IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி | கற்போம்

IRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி


உலகிலேயே மிகக் கடினமான விஷயம் எதுவென்று கேட்டால், இந்தியர்களின் பதில் IRCTC தளத்தில் ஒரே முறையில் டிக்கெட் புக் செய்வது என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு கடினமான விஷயம் அது. அதில் டிக்கெட் புக் செய்யும் போது உங்களுக்கு உதவும் வகையில் ஒரு பயனுள்ள தகவல் ஒன்றை இன்று காண்போம். 

இந்த பதிவில் 9.30 க்கு லாக்-இன் செய்யுங்கள் என்று ஆரம்பித்து இதர விசயங்களை எல்லாம் சொல்லப் போவதில்லை. மாறாக ஒரே ஒரு ட்ரிக் மட்டும் தான் சொல்லப் போகிறேன். 

லாக் இன் செய்து, ரயிலை கண்டுபிடித்து புக் செய்யும் பக்கத்தில் தான் நமக்கு ஆரம்பிக்கும் பிரச்சினை, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு புக் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொருவரின் பெயரையும் கொடுத்து நாம் அவர்களின் வயது, பாலினம் என்று முடிப்பதற்குள் டிக்கெட்டுகள் முடிந்து விடும் வாய்ப்பு அதிகம். 


அதிலும் Payment பக்கத்தில் ஏதேனும் பிரச்சினை வந்து விட்டால் இன்னொரு முறை உங்களால் இந்த தகவலை வேகமாக நிரப்புவதற்குள் ரயில் அநேகமாக கிளம்பி இருக்கும். இதை தவிர்த்து புக் செய்யப்போகும் ஆறு பேருக்கும் ஒரே நொடியில் தகவல்களை நிரப்ப முடிந்தால், எப்படி இருக்கும். 

இந்த வசதியை இந்தியாவில் பிரபல தொழில்நுட்ப பதிவர் அமித் அகர்வால் கண்டுபிடித்துள்ளார். முதலில் Magic Autofill  என்ற பக்கத்திற்கு செல்லுங்கள், இதை எங்கோ பார்த்தது போல உள்ளது என்று நினைக்கிறீர்களா, இது IRCTC தளத்தில் பயணிகள் தகவல் கொடுக்கும் பக்கத்தின் மாதிரி தான்.



இதில் பயணிகள் குறித்த தகவல்களை முதலில் நிரப்பி விடுங்கள். பின்னர் I'm Feeling Lucky என்பதை கிளிக் செய்து அதற்கடுத்து "Magic Autofill" என்பதை உங்கள் உலவியில் Drag செய்து Bookmark Toolbar பகுதியில் விடவும். 

செய்யும் முறை:

கவனிக்க நீங்கள் இந்த பக்கத்தை Bookmark செய்யகூடாது. Firefox மற்றும் Chrome உலவியில் Bookmark Toolbar Enable செய்து இருக்க வேண்டும், அப்போது தான் இது அங்கே Add ஆகும். Bookmar Toolbar Enable செய்ய. 

Firefox - இதில் URL பகுதிக்கு மேல் Right Click செய்து Bookmark Toolbar என்பதை Enable செய்ய வேண்டும். 


Chrome - இதில் Wrench Icon >> Bookmarks >> Show Bookmarks bar என்பதை கிளிக் செய்ய வேண்டும். 


இப்போது Drag செய்து Bookmark பகுதியில் விட்டால் Magic Autofill - ஐ விட்டால், அது கீழே உள்ளது போல தோன்றும். 

In Chrome
In Firefox
இப்போது IRCTC தளத்தில் பயணிகள் தகவலை நிரப்பும் போது இந்த Magic Fill என்பதை அழுத்தினால், அது ஒரே நொடியில் அனைவருக்கும் தகவல்களை நிரப்பி விடும். 

இது கூடுதலாக உள்ள Food, ID Card No, ID Card Type என்பதை குறித்த கவலை வேண்டாம், நீங்கள் புக் செய்யும் போது அது கேட்கப்படவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. 

என்ன நடக்கிறது ? 

இந்த Magic Autofill ஒரு Java Script ஆகும் நீங்கள் நிரப்பும் தகவல்கள் உங்கள் உலவியில் சேமிக்கப்படும், நீங்கள் கிளிக் செய்யும் போது IRCTC தளத்தில் உள்ள கோடிங் உடன் மேட்ச் ஆகி தகவல்கள் ஒரே நொடியில் நிரப்பப்பட்டு விடும். 

நன்றி -  Digital Inspiration

- பிரபு கிருஷ்ணா

23 comments

மிக நல்ல பயனுள்ள தகவல்......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Reply

பயனுள்ள தகவல்... நன்றி நண்பரே...

பகிர்கிறேன்...

Reply

நண்பர்களே! மாதா மாதம் பரிசுகளை வழங்க ஒரு இணைய தளத்தை உருவாக்கி உள்ளோம் எனவே நீங்கள் வலைப்பூ வெய்த்து இருந்தால் இதனை பகிர்ந்து கொள்ளவும். go to : http://www.wwwprize.tk

Reply

பயனுள்ள தகவல், நன்றி :)

Reply

பயனுள்ள தகவல் . நன்றி

Reply

irtc la master list nu onnu irukku boss

Reply

Super ma!! Thanks. I will share Link to this post in my blog!!

Reply

இந்த பயணிகளின் மாஸ்டர் லிஸ்ட் மற்றும் பயணிகளின் பயன லிஸ்ட் ஆகிய வசதிகள் iirctc லேயே உள்ளது - user profile கீழ். அப்டின்னு ட்விட்டர்ல ஒரு நண்பர் சொல்றாரு..அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் பிரபு..?!

Reply

@சேலம் தேவா

ளோடே ஆவாது, அதுக்கு பேசாம நாமே type பண்ணிடலாம் அவ்வளவு நேரம் ஆகும். ஏன்னா அந்த சsite-டே அப்படித்தான்.

Reply

very useful thanks...

Reply

பயன்தரும் தகவல் !

தொடர வாழ்த்துகள்...

Reply

என்னால முடியலீங்க. எங்க போகோணுமின்னாலும் நடந்தே போய்க்கிறனுங்க.

Reply

டிரை பண்ணி பார்த்துர வேண்டியதுதான்

Reply

ஹஹாஹா, ரசித்து சிரித்தேன் :)

பயனுள்ள தகவல் பிரபு அவர்களே!

Reply

ஹாஹாஹா, ரசித்து சிரித்தேன் :)

பயனுள்ள தகவல் பிரபு அவர்களே, நன்றி!

Reply

அன்பின் பிரபு - தகவலுக்கