January 2013 | கற்போம்

மொபைல் போனில் வரும் பேஸ்புக் Notification-களை தடுப்பது எப்படி?


பேஸ்புக்கை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு சில தொல்லைகளை தரும். அதிலும் குறிப்பாக பேஸ்புக்கில் மொபைல் நெம்பரை கொடுத்து இருந்தாலோ அல்லது ஸ்மார்ட்போன் மூலம் பேஸ்புக் பயன்படுத்தினாலோ நமக்கு Notification பிரச்சினைகள் உள்ளன. அதை எப்படி தீர்ப்பது என்று பார்ப்போம். 

SMS Notification:

முதலில் உங்களுக்கு SMS மூலம் Notification வருகிறது என்றால் நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் இருந்து நீக்க வேண்டும். இதை செய்ய முதலில் உங்கள் Profile இல் About என்பதை கிளிக் செய்யுங்கள். 


இதில் Contact Info என்ற பகுதியில் Edit என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை Remove செய்து விடுங்கள். 


மீண்டும் Notification வந்தால் ஒரு டம்மி நெம்பர் ஒன்றை கொடுத்து விடவும்.  தேவை என்றால் மாற்றிக் கொள்ளலாம். இதனால் உங்களுக்கு Notification வராது. 

Other Notifications:

நீங்கள் உங்கள் போனில் Facebook Application-ஐ பயன்படுத்தினால் இணைய இணைப்பில் இருக்கும் போது அடிக்கடி Notifications வரும். இது குறிப்பாக Android, iPhone, Windows Phone போன்ற Smartphone - கள் வைத்திருப்பவர்களுக்கு வரும். சில போன்களில் Notifications வரும் போது உங்களுக்கு கால் வந்தால் அதை கூட அட்டென்ட் செய்ய முடியாது. 

சில சமயம் நீங்கள் கணினியில் பேஸ்புக் பயன்படுத்தும் போது பார்த்த Notifications கூட மீண்டும் போனில் வரும். 

இதை நிறைய பேர் விரும்புவதில்லை. இதை தவிர்க்க நீங்கள் உங்கள் போனில் பேஸ்புக்கை ஏதேனும் ப்ரௌசெரில் இருந்து பயன்படுத்த வேண்டும்.  இதனால் Notifications ப்ரௌசெரில் மட்டுமே வரும். உங்கள் Smartphone Notification பகுதியில் வராது. 

- பிரபு கிருஷ்ணா

The Web Blocker - குறிப்பிட்ட தளங்களை Block செய்ய உதவும் இலவச மென்பொருள்


இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளன. சில தளங்கள் பாதுகாப்பின்றி இருக்கலாம், அலுவலங்களில் சில தளங்களை Block செய்ய வேண்டி வரலாம். அவ்வாறு தேவைப்படும் போது எளிதாக The Web Blocker என்ற மென்பொருள் கொண்டு எப்படி குறிப்பிட்ட தளங்களை Block செய்வது என்று பார்ப்போம். 

முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்யும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். 

இன்ஸ்டால் செய்து முடித்த Desktop - இல் உள்ள The Web Blocker மென்பொருளை ஓபன் செய்யுங்கள். இப்போது நீங்கள் இதில் இயங்க உங்களுக்கு Password கொடுக்க வேண்டும். 

அடுத்து சில நொடிகளுக்கு பிறகு அந்த மென்பொருள் ஓபன் ஆகும். நீங்கள் முன்பு கொடுத்த Password கொடுத்து உள்ளே நுழையுங்கள். இப்போது மென்பொருள் கீழே உள்ளது போல இருக்கும். 


இப்போது "Add Address to Block List" என்பதற்கு கீழ் உள்ள பகுதியில் குறிப்பிட்ட தளத்தின் முகவரியை கொடுக்கவும். பின்னர் இடது பக்கம் User List என்பதில் எந்த User - க்கு இது பொருந்தும் என்பதையும் நீங்கள் தெரிவு செய்து "Block Address" என்பதை கிளிக் செய்யுங்கள். பெரும்பாலும் All Users என்பதை தெரிவு செய்யுங்கள்.

இப்போது Block List என்பதில் நீங்கள் கொடுத்த தளம் சேர்க்கப்பட்டு விடும். 


இப்போது குறிப்பிட்ட தளத்தை ஓபன் செய்தால் கீழ் உள்ளவாறு வரும். 


இதே போல எத்தனை தளங்களை வேண்டுமானாலும் Block செய்து கொள்ளலாம். Block செய்த பின் மென்பொருளின் Desktop Shortcut - ஐ நீங்கள் நீக்கி விடுவது நல்லது.

இதை மென்பொருள் இன்றி செயல்படுத்த - வேண்டாத தளங்களை block செய்வது எப்படி?
-பிரபு கிருஷ்ணா

OS இன்ஸ்டால் செய்வது எப்படி ? - எளிய தமிழ் கையேடு


என்னதான் கணினியில் இயங்குவதில் நாம் பெரிய ஆளாக இருந்தாலும், கணினியில் Operating System இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் நண்பர்களின் உதவியை நாடும் பலர் இன்னும் இருக்கிறார்கள். நண்பர்கள் கொஞ்சம் பிஸி என்றால் அவ்வளவு தான். 

அடுத்தவர் உதவி இல்லாமல் நாமே எந்த பிரச்சினையும் இல்லாமல் OS இன்ஸ்டால் செய்யும் முறையை தெரிந்து கொள்வது நல்லது தானே. அதற்கான ஒரு தமிழ் கையேட்டை தான் இன்று பார்க்க போகிறோம். 

