Windows 8 க்கு Upgrade செய்த பின் பழைய Windows File - களை நீக்குவது எப்படி? | கற்போம்

Windows 8 க்கு Upgrade செய்த பின் பழைய Windows File - களை நீக்குவது எப்படி?

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான Windows 8 ஒரே மாதத்தில் 4 கோடி லைசென்ஸ்களை விற்றுள்ளது. மிகக் குறைந்த விலையில் வெளியானதே இதற்கு முக்கிய காரணம் எனலாம். பெரும்பாலானோர் பழைய OS- இல் நேரடியாக Upgrade செய்துள்ளதால், பழைய OS - இன் File - கள் அனைத்தும் அப்படியே இருக்கும் அதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம். 

நீங்கள் Windows 8 க்கு Upgrade செய்த பின் பழைய OS - ன் Program Files and Folders என அனைத்தும் Windows.old என்ற போல்டரில் இருக்கும். இவை 10 GB அளவில் இருக்க கூடும். அவற்றால் பலன் ஏதுமில்லை எனும்போது அவற்றை நீக்குவது தான் நல்லது. 



Windows.old போல்டரை நீக்குவது எப்படி ?

1. உங்கள் கணினியில் Windows Key + R அழுத்தி Run ஐ ஓபன் செய்யுங்கள். 

2. இப்போது cleanmgr என்று டைப் செய்து Disk Clean Up ஐ ஓபன் செய்யவும். 

3. OS இன்ஸ்டால் செய்துள்ள Drive பெயரை தெரிவு செய்து (பெரும்பாலும் C Drive) Next கொடுக்கவும். அடுத்த விண்டோவில் Clean Up System Files என்பதை கிளிக் செய்யுங்கள். 

4. இப்போது Files To Delete பகுதியில் Previous Windows installation என்பது தெரிவு செய்யப்படாமல் இருந்தால் தெரிவு செய்து OK கொடுங்கள். 



5. அவ்வளவு தான் File - கள் சில நிமிடங்களில் நீக்கப்பட்டு விடும்.

நன்றி - Digital Inspiration

- பிரபு கிருஷ்ணா

3 comments

பயனுள்ள தகவலுக்கு நன்றி...

Reply

நன்றிங்க...

Reply

மிக்க நன்றி பிரபு

Reply

Post a Comment