YouTube - இல் Annotations என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி? | கற்போம்

YouTube - இல் Annotations என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?


Youtube தரும் முக்கியமான வசதிகளில் ஒன்று Annotations. இது உங்களுக்கு பல வகைகளில் உதவி செய்கிறது. குறிப்பாக Subscriber - களை அதிகரிக்க, தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்க்க வைக்க என்பவை மிகவும் பயனுள்ளவை. இதைப் பற்றி விரிவாக காண்போம். 

உங்கள் Video Manager பகுதியில் ஏதேனும் ஒரு வீடியோ மீது Edit என்பதை கிளிக் செய்யுங்கள். வரும் பக்கத்தில் வீடியோவுக்கு மேலே உள்ள Annotations என்பதை கிளிக் செய்யுங்கள். 

இப்போது Annotations பகுதிக்கு வருவீர்கள். அதில் Add Annotation என்பதை கிளிக் செய்தால் உங்கள் வீடியோவில் Annotation சேர்க்க முடியும். இதில் Speech Bubble, Note, Title, Spotlight, Label, Pause போன்ற வசதிகள் இருக்கும். உங்களுக்கு தேவையான ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். 



ஏதேனும் ஒன்றை கிளிக் செய்த உடன் வீடியோவில் Enter Your Text என்று ஒரு Box வரும், அதே சமயம் வீடியோவுக்கு வலது பக்கம் நீங்கள் தெரிவு செய்த Annotation பெயருக்கு கீழும் டைப் செய்ய இடம் இருக்கும். Pause Annotation - ஐ தவிர மற்ற அனைத்துக்கும் இது வரும். படத்தில் Annotation Box & Text, Text Box

நீங்கள் உங்கள் Text - ஐ அதில் Type செய்யலாம். இதில் அடுத்த வீடியோ டைட்டில், Subscriber Us போன்றவற்றை குறிப்பிடலாம். அதிகமாக டைப் செய்ய வேண்டி இருந்தால் வீடியோவில் இருக்கும் Annotation-இன் நீள, அகலத்தை அதன் மூலைகளில் உள்ள சிறிய கட்டங்களை இழுத்து அதிகரித்து கொள்ளலாம். குறைக்கவும் இதே வழி தான். அதே போல அது வீடியோவில் தோன்றும் இடத்தை மாற்ற அந்த Annotation Box - ஐ நீங்கள் Drag செய்து கொள்ளலாம். 

இதே போல உங்கள் Annotation Text - களின் நிறம், அளவு, பின்னணி நிறம் போன்றவற்றை மாற்றவும் வசதி உள்ளது. படத்தில் Style

Annotation தோன்றும் மறையும் நேரத்தையும் நீங்கள் மாற்றலாம். Start, End போன்றவற்றின் மூலமோ அல்லது Annotation Timing என்பதன் மூலமோ நீங்கள் அதை செய்யலாம். 

Link - களை Add செய்ய Link Box - ஐ செக் செய்து விட்டு எதை சேர்க்க போகிறீர்கள் என்பதை தெரிவு செய்யுங்கள். Playlist, Video, Channel போன்றவற்றை சேர்க்கலாம். 

Fundraising Project, Merch மூலம் External link களை Annotation-இல் சேர்க்க முடியும். ஆனால் அதில் குறிப்பிட்ட தளங்களை மட்டுமே சேர்க்க முடியும். நம் Blog லிங்க்களை தர முடியாது. 

லிங்க் புதிய விண்டோவில் ஓபன் ஆக Open link in a new window என்பதை கிளிக் செய்து விடுங்கள். 

எல்லாவற்றையும் முடித்த பின் Save செய்து பின் Publish செய்து விடுங்கள். இப்போது உங்கள் வீடியோவை பார்த்தால் உங்கள் Annotation Video Play ஆகும் போது வரும். 

இதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கீழே கேளுங்கள். 

 - பிரபு கிருஷ்ணா

3 comments

உபயோகமான தகவல் நண்பா

Reply

நன்றி சகோ!

Reply

Post a Comment