இது நண்பர் மதுரன் தன்னுடைய  தமிழ்சாப்ட் என்ற தளத்தில் பகிர்ந்து இருந்தார். இப்போது அந்த தளம் இல்லாததால் அவரது அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். 
இதில் Windows XP, Windows 7 போன்றவற்றை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

Booting Device Order மாற்றுவதில் ஆரம்பித்து Partition, Installtion என்று எல்லா செயல்களையும் மிக எளிதாக படங்களுடன் விளக்கி உள்ளார். 

தேவைப்படுபவர்கள் இதை Print கூட எடுத்து  வைத்துக் கொள்ளலாம். அனைவருக்கும் கண்டிப்பாக பயன்படும். 

பகிர அனுமதி அளித்த மதுரன் அவர்களுக்கு நன்றி.


[வரும் பக்கத்தில் Download என்பதை கிளிக் செய்யவும் ]

MS Word - இல் Drop Cap வசதியை பயன்படுத்துவது எப்படி?


Drop Cap என்பது நாம் அடிக்கடி பார்க்கும் ஒரு வசதி. பக்கத்தின் முதல் எழுத்தை மட்டும் பெரிது படுத்தி காட்டும் இந்த வசதி நிறைய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். 

1. முதலில் உங்கள் MS Word - ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 

2. Insert >> Drop Cap என்பதை கிளிக் செய்யுங்கள். 


3. இதை இரண்டு விதமாக நீங்கள் பயன்படுத்த முடியும். முதலாவது Dropped Drop Cap இரண்டாவது In Margin Drop Cap. 


4. Drop Cap Options என்பதை கிளிக் செய்து அந்த முதல் எழுத்தின் Font மற்றும் இதர Settings -ஐ மாற்றலாம். 

5. உதாரணமாக நான் முதல் எழுத்தின் Font - ஐ மாற்றி உள்ளேன். 

- பிரபு கிருஷ்ணா

PowerPoint க்கு சிறந்த மாற்று மென்பொருட்கள்


Presentation என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது PowerPoint தான். ஆனால் அதை விரும்பாதவர்களும் இங்கே இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் சில மாற்று மென்பொருட்களை விரும்புவார்கள். அத்தகையவர்கள் பயன்படுத்த சில மென்பொருட்களை காண்போம். 

ஆன்லைன் மாற்றும் ஆப்லைன் என்று இதனை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். ஆப்லைன் என்பது மென்பொருள். 

ஆன்லைன்:


ஆன்லைன் மூலம் Presentation உருவாக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தளம். உதாரணமாக நாம் ஒரு மேப் போன்றவற்றை விளக்கும் போது, மேப்பை முதலில் மொத்தமாகவும், பின்பு அடுத்த Slide - களில் அதன் பகுதிகளை காட்டுவோம், இதில் அவ்வாறு இல்லாமல் ஒரே Slide - இல் Zoom in, Zoom out வசதிகள் உள்ளன. கீழே உள்ள வீடியோவை பாருங்கள். 



SlideRocket

ஆன்லைன் மார்க்கெட்டிங் Presentation , ஒரு தளம் குறித்த Presentation போன்றவற்றை உருவாக்க இது ஒரு சிறந்த தளம். Twitter, Facebook, YouTube போன்ற Plugin வசதிகள் உட்பட பல வசதிகளை இது கொண்டுள்ளது.



Google Docs Presentation (Google Drive)

MS PowerPoint போன்று எளிதாக வேண்டும் என்பவர்களின் சாய்ஸ் இது தான். மிக எளிதாக செய்ய வேண்டும் என்பவர்கள் இதில் முயற்சி செய்யலாம்.


ஆப்லைன் : 

இவை MS Office க்கு மாற்றாக உள்ள மென்பொருட்களாக இருக்கும். 

OpenOffice - Impress

PowerPoint போன்றே ஒரு மென்பொருள் வேண்டும் என்பவர்கள் இதை பயன்படுத்தலாம். மிக எளிய இன்டெர்பேஸ், எளிய செயல்பாடு நம் வேலையை எளிதாக்கும். 

LibreOffice - Impress

இது OpenOffice - இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும். பெரும்பாலான வசதிகள் OpenOffice போலவே தான் இருக்கும்.

- பிரபு கிருஷ்ணா 

விண்டோஸ் 8-இல் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்


"எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ" என்று ரஜினிகாந்தே சொல்லியிருக்கிறார். எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினரும் தம் புதிய விண்டோஸுக்கு எட்டாம் நம்பரைக் கொடுத்து விட்டனர்.  நிச்சயம் ரஜினி ரசிகர்களாக இருப்பார்கள்.

*இது ஒரு கெஸ்ட் போஸ்ட். எழுதியது ஞானபூமி

தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறி டாப்லெட், ஸ்மார்ட்போன் என்று ஆன இச்சமயத்தில் கனமான போட்டிகளுக்கு இடையில் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய நிலையில் மைக்ரோசாஃப்ட் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.விண்டோஸ் 8 ஐ "டாப்லெட்டிலும் ஓடுவேன், டெஸ்க்டாப்பிலும் ஆடுவேன்"என்று சகலகலாவல்லவன் கமல் பாணியில் (அப்பாடா, ரெண்டு பேர் ரசிகர்களையும் கவர்ந்தாயிற்று) எல்லாவற்றிலும் நிறுவக் கூடிய ஒரு பதிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன் வசதிகள் என்ன, புது செருப்பு காலை கடிப்பது மாதிரி  கடிப்பவை என்னென்ன என்று பார்ப்பது இந்த மெகா தொடரின்,மன்னிக்கவும்,  இந்தப் பதிவுகளின் நோக்கம்.

நம் நண்பர் பிரபு கிருஷ்ணா ஏற்கனவே டெல் நிறுவனத்தினர் வெளியிட்டிருக்கும் மின் புத்தகத்தின் இணைப்பை இங்கே கொடுத்திருக்கிறார். இருப்பினும் அழகுத் தமிழில் டெக்னாலஜி படித்தால் மிக இனிமையாகத் தான் இருக்கிறது. எனவே….


மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது

  1. விண்டோஸ் 8 இல் ஸ்டார்ட் பட்டன் இருக்காது. என்னைக் காணவில்லையே எயிட்டோடு என்று பாடிவிட்டு ஒளித்து வைத்து விட்டனர். இது திகைப்பிலாழ்த்தினாலும் நாம் தான் ஒளிந்திருப்பதை கண்டுபிடிப்பதில் சமர்த்தர்களாயிற்றே. அதை பிறிதொரு முறை தேடுவோம்.
மாறாக, அதன் ஸ்டார்ட் திரைக்கு அவ்வவ்போது வந்து போக வேண்டியிருக்கும். உ.ம், ஒரு புதிய யூஸர் அக்கவுண்ட்டைப் புதிதாகத் தொடக்கும் போது,  புகைப்படம், ஒரு பாட்டு இவற்றை இயக்க, பார்க்க இருக்கையில். இவற்றை டெஸ்க்டாப்பில் பார்க்க ஆரம்பித்தாலும் மறுபடி ஸ்டார்ட் திரைக்குக் கொண்டு வந்து விடும்.

  1. ஆப்பிள் ஐ-போடை விண்டோஸ் 8 கணினியில் இணைத்தால் "தம்பி யாருன்னே தெரியலையே" என்பது போல கண்டு கொள்ளாது.சமூகத்தின் உயரிய மட்டத்தில் வாழ்பவர்கள் என்பதன் அடையாளமான (ஸ்ஸ்ஸ், சோஷியல் ஸ்டேட்டஸ் சிம்பல் என்பதன் நீட்டி முழக்கம் அது) ஐ-போடை உபயோகிப்பவர்கள் ஒன்று ஆப்பிள் ஐ-டியூனை நிறுவிக் கொள்ள வேண்டும், அல்லது விண்டோஸ்(வேண்டுமென்றே) ஒரு பென் - டிரைவைப் போல பாவிக்கும் எக்ஸ்ப்ளோரரில் அதன் கோப்புகளை காப்பி செய்து கொள்ளலாம்.ஐ டியூன்ஸ் கொஞ்சம் எளிதான வழி இதற்கு.
  1. அடிக்கடி வொர்க்-ஸ்டேஷன் லாக் அவுட் ஆவது. இது ஒரு பாதுகாப்பு அம்சமாக இருந்தாலும் போய் ஒரு காப்பியை கலந்து வைத்துக் கொண்டு வந்தால் படக்கென்று லாக் ஸ்க்ரீனைக் காண்பித்து மறுபடி கடவுச் சொல்லைக் கேட்கும். இதை கண்ட்ரோல் பேனலில் உள்ள கடவுச் சொல்லை அடிக்கடி கேட்டுத் தொல்லை பண்ணவும் என்பதை க்ளியர் பண்ணவும். எப்படி என்றால்...
- Right-click in any screen’s bottom-left corner and then choose Control Panel.
- From the Control Panel, click System and Security and then click Power Options.
- From the screen’s left edge, click Require a Password on Wakeup.
- When the window appears, most of the options are grayed out — inaccessible.
- Select the option labeled Change Settings That Are Currently Unavailable.
- Select the Don’t Require a Password option and then click the Save Changes button.

  1. எத்தனை கோடி விண்டோஸைத் திறந்தேன் இறைவா என்று வகைக்கொன்றாக பல விண்டோக்களைத் திறந்து வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைபாய்பவரா நீங்கள்? என்னென்ன விண்டோஸ் திறந்து ஆக்டிவாக இருக்கிறது என்பதை அறிய Altஎன்ற கீயையும் Tab ஐயும் அழுத்தவும். ஒரு சிறிய விண்டோவில் நீங்கள் திறந்திருக்கும் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டும். Tab ஐ அழுத்தி, விடுவித்துக் கொண்டு, உங்களுக்குத் தேவையான விண்டோ ஆக்டிவ் ஆக காட்டும் போது Tab ஐ விட்டு விட்டால் அந்த விண்டோ ஸ்க்ரீன் முன் வந்து விடும். இது விண்டோஸின் பழைய டெக்னிக் தான். விண்டோஸ் படம் போட்ட கீயையும் Tab ஐயும் அழுத்தினாலும் இதைப் போன்றே வேண்டியதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
  1. 8 இல் அட்மின் பயனாளராக இருப்பவருக்கே அனைத்து சலுகைகளும் உண்டு, இணையத்தில் உலாவ, புதிய மென்பொருளை நிறுவ இன்னபிற. சாதாரண பயனாளர் ஏற்கனவே இருப்பனவற்றை பயன்படுத்தலாம். இணையத்தில் உலாவ வேண்டுமானால் உங்கள் கணினி "எப்போதும் கனெக்ட்" ஆகி இருக்கும் இணைப்பை வேண்டுமானால் இவர்கள் பயன்படுத்தலாம். இவை இல்லையென்றால் தங்கள் ப்ரொஃபைல் படத்தை சூரியகாந்தி பூவிலிருந்து சாமுராய் ஆக்கிக் கொள்ளலாம், கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ளலாம். அவ்வளவே.
கொசுறு: யுனிக்ஸ், மேக் ஆர்வலர்கள் "உலகத்திலேயே ஸ்டார்ட் ன்னு பட்டன் வைச்சு அதை க்ளிக் பண்ணிய உடனே ஷட் டவுன் என்ற பட்டனை வைப்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினரால் தான் முடியும்" என்று கேலி செய்ததாலோ என்னவோ ஷட் டவுனை விஸ்டாவிலிருந்து ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள்.


