PowerPoint க்கு சிறந்த மாற்று மென்பொருட்கள் | கற்போம்

PowerPoint க்கு சிறந்த மாற்று மென்பொருட்கள்


Presentation என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது PowerPoint தான். ஆனால் அதை விரும்பாதவர்களும் இங்கே இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் சில மாற்று மென்பொருட்களை விரும்புவார்கள். அத்தகையவர்கள் பயன்படுத்த சில மென்பொருட்களை காண்போம். 

ஆன்லைன் மாற்றும் ஆப்லைன் என்று இதனை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். ஆப்லைன் என்பது மென்பொருள். 

ஆன்லைன்:


ஆன்லைன் மூலம் Presentation உருவாக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தளம். உதாரணமாக நாம் ஒரு மேப் போன்றவற்றை விளக்கும் போது, மேப்பை முதலில் மொத்தமாகவும், பின்பு அடுத்த Slide - களில் அதன் பகுதிகளை காட்டுவோம், இதில் அவ்வாறு இல்லாமல் ஒரே Slide - இல் Zoom in, Zoom out வசதிகள் உள்ளன. கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 



SlideRocket

ஆன்லைன் மார்க்கெட்டிங் Presentation , ஒரு தளம் குறித்த Presentation போன்றவற்றை உருவாக்க இது ஒரு சிறந்த தளம். Twitter, Facebook, YouTube போன்ற Plugin வசதிகள் உட்பட பல வசதிகளை இது கொண்டுள்ளது.



Google Docs Presentation (Google Drive)

MS PowerPoint போன்று எளிதாக வேண்டும் என்பவர்களின் சாய்ஸ் இது தான். மிக எளிதாக செய்ய வேண்டும் என்பவர்கள் இதில் முயற்சி செய்யலாம்.


ஆப்லைன் : 

இவை MS Office க்கு மாற்றாக உள்ள மென்பொருட்களாக இருக்கும். 

OpenOffice - Impress

PowerPoint போன்றே ஒரு மென்பொருள் வேண்டும் என்பவர்கள் இதை பயன்படுத்தலாம். மிக எளிய இன்டெர்பேஸ், எளிய செயல்பாடு நம் வேலையை எளிதாக்கும். 

LibreOffice - Impress

இது OpenOffice - இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும். பெரும்பாலான வசதிகள் OpenOffice போலவே தான் இருக்கும்.

- பிரபு கிருஷ்ணா 

Post a Comment