Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் | கற்போம்

Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்


Tablet அல்லது Tablet PC எனப்படுபவை இப்போது மிகப் பிரபலமான ஒன்று. நிறைய பேருக்கு இவற்றை வாங்கும் ஆர்வம் இருந்தாலும் எதை வாங்குவது என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். இந்தப் பதிவில் ஒரு Tablet PC வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்களை காணலாம். 

Tablet PC என்றால் என்ன?

இதை தமிழில் கைக் கணினி என்று சொல்லலாம். கணினி தரும் வசதிகள் பலவற்றை Mobile Operating System மூலம் உங்களுக்கு இவை தருகின்றன. இதில் வித்தியாசம் என்றால் Size மற்றும் Touch Screen. கணினி, மடிக்கணினி போல அல்லாமல், இவை முழுக்க முழுக்க Touch Screen ஆகவே இருக்கும். Mouse & Keyboard போன்றவற்றின் அவசியம் இருக்காது. 

அதாவது ஒரு Smartphone - ஐ விட பெரியது ஆனால் மடிக்கணினியை விட சிறியது. 

அவசியம் வாங்க வேண்டுமா? 

கண்டிப்பாக தேவை இல்லை. வெறும் பாடல்கள் கேட்க வேண்டும்,  படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் Smartphone பக்கம் போகலாம், Screen Size தவிர உங்களுக்கு வேறு ஒன்றும் இதில் வித்தியாசம் இல்லை.

ஆனால், கல்வி, தொழில் போன்ற முக்கிய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை கட்டாயம் வாங்கலாம். எங்கே இருந்து வேண்டும் என்றாலும் இயக்க முடியும், அதிக நேரம் Charge இருக்கும் வசதி என்பதால் இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

எதை வாங்கலாம்? 

Smartphone - கள் போலவே இவற்றிலும் பல Operating System கள் உள்ளன. iOS, Android, Blackberry, Windows RT போன்றவை இப்போதைக்கு பிரபலமான சில Operating System - கள் எனவே இதில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்யலாம்.

iOS ஆப்பிளின் தயாரிப்பு விலை அதிகம், அதே சமயம் பலனும் அதிகம். கிட்டத்தட்ட அனைத்து iPhone Application களும் இதிலும் இயங்கும் வண்ணம் உருவாக்கப் படுகின்றன.

Android கூகுளின் தயாரிப்பு, மிகக் குறைந்த விலைக்கே கிடைத்தாலும் இதில் போலிகள் பல அதிகம். அதனால் Google Play எந்த நிறுவனங்களை Support செய்கிறதோ அவற்றை வாங்குவதே நல்லது. இல்லை என்றால் உங்களுக்கு Security பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம். அதை அறிய இங்கே செல்லுங்கள்

அத்தோடு இதில் குறைந்த பட்சம் Android 4.0 இருக்கும் Tablet - ஐ வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு கீழ் என்றால் வேண்டாம்.

Blackberry மொபைல் நிறுவனத்தின் தயாரிப்பு, Business ஆட்களுக்கு உசித்தமான ஒன்று.

Windows RT - இதை Mobile OS என்று சொல்ல முடியாது, கிட்டத்தட்ட கணினி தான் இது. விண்டோஸ் கணினிகளின் அமைப்பை ஒத்த இது புதிய ஒன்று. Microsoft நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இது பல Touch Application களை கணினிகளில் உள்ளது போன்றே தருகின்றது.ஆனால் இதன் இயக்கத்தில் வரும் பிரச்சினைகளால் அதிகம் விமர்சிக்கவும் படுகிறது.

Tablet க்கு முக்கிய தேவைகள் 

Smartphone போலவே தான் இவற்றுக்கும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை Processor, RAM, Battery மற்றும் Connectivity.

Prcessor தற்போதைக்கு 1GHz உள்ள ARM Processor ஒன்றை தெரிவு செய்தல் நலம். RAM 1GB அல்லது 2GB இருக்க வேண்டும்.

Battery தான் இதில் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு நேரம் Charge தாங்கும் என்பதை விசாரித்து வாங்குதல் நலம். குறைந்த patcham 3000mAH Battery உள்ள Tablet வாங்குதல் நலம்.

Connectivity என்பதில் Bluetooth, Wifi, GPS, GPRS, 3G போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

  • Bluetooth நிறைய Tablet - களில் இல்லை, இதை தேவைப் படுபவர்கள் நீங்கள் வாங்கப் போகும் ஒன்றில் அது இருக்கிறதா என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். 
  • Wifi தான் Tablet களின் உயிர்நாடி எனவே அது கட்டாயம் இருக்க வேண்டும். 
  • GPS சில Tablet களில் வருவது இல்லை, ஆனால் இது மிக அவசியமான ஒன்று. 
  • GPRS மற்றும் 3G போன்றவை Sim Support உள்ள Tablet களில் வரும், Sim Support இல்லை என்றால் 3G Dongle Support இருக்கிறதா என்று கேட்டு வாங்கவும். இதன் மூலம் Data Card - ஐ அதில் பயன்படுத்தலாம். 


இவற்றோடு Camera உங்களுக்கு தேவை என்றால் அது முன்னால், பின்னால் இருக்கிறதா, எத்தனை MP என்று பார்த்து வாங்கவும். Tablet களுக்கு 2MP Back Camera இருந்தாலே வாங்கலாம்.

அத்தோடு பெரும்பாலும் Display Size உங்கள் விருப்பத்திற்கு தெரிவு செய்து கொள்ளுங்கள். 7 இன்ச் முதல் கிடைக்கிறது.

இவையே ஒரு Tablet PC வாங்கும் முன்பு மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள். உங்களுக்கு ஏதேனும் முக்கியம் என்று தோன்றினால் கீழே சொல்லுங்கள். 

- பிரபு கிருஷ்ணா

23 comments

pdf படிக்க எது வசதி என்று சொல்லலாமா?

Reply

Really it is very useful post

Reply

Android 4.0 மற்றும் iPad போன்றவற்றில் தமிழ் மின் புத்தகங்கள் படிக்க முடியும். ஆங்கில மின் புத்தகங்களை அனைத்து Tablet களிலும் படிக்க முடியும்.

Reply

can we open word,power point files in tab or we have to install the concerned software ?

Reply

அவற்றுக்கு எல்லாம் Applications தான் வேண்டும். Amdroid, iOS - இல் அதிகமாகவே Applications உள்ளன. 10 Inch Tablet என்றால் நீங்கள் கேட்டவற்றை பயன்படுத்துவது எளிது.

Reply

Sir
one doubt...?
Whether we can make and receive voice calls over this Tablet..
If so how it works...?
Kanthasamy

Reply

nalla padhivu anna...

Reply

பதிவுக்கும் -பகிர்வுக்கும் மிக்க நன்றி !

தொடர வாழ்த்துகள்...

Reply

அருமைங்க இததான் நானும் எதிர்பாத்தேன்

கைலையே இணையம் இருக்கணும் ஆடு மேய்க்க போனாலும் எருமை மேய்க்க போனாலும் கைலையே இணையம் இருக்கணும். அதுக்கு எது பெஸ்ட் அப்படின்னு எனக்கு தெரில. நான் இருப்பதோ குக்கிராமம். வெளில எங்கயும் போறதுமில்ல.

தகவல் சொன்னமைக்கு மிக்க நன்றிங்க !!! நாலு செம்மறி ஆட்ட வித்து வாங்கி போடறேன்

Reply

sir plz write about android educational applications.

Reply

இல்லை Simcard இருந்தாலும் அவை Data வசதிக்கு மட்டுமே.

Reply

ரூ. 3500 லிருந்து ரூ.8000 க்குள் வாங்க விரும்புகிறேன். நீங்கள் சொன்ன நல்ல Tablet எது? எந்த company? model என்ன? என்று சொன்னால் நல்லாயிருக்கும்.

Reply

நண்பரே!

intel xolo x900ல் தமிழில் டைப் செய்ய முடியுமா!

Reply

செய்யலாம். இந்த பதிவை பாருங்கள் - http://www.karpom.com/2012/09/Tamil-Unicode-Keyboard-for-android.html

Reply

Karbonn, Micromax போன்றவற்றில் ஏதேனும் ஒரு மாடலை வாங்கலாம். உங்கள் தேவைகளை பொறுத்து நீங்கள் தான் சரியான ஒன்றை தெரிவு செய்ய முடியும் :-)

Reply

Thank you very much of your valuable post.

Reply

now the days Tabs also allowed the Voice communication via GSM sim connection
for GSM voice communication , such as
Samsung Galaxy Tab P1000
Samsung Galaxy Tab N8000
Samsung Galaxy Tab2 P5100
Samsung Galaxy Tab P7300
Samsung Galaxy Tab2 7" P3100
Dell Streak
ZTE V9+ Tablet
Asus Eee Pad MeMO
Huawei MediaPad 7 Lite
Huawei MediaPad
Huawei MediaPad 10 are support to make a call.

and if you want just install VoIP apps for other tablets and you can make call through the apps..

@ Prabu Krishna if u dont know the answer plz dnt answer as wrong.

Reply

தகவலுக்கு நன்றி. தவறுக்கு வருந்துகிறேன்.

Reply

i will planing to penta T-pad Ws802c 2G model,specification is good,using GPRS & performance This model is good or bad tell me sir...

Reply

Useful info....
My Purpose is using teamviewer thru Tablet to PC. By what range i have to buy Tablet. My Usage is less.

Reply

i use only teamviewer thru tablet to PC , my usage is less. By what range
i have to Buy a Talet PC ?

Reply

You can choose micromax or karbonn tablet. Price range will be 5000 to 7000.

Reply

Post a Comment