இது ஒரு தொடக்கமே. விண்டோஸ் 8 இல் நிறைய இருக்கிறது தெரிந்து கொள்ள.எனவே தொடர்ந்து எதிர்பாருங்கள்.

வாய்ப்பளித்தமைக்கு பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி.

என்னைப் பற்றி:
ஞானபூமி - உங்கள் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கின்றன.

PDF, PPT, Excel, Audio, Video File-களை Word - இல் Embed செய்வது எப்படி?


நாம் தினமும் பயன்படுத்தும் மென்பொருட்களில் முக்கியமானது MS Word. சில சமயங்களில் PDF, PPT, Excel, Audio, Video File-க Word File க்குள் Embed செய்ய வேண்டி வரலாம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

இந்த பதிவில் ஒரு PPT file ஐ எப்படி Embed செய்வது என்று பார்ப்போம். 

1. முதலில் குறிப்பிட்ட Word File - ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். 

2. இப்போது அதில் எங்கே Powerpoint Presentation வர வேண்டுமோ அங்கே உங்கள் Cursor - ஐ வைத்துக் கொள்ளுங்கள். 

3. இப்போது Word - இல் Insert பகுதியில் Object என்பதை கிளிக் செய்யுங்கள். 


4. இப்போது வரும் சிறிய Window வில் Create From File என்பதை கிளிக் செய்யுங்கள். 

5. அடுத்து Browse மூலம் குறிப்பிட்ட Powerpoint File - ஐ நீங்கள் தெரிவு செய்து OK கொடுத்தால் Insert ஆகி விடும். 


6. இப்போது கீழே உள்ளது போல உங்கள் Powerpoint file இருக்கும். அதன் மீது Double Click செய்தால் போதும், Presentation Start ஆகி விடும். 


7. இதே போல PDF, Excel, Audio, Video File போன்றவற்றையும் Embed செய்ய முடியும். அவற்றின் மீது Double Click செய்து அவற்றை ஓபன் செய்திடலாம். 

- பிரபு கிருஷ்ணா

Windows 8 - இல் அறிந்திருக்க வேண்டிய Keyboard Shortcuts


Windows 8 அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, இன்று பல மில்லியன் பேர் அதனை பயன்படுத்தி வருகிறார்கள். Microsoft - இன் முந்தைய OS -களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு இருக்கும் இது சில புதிய Keyboard Shortcut களை கொண்டுள்ளது. அதே சமயம் சில பழைய Keyboard Shortcut - களும் புழக்கத்தில் உள்ளது. அவற்றில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சில Shortcuts - ஐ இங்கே பார்ப்போம். 
  • Windows key: Home screen - க்கு செல்ல
  • Windows + C: Charms bars (sharing, search, and settings) - ஐ காண்பிக்க
  • Windows + D: desktop க்கு செல்ல
  • Windows + E: My Computer - ஐ ஓபன் செய்ய
  • Windows + F: Files (research) ஐ ஓபன் செய்ய
  • Windows + I: Display settings பகுதிக்கு செல்ல
  • Windows + K: Device களை காண்பிக்க
  • Windows + L: Lock செய்ய
  • Windows key + M: Window - வை Minimize செய்ய
  • Windows + P: MultiScreen இருந்தால் அதன் Settings பகுதிக்கு செல்ல
  • Windows + Q: Search Tab - ஐ காண்பிக்க
  • Windows + R: Run பாக்ஸை ஓபன் செய்ய
  • Windows + U: Ease of use options பகுதிக்கு செல்ல
  • Windows + W: Search settings - ஐ ஓபன் செய்ய
  • Windows + X: Start menu options - ஐ காண்பிக்க
  • Windows + Tab:  ஒரு Application - இல் இருந்து இன்னொன்றுக்கு மாற
- பிரபு கிருஷ்ணா

Word Learn Dictionary - ஆன்ட்ராய்டுக்கு இலவச Offline ஆங்கில டிக்சனரி


டிக்சனரிகள் இன்றும் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. பல புதிய வார்த்தைகளின் பொருள்களை நமக்கு அறிமுகப்படுத்தும் இது மிக முக்கியமான ஒன்றும் கூட. அந்த வகையில் இன்று ஆன்ட்ராய்ட் போனுக்கு ஒரு அருமையான டிக்சனரியை பார்ப்போம். 

Word Learn Dictionary என்ற பெயரில் உள்ள இது ஆங்கிலம் - ஆங்கிலம் டிக்சனரி. கடினமான நிறைய ஆங்கில வார்த்தைகளை மிக எளிதான ஆங்கில வார்த்தைகள் மூலம் நமக்கு விளக்க இது உதவுகிறது. அதை விட முக்கிய விஷயம் இதை டவுன்லோட் செய்ய மட்டுமே நமக்கு இணைய இணைப்பு அவசியம், பயன்படுத்த தேவையில்லை. ஆம் இது ஒரு Offline டிக்சனரி. 



சிறப்பம்சங்கள்: 
  • Auto Word Suggestion வசதி 
  • ஏற்கனவே அர்த்தம் தேடிய வார்த்தைகளை எளிதாக மீண்டும் பார்க்கும் வசதி 
  • Voice recognition வசதி 
  • அர்த்தங்களை Copy and Share செய்யும் வசதி 
  • இன்னும் பல ..... 
தகவல்கள்:
  • தேவையானது - ஆன்ட்ராய்ட் 2.2 or Later
  • விலை - இலவசம் 
  • மெமரி - 19MB

டவுன்லோட் செய்ய: 


அல்லது 

இந்த QR Code - ஐ Scan செய்யுங்கள் 


Gmail Labs என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?


