தேவையில்லாத ஈமெயில்களை தடுக்க ஜிமெயில் வழங்கும் வசதி | கற்போம்

தேவையில்லாத ஈமெயில்களை தடுக்க ஜிமெயில் வழங்கும் வசதி

மின்னஞ்சல் கணக்கு உள்ள ஒவ்வொருக்கும் தேவை இல்லாத மின்னஞ்சல்கள் வந்து தொல்லை தந்து கொண்டே இருக்கும். அவற்றை பார்க்கும் போதே எரிச்சலாய் வரும் நமக்கு, அவற்றில் இருந்து விடுபட ஜிமெயில் தரும் ஒரு வசதி தான் Auto-unsubscribe. 

தேவையில்லாத மின்னஞ்சல் வரும் போது அவற்றை விரும்பாத நாம் Spam வசதியை பயன்படுத்துவோம். ஆனால் அதே மின்னஞ்சல்களை வேறு ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பினால் மறுபடியும் நமக்கு வரும். இதிலிருந்து விடுபட முழுவதுமாக நம் மின்னஞ்சல் முகவரியை அவர்கள் அனுப்பும் பட்டியலில் இருந்து நீக்க இது உதவுகிறது. 

ஆனால் இது எல்லா Mailing Listக்கும் இன்னும் விரிவாக்கப்படவில்லை. மிகக் குறைந்த அளவே Sender களுக்கு மட்டும் இது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

குறிப்பிட்ட மின்னஞ்சலை திறந்து Spam என்பதை கிளிக் செய்யுங்கள். 



செய்தால் உங்களுக்கு கீழே உள்ளது போல வரும். 


இப்போது நீங்கள் "unsubscribe and report spam" என்பதை கிளிக் செய்தால் இரண்டு முதல் மூன்று நாட்களில் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களிடம் இருந்து மின்னஞ்சல் வருவது நின்று விடும். 

இவ்வாறு வராவிட்டால் Marked as spam என்று வரும். அவ்வாறு வந்தால் அத்தகைய மின்னஞ்சல்கள் நேரடியாக Spam க்கு சென்று விடும். உங்கள் Inbox க்கு வராது. 


இல்லை எனக்கு இந்த மின்னஞ்சலை பார்க்கவே விருப்பம் இல்லை, அவை வரவே கூடாது என்று விரும்பும் நண்பர்கள், குறிப்பிட மின்னஞ்சலை ஓபன் செய்து மின்னஞ்சலில் இறுதியில் Unsubscribe வசதி இருக்கும். அதை கிளிக் செய்து விடலாம். ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் இது வெவ்வேறு மாதிரியாக இருக்கும், ஆனால் மின்னஞ்சலில் இறுதியில் தான் இருக்கும். 

சில மாதிரிகள்:




என்னால் Unsubscribe செய்ய முடியவில்லை, ஆனால் அவற்றை தானாக டெலீட் செய்யும் படி மாற்ற முடியும் என்று கேட்டால், அதற்கும் வசதி உள்ளது. இதை ஜிமெயில் Filters பயன்படுத்தி செய்யலாம். 

இது குறித்த பதிவு, 


- பிரபு கிருஷ்ணா

10 comments

விளக்கங்களுக்கு மிக்க நன்றி...
tm2

Reply

Very very useful info for all the gmail users, thanks bro :)

Reply

அனைவருக்கும் பயனுள்ள தகவல் நன்றி....

Reply

நல்லதொரு தகவல்! பயனுள்ள விளக்கங்கள்! நன்றி!

Reply

நல்ல தகவல் நன்றிங்க..

Reply

தகவலுக்கு நன்றி

Reply

நல்ல பயனுள்ள விளக்கங்கள்.........நன்றி!

Reply

அன்பின் பிரபு - அருமையான தகவல் - ஏற்கனவே பயன் படுத்துகிறேன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

பயனுள்ள தகவல்

Reply

Post a Comment