 

Adsense கணக்கை உருவாக்கும் முன் நீங்கள் உங்கள் வீடியோக்களை Monetize செய்ய வேண்டும். 

1. முதலில் உங்கள் Video Manager பகுதியில் இருந்து Settings என்பதை கிளிக் செய்யுங்கள். வரும் பகுதியில் CHANNEL SETTINGS என்பதில் உள்ள Monetization என்பதை கிளிக் செய்யுங்கள். 

2. இப்போது கீழே உள்ளது போல உங்கள் Youtube பக்கம் இருக்கும். அதில் உள்ள Monetize Videos என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் Pop-up விண்டோவில் Overlay in-video ads, TrueView in-stream ads என்பதை மட்டும் தெரிவு செய்து Monetize கொடுங்கள். 


3. இப்போது உங்கள் Video Manager பகுதியில் வீடியோக்களில் பச்சை நிற $ Symbol ஒன்று தோன்றி  Monetize ஆகி இருக்கும், அல்லது Under Review என்று இருக்கும்.


4. குறைந்த பட்சம் ஒரு வீடியோ Monetize என்று வரும் வரை காத்திருங்கள். அதன் பின் மீண்டும் Settings >> Monetization செல்லுங்கள். அதில் "How will i be paid" என்பதை கிளிக் செய்யுங்கள், பின் "associate an AdSense account" என்ற லிங்க் மீது கிளிக் செய்யுங்கள். 

5. அடுத்த பக்கத்தில் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Adsense Sign up பக்கத்துக்கு வந்து விடுவீர்கள். இதில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் Adsense கணக்கை உருவாக்கலாம். 


6. இனி நீங்கள் Adsense கணக்கை உருவாக்கி விடலாம். 

7. இந்த Adsense கணக்கு Hosted Adsense Account என்று இருக்கும். Youtube - இல் உள்ள உங்கள் வீடியோக்கள் மூலம் மட்டுமே நீங்கள் இந்த கணக்கில் சம்பாதிக்க முடியும். தளங்களில் பயன்படுத்த Adsense Settings பகுதியில் உங்கள் தள முகவரியை கொடுத்து Apply செய்து, Ad Codes-ஐ உங்கள் தளத்தில் Paste செய்ய வேண்டும். உங்கள் தளம் தகுதியானது என்றால் உங்கள் Adsense கணக்கை உங்கள் தளத்தில் பயன்படுத்த அனுமதி கிடைக்கும். 

சந்தேகம் இருப்பின் பின்னூட்டம் மூலம் கேளுங்கள். 

- பிரபு கிருஷ்ணா

9 comments

பகிர்வுக்கு நன்றிங்க

Reply

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

Reply

பகிர்வுக்கு நன்றிங்க.பலருக்கும் பயன்படும்

Reply

Thank you prabhu for your kind posting

Reply

நன்றி . பயனுள்ள பதிவு

Reply

நீங்கள் கூறியதை போல் எனக்கு Account Status அது வரைக்குதான் வருகிறது.. பின் எதுவும் வரவில்லை நான் இரண்டு வீடியோ அப்லோடு செய்து இருக்கிறேன்.. சுமார் 1500 நபர்கள் பார்த்து இருக்கிறார்கள்.. பின் எப்படி பணம் சம்பாதிப்பது.. எவ்வளவு பேர் பார்க்க வேண்டும் ? பதில் அளிக்கவும் rajinimani2002@gmail.com

Reply

என்ன மாதிரி Video upload செய்துள்ளீர்கள் என்று சொல்லுங்கள். முக்கியமாக நீங்கள் எந்த நாட்டில் இப்போது இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

Reply

hi anna naan adsense approval kidachirukku aana fulla approval kidaikela eppidi adsense approval vaankirathu

Reply

Youtube க்கு கிடைத்தால் அது Hosted Account என்று இருக்கும். அதை தளங்களில் பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்த விரும்பினால் Account settings பகுதியில் Authorized Sites என்பதில் உங்கள் தள முகவரியை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். Review ஒன்றிற்கு பிறகு தளங்களில் பயன்படுத்த அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.

Reply

Post a Comment