ஜிமெயில் தரும் ஏராளமான பயனுள்ள வசதிகளில் ஒன்று ஜிமெயில் லேப்ஸ்.  இவற்றை சோதனையில் இருக்கும் வசதிகள் என்று சொல்லலாம். இவை ஜிமெயில்க்காக சோதனை அடிப்படையில் உருவாக்கியது, உங்கள் வேலைகளை எளிதாக்க உதவும் இவற்றை பற்றி பார்ப்போம் இன்று. 

Gmail Labs என்றால் என்ன?

ஜிமெயில் தன்னுள்ளேயே ஏராளமான வசதிகளை கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் நமக்கு எந்த வகையில் பிரச்சினை வராதவாறு அமைத்து இருக்கும். ஆனால் ஜிமெயில் Labs என்பது Testing இல் இருப்பவை, பல Labs பயனுள்ள வசதிகளை தரும் போதும், சிலவற்றை பலர் விரும்பாமல் போகலாம். அம்மாதிரியான வசதிகளை பயனர் மீது திணிக்காமல், விரும்பியவர்கள் மட்டும் பயன்படுத்தலாம் என்பதற்கு உருவாக்கப்பட்டது. 

இவற்றின் செயல்பாட்டை பொறுத்து குறிப்பிட்ட Lab ஜிமெயில் Feature ஆக சேர்க்கப்படும் அல்லது நீக்கப்படும். இது பயன்படுத்துபவர்களின் Feedback பொறுத்தது. 

எப்படி பயன்படுத்துவது ? 

உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து, Settings >> Labs என்ற பகுதிக்கு வாருங்கள். 



இந்த பகுதியில் உள்ளவை தான் Labs வசதிகள். உங்களுக்கு பிடித்தமானவற்றில் Enable என்பதை கிளிக் செய்தால் அந்த வசதி உங்கள் ஜிமெயில் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். 

அதிகம் பயன்படுத்தப்படும் Gmail Labs 

நிறைய Labs இருந்தாலும் கீழே உள்ள சில நிறைய பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
  • Undo Send
இதன் மூலம் அனுப்பிய மெயிலை உடனே Cancel செய்து ஏதேனும் தவறு இருந்தால் திருத்தலாம். அதிகபட்சம் 30 நொடிகள் வரை இதை Enable செய்ய முடியும். 
  • Authentication icon for verified senders
Paypal, eBay என்ற இரண்டு தளங்களில் இருந்து மின்னஞ்சல்களுக்கு ஒரு Key Icon கொடுத்து அவை Spam இல்லை உண்மையானவை என்று உங்களுக்கு தெரிவிக்க பயன்படும் வசதி. இதன் மூலம் இந்த இரண்டு தளங்களில் உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். 


  • Right-side chat
மிக அதிகம் பேர் சாட்டில் இருந்தால் ஆன்லைனில் உள்ள எல்லோரையும் நம்மால் பார்க்க முடியாது. Chat பகுதியை Right Side க்கு மாற்றுவதன் மூலம் இந்த பிரச்சினையை தவிர்க்கலாம். அதற்கு உதவும் வசதி இது. 
  • SMS (text messaging) in Chat
குறிப்பிட்ட நண்பரின் பெயருடன் மொபைல் எண்ணை சேர்த்து SMS அனுப்ப உதவும் வசதி. 
  • Unread message icon
எவ்வளவு மின்னஞ்சல்கள் இன்னும் படிக்கப்படாமல் இருக்கிறது என்பதை காட்டும் வசதி. இதன் மூலம் வேறு Tab - இல் இயங்கி கொண்டிருந்தால், புதிய மெயில் வரும்போது உடனடியாக கவனிக்கலாம். 

இவை தவிர இன்னும் பல வசதிகள் இருக்கின்றன. உங்களுக்கு தேவையான வசதியை மட்டும் பயன்படுத்துங்கள், எல்லாவற்றையும் பயன்படுத்த முயல வேண்டாம். இதனால் ஏதேனும் ஒரு Lab நீக்கப்பட்டால் உங்கள் இன்பாக்ஸ் Load ஆவதில் பிரச்சினை வரும். தேவையானதை மட்டும் பயன்படுத்தினால் எளிதாக குறிப்பிட்ட ஒன்றை நீக்கலாம், அதிகம் பயன்படுத்தினால் எதில் பிரச்சினை என்பதை கண்டுபிடிக்க முடியாது. 

ஏதேனும் குறிப்பிட்ட Lab நீக்கப்பட்டு உங்கள் இன்பாக்ஸ் லோட் ஆவதில் பிரச்சினை வந்தால் https://mail.google.com/mail/u/0/?labs=0. என்ற முகவரியை பயன்படுத்தி மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்த வேண்டும். இது அனைத்து Lab - களையும் Disable செய்யும். பின்னர் Settings >> Labs பகுதியில் குறிப்பிட்ட Lab எது என்று கண்டுபிடித்து நீக்க வேண்டும். 

- பிரபு கிருஷ்ணா

விண்டோஸ் கணினியில் CD, Pen Drive இல்லாமல் Ubuntu இன்ஸ்டால் செய்வது எப்படி?

Ubuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக பிரபலமான Operating System ஆன இது, Open Source Software ஆகும். இதை பயன்படுத்த நிறைய பேர் விரும்புவர். இதனை விண்டோஸ் கணினியில் இருந்து எப்படி பென் டிரைவ் , சிடி போன்றவை இல்லாமல் எப்படி இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம். 

இதற்கு மிக முக்கியமாக நீங்கள் இணைய இணைப்பில் இருப்பது அவசியம். அது இல்லாமல் செய்ய முடியாது. 

1. முதலில் Windows installer என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 

2. அடுத்து அதை ஓபன் செய்யுங்கள். Windows 7 or Vista என்றால் கீழே உள்ளது போல வரும் அதில் Continue என்பதை கிளிக் செய்யுங்கள். 



