Youtube Video -க்களை அதன் லோகோ இல்லாமல் பிளாக்கரில் Embed செய்வது எப்படி? | கற்போம்

Youtube Video -க்களை அதன் லோகோ இல்லாமல் பிளாக்கரில் Embed செய்வது எப்படி?


பல நேரங்களில் நம் வலைப்பூவில் Youtube வீடியோக்களை இணைக்க வேண்டி வரும். அம்மாதிரியான சமயங்களில் அதை பார்க்கும் நண்பர் அந்த வீடியோவில் இருக்கும் Youtube Logo மீது கிளிக் செய்தால் அவர் Youtube - சென்று விடுவார். திரும்ப அவர் நம் தளத்துக்கு வருவார் என்று சொல்ல முடியாது. எனவே அந்த Youtube logo-வை நீக்கி விட்டால் அவர் நம் தளத்திலேயே அந்த வீடியோவை பார்ப்பார். எப்படி என்று பார்ப்போம். 

இப்போது இங்கே இரண்டு வீடியோக்களை நான் இணைக்கிறேன். இரண்டையும் சாதரணமாக பார்த்தாலே உங்களுக்கு வித்தியாசம் தெரியும். முதலாவதில் வீடியோ தலைப்பின் மீது உங்களால் கிளிக் செய்ய முடியும். அதே சமயம், Play ஆகும் போது கீழே YouTube Logo இருக்கும். இரண்டாவதில் இந்த இரண்டுமே கிடையாது. 








இதை எப்படி செய்வது ? 

மிக எளிது. ஒரு வீடியோவின் Embed Code - ஐ அதன் பக்கத்தில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அதில் வீடியோ ID க்கு அடுத்து ?modestbranding=1 என்பதை நீங்கள் சேர்க்க வேண்டும். எப்படி என்பது கீழே. 

சாதாரண Youtube Embed Code: 

<iframe width="480" height="360" src="http://www.youtube.com/embed/idaqINS3ADo" frameborder="0" allowfullscreen></iframe>

Logo Less Youtube Embed Code: 

<iframe width="480" height="360" src="http://www.youtube.com/embed/idaqINS3ADo?modestbranding=1" frameborder="0" allowfullscreen></iframe>

அவ்வளவே. முதலாவதாக உள்ளது Youtube - இல் உங்களுக்கு கிடைப்பது, சிவப்பு நிறத்தில் வீடியோ ஐடி மட்டும் ஹைலைட் ஆகியுள்ளது.  இரண்டாவது நீங்கள் Edit செய்தது. இனி வாசகர் வீடியோவை பார்க்கும் போது உங்கள் தளத்தில் இருந்தே தான் பார்ப்பார். 

- பிரபு கிருஷ்ணா

9 comments

நன்றிங்க...

Reply

சின்ன விசயம்தான் ஆனால் பெரிய லாபம் பதிவர்களுக்கு

Reply

youtube on right top corner links to YOUTUBE
Pls. Visit http://tnstcworkers.blogspot.in/2013/03/kutti-chutties.html

Reply

Post a Comment