3. இப்போது வரும் விண்டோவில் நீங்கள் எந்த Drive - இல் OS இன்ஸ்டால் செய்ய போகிறீர்கள் என்பதோடு User Name, Password - ஐ குறிப்பிட வேண்டும். 


4. இப்போது இது 500MB அளவுக்கு டவுன்லோட் ஆகும். இதற்கு சில நிமிடங்கள் முதல் மணி நேரம் வரை ஆகலாம். உங்கள் இணைய வேகத்தை பொறுத்தது.ஆனால் நீங்கள் தொடர்ந்து உங்கள் கணினியில் வேலைகளை செய்யலாம். 



5.இன்ஸ்டால் ஆன பிறகு நீங்கள் உங்கள் கணினியை Restart செய்ய வேண்டும். 



6. Restart ஆனவுடன் கீழே உள்ளது போல வரும், இப்போது நீங்கள் Ubuntu - வை தெரிவு செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 


- பிரபு கிருஷ்ணா

அடிக்கடி வரும் Browser பிரச்சினைகளும், தீர்வுகளும்

இணையத்தில் நாம் இயங்க மிக முக்கியமான தேவை ப்ரௌசெர். நம்மையும் இணையத்தையும் இணைக்கும் இந்த மென்பொருள் சில சமயங்களில் நமக்கு பிரச்சினைகளை உண்டு பண்ணும், அவ்வாறு அடிக்கடி வரும் பிரச்சினைகளையும் அவற்றை எப்படி சரி செய்வது என்பதையும் பார்ப்போம். 

1. Browser ஓபன் ஆகவில்லை 

கணினியை ஒரு முறை Restart செய்யுங்கள், Antivirus மென்பொருள் ஒன்றில் கணினியை Scan செய்து பாருங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Ccleaner போன்ற மென்பொருள் மூலம் Cookies - ஐ Clear செய்யுங்கள். அப்படியும் பிரச்சினை என்றால் Uninstall செய்து விட்டு Install செய்யுங்கள். 

2. தேவையில்லாத Toolbar - கள் 

இது நாம் நமக்கு வரவழைத்த பிரச்சினை, ஏதேனும் மென்பொருள் இன்ஸ்டால் செய்யும் போது (குறிப்பாக இலவச மென்பொருள்) இலவச இணைப்பாக இவையும் வந்து விடும். இன்ஸ்டால் செய்யும் போது சில இடங்களில் படித்து பார்த்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

இன்ஸ்டால் செய்யும் போது மறந்தவர்கள், Browser - இல் நீங்களாக நீக்க வேண்டும். இவற்றில் பெரும்பாலனவர்கள் எதிர்கொள்வது Babylon மற்றும் SweetIM. இதை எப்படி Remove செய்வது என்று ஏற்கனவே பதிவுகள் கற்போமில் உள்ளன. 
இவை தவிர வேறு ஏதேனும் என்றால், இதே முறையிலேயே அதன் பெயரை தேடி நீக்கலாம், அல்லது கூகுளை நாடலாம். 

3. படங்கள்/பக்கங்கள் சரியாக தெரியவில்லை

  • முதலில் உங்கள் இணைய இணைப்பு வேகமாக உள்ளதா என்று பாருங்கள், மிக குறைவான வேகம் என்றால் இந்த பிரச்சினை வரும். வேகமானது தான் என்றால் வேறு Browser-இல் ஓபன் செய்து பாருங்கள். 
  • தற்போதைய  ப்ரௌசெரில் நீங்கள் Images Load ஆவதை Enable செய்துள்ளீர்களா என்று பாருங்கள், Disable என்று இருந்தால் Enable செய்யுங்கள். பெரும்பாலும் இதன் மூலம் படங்கள் தெரியும். {அப்படியும் படம் வரவில்லை என்றால் குறிப்பிட்ட தளத்தில் இருந்து அந்த படம் நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. }
  • பக்கங்கள் தெரிவதில் தொடர்ந்து பிரச்சினை என்றால் Virus Scan, Cookies Clear, Computer Restart போன்றவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

4. மிக மெதுவாக இயங்குகிறது. 

  • எனது இணைய வேகம் அதிகமானது தான் ஆனால் குறிப்பிட்ட ப்ரௌசெர் மட்டும் அவ்வப்போது மெதுவாக இயங்குகிறது என்பவர்கள், செய்ய வேண்டிய விஷயம் Cookies Clear செய்வது. Browser Cookies-களை Clear செய்வது எப்படி? என்ற பதிவில் எப்படி என்று அறியலாம். 
  • இல்லை என்றால் வேறு ப்ரௌசெர்க்கு மாறுங்கள். 
  • தொடர்ந்து பிரச்சினை என்றால் உங்கள் கணினியில் RAM மெமரி அதிகப்படுத்த வேண்டும். 

5. Not Responding பிரச்சினை

இது பெரும்பாலோனோர் எதிர் கொள்ளும் பிரச்சினை, நீங்கள் பயன்படுத்தும் Add-on , Extension போன்றவற்றினால் இருக்கலாம். குறிப்பிட்ட ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ நீக்குவதன் மூலம் இதை சரி செய்து விடலாம். 

6. Java Script பிரச்சினை

இது Java Script Enable செய்யாது இருந்தால் வரும் பிரச்சினை. உங்கள் ப்ரௌசெரில் கண்டிப்பாக Java Script Enable ஆகி இருக்க வேண்டும், அப்போது தான் இது சரி ஆகும். 

7. ஆடியோ, வீடியோ Play ஆவதில் பிரச்சினை 

இது பெரும்பாலும் Plugin பிரச்சினை Adobe Flash மற்றும் சில இதில் தேவைப்படுபவை. வேறு எதையாவது Plugin Install செய்யும்படி சொன்னால், அது பாதுகாப்பானதா என்று பார்த்து விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள். பெரும்பாலும் ஆடியோ, வீடியோ எதையும் YouTube மூலம் கேட்பதே/பார்ப்பதே பாதுகாப்பானது. சில பெரிய தளங்கள் Own Hosting செய்து இருந்தால் அவற்றை நம்பலாம் (BBC, CNET, etc). 

8. Update பிரச்சினை

சிலருக்கு புதிய Version இன்ஸ்டால் செய்த பின் தான் பிரச்சினை என்று சொல்வார்கள். இதில் நிறைய பேர் கவனிக்க தவறும் ஒரு விஷயம் ப்ரௌசெரின் எந்த Version - ஐ இன்ஸ்டால் செய்கிறோம் என்று தெரியாமல் இன்ஸ்டால் செய்வது. 

Firefox ப்ரௌசெர் Beta, Aurora, Full என மூன்று முறை ஒரு Version - ஐ வெளியிடும். இதில் Beta, Aurora போன்றவற்றை Developer Release என்று சொல்லலாம், அவை சில பிரச்சினைகளோடு உள்ள மாற்றங்களோடு வரும், Full Version - இல் தான் அவை களையப்படும். ஆனால் நாம் இதை இன்ஸ்டால் செய்து இருந்தால் ப்ரௌசெரில் அடிக்கடி பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். 

இதே போல Chrome ப்ரௌசெர் Beta, Dev, Stable (Full) என்று மூன்று முறை ஒரு வெளியீட்டை வெளியிடும் இதில் Stable தான் எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கும். மற்ற இரண்டும் சில பிரச்சினைகளோடு தான் வரும். 

எனவே உங்கள் ப்ரௌசெர் Beta, Aurora அல்லது Beta , Dev ஆக இருந்தால் அவற்றை Uninstall செய்து விட்டு Full Version - ஐ இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்கள் பிரச்சினைகளை சரி செய்யலாம். 

பெரும்பாலும் ப்ரௌசெர்களை Update செய்யுங்கள், Uninstall செய்து இன்ஸ்டால் செய்தால் தான் இந்த குழப்பம் வரும். Update செய்யும் போது Upto Date என்று வந்தால் ஓகே, இல்லை என்றால் தானாக Update ஆகி விடும். 

இவையே பெரும்பாலோனோர் Browser-களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். 

வேறு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அவற்றை www.bathil.com - இல் தமிழில் கேட்பதன் மூலம் உடனடியாக தீர்வை பெறலாம். 

- பிரபு கிருஷ்ணா

Power Failureக்கு பிறகு கணினியை Auto Restart செய்வது எப்படி?

தமிழ்நாட்டில் இப்போது உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சினை மின்சாரம். சிலர் தமது கணினி எப்போதும் ஆன் செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைப்பர். அதாவது Power Failure ஆனாலும் திரும்ப Power வரும்போது கணினி தானாகவே ஆன் ஆக வேண்டும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

1. உங்கள் கணினி On ஆகும் போது நீங்கள் BIOS Settings பகுதிக்குள் நுழைய வேண்டும். இதை F2 வை பிரஸ் செய்வதன் மூலம் செய்ய முடியும். 

2. இப்போது ACPI / Power settings பகுதியில் அல்லது வேறு பகுதியில் "Action after A/C power failure" என்பதை கண்டுபிடியுங்கள். அதில் 3 வசதிகள் இருக்கும். 


3. இதில் Power On அல்லது Last State என்பதை தெரிவு செய்து கொள்ளவும். 

4. இனி Settings Save செய்து விடவும். 

5. உங்கள் கணினியில் இரண்டு OS இருந்தால் எது Boot ஆக வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டும்

இதற்கு My Computer மீது ரைட் கிளிக் செய்து Properties >> Advanced System Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது System Properties என்ற பகுதி ஓபன் ஆகும்,  அதில் Advanced பகுதியில் Startup and Recovery என்பதற்கு கீழே உள்ள Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.


உங்கள் கணினியில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட OS இருந்தால் எது Boot ஆக வேண்டும் என்பதை நீங்கள் சொல்லலாம். 


கவனிக்க, குறிப்பிட்ட OS க்கு Password வைத்து இருந்தால் அந்த பகுதிக்கு வந்து விடும். இதனால் Team Viewer போன்ற மென்பொருள் மூலம் Access செய்ய இயலாது. Remote Access செய்ய நினைப்பவர்கள் Password வைக்காமல் இருப்பது நல்லது. 

அவ்வளவு தான் இனி Power போய்விட்டு வந்தாலும் உங்கள் கணினி On செய்யப்பட்டே இருக்கும். 

- பிரபு கிருஷ்ணா

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts

Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 35 - ஐ Keyboard Shortcuts பார்ப்போம். 

Ctrl+N புதிய விண்டோ ஓபன் செய்ய
Ctrl+T புதிய Tab ஓபன் செய்ய
Ctrl+O குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome  - இல் ஓபன் செய்ய.
Ctrl+Shift+T கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.
Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல
Ctrl+9 கடைசி Tab க்கு செல்ல
Ctrl+Tab or Ctrl+PgDown அடுத்த Tab க்கு செல்ல
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp முந்தைய Tab க்கு செல்ல
Alt+F4 or Ctrl + Shift + W தற்போதைய விண்டோவை Close செய்ய.
Ctrl+W or Ctrl+F4 தற்போதைய  tab அல்லது pop-up ஐ Close செய்ய.
Backspace முந்தைய பக்கங்களுக்கு செல்ல
Shift+Backspace Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
Alt+Home Home Page க்கு செல்ல
Alt+F or Alt+E or F10 Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய
Ctrl+Shift+B Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க
Ctrl+H History page – ஐ ஓபன் செய்ய
Ctrl+J  Downloads page – ஐ ஓபன் செய்ய
Shift+Esc Task Manager – ஐ ஓபன் செய்ய
F6 or Shift+F6 URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]
Ctrl+Shift+J Developer Tools – ஐ ஓபன் செய்ய
Ctrl+Shift+Delete Clear Browsing Data – வை ஓபன் செய்ய
F1 Help Center – ஐ ஓபன் செய்ய
Ctrl+L or Alt+D URL ஐ Highlight செய்ய
Ctrl+P தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய
Ctrl+S தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
F5 or Ctrl+R Refresh செய்ய
Esc Loading – ஐ நிறுத்த
Ctrl+F find bar – ஐ ஓபன் செய்ய
Ctrl+U தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க
Ctrl+D குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய
Ctrl+Shift+D ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய
F11 Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
Space bar பக்கத்தை Scroll down செய்ய
Home பக்கத்தின் Top க்கு செல்ல
End பக்கத்தின் Bottom க்கு செல்ல

- பிரபு கிருஷ்ணா

பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களின்/பேஜின் போஸ்ட்களை Notification ஆக பெறுவது எப்படி?


கூகுள் பிளஸ், ட்விட்டர் போன்றவைகளின் போட்டியை சமாளிக்க பேஸ்புக் அடிக்கடி புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் வந்துள்ள புது வசதி தான் ஒரு குறிப்பிட்ட நபர்அல்லது பேஸ்புக்க பேஜ்களின் அனைத்து போஸ்ட்களையும் Notification-இல் பெறுவது.

சில நபர்கள் அல்லது பேஸ்புக் பக்க பகிர்வுகள் நமக்கு முக்கியமானதாக இருக்கக்கூடும். நமக்கு அதிகமான நண்பர்கள் இருப்பின் குறிப்பிட்ட பதிவுகளை நாம் கவனிக்க மறந்து விடுவோம், இதுவே அந்த புதிய பதிவுகள் Notification - இல் வந்தால் நாம் கண்டிப்பாக பார்ப்போம். அதற்கு உதவுவது தான் இந்த வசதி.  எப்படி என்று பார்ப்போம். 

இது கடந்த மாத ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தபட்டது. ஆனால் இரண்டு நாட்களாகத்தான் எனக்கு வேலை செய்கிறது.

நண்பர்களின் பதிவுகளை Notification - இல் பெற: 

முதலில் குறிப்பிட்ட நண்பரின் Profile பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது கீழே உள்ளது போல Friends என்பதை கிளிக் செய்தால் "Get Notifications" என்பதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது அவர் புதியதாக போஸ்ட், போட்டோ எதைப் பகிர்ந்தாலும் உங்களுக்கு Notifications வரும். 


பேஸ்புக் பேஜ்களின் பதிவுகளை Notification - இல் பெற: 

முதலில் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது கீழே உள்ளது போல Liked என்பதை கிளிக் செய்தால் "Get Notifications" என்பதை கிளிக் செய்யுங்கள். 


இனி ஒவ்வொரு புதிய பகிர்வும் உங்களுக்கு Notification ஆக வரும். 

- பிரபு கிருஷ்ணா

Corrupt ஆன வீடியோக்களை எளிதாக Convert செய்வது எப்படி?

கணினியில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு விஷயம் என்றால் அது வீடியோக்கள் பார்ப்பது. அவற்றை Convert செய்வது வேறு சில Device களிலும் கூட பார்த்து வருகிறோம். சில நேரங்களில் வீடியோ பிளேயர்களில் Play ஆகும் வீடியோக்கள் Convert செய்யும் போது Error காண்பிக்கும். அவற்றை எப்படி எளிதாக Convert செய்வது என்று பார்ப்போம். 

முதலில் நீங்கள் வைத்திருக்கும் வீடியோ VLC Player - இல் முழுதாக அதே சமயம் சரியாக Play ஆகிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.அப்படி ஆனால் தான் உங்களால் Convert செய்ய முடியும். 

உதாரணமாக கீழே உள்ள படத்தை பாருங்கள். 


மேலே உள்ள வீடியோவின் சரியான Duration பத்து நிமிடங்கள், ஆனால் இது 23 மணி நேரம் என்று உள்ளது. மற்ற வீடியோ Converter களில் இந்த File Support ஆகவில்லை, ஆனால் VLC மூலம் Play செய்த போது சரியாக Play ஆனது.


இப்போது நீங்கள் அதே VLC Player மூலம் தான் வீடியோவை Convert செய்ய போகிறீர்கள்.

முதலில் VLC - யில் வீடியோவை Play செய்யுங்கள், அடுத்து Video Playback Control வசதிகளுக்கு மேலே சில வசதிகள் இருப்பதை காணலாம்.


முதல் வரிசையில் முதலாவதாக உள்ளது தான் நாம் பயன்படுத்தப்போவது. இது VLC - யில் Play ஆகும் Video வை Record செய்ய உதவுகிறது.

இந்த வசதி தெரியாதவர்கள் VLC மெனு பாரில் View >> Advacned Controls என்பதை கிளிக் செய்து விடுங்கள்.



முதலில் Error உள்ள வீடியோவை Play செய்யுங்கள், அடுத்த நொடியே இந்த பட்டனை Press செய்து விடுங்கள். வீடியோ முழுமையாக ஓடும் வரை பொறுத்திருந்தால் அது முழுமையாக Record ஆகி விடும்.  Documents >> My Videos பகுதியில் வீடியோ Save ஆகி இருக்கும்.

இப்போது எந்த Converter மூலமும் நீங்கள் உங்கள் வீடியோவை Convert செய்திடலாம்.

- பிரபு கிருஷ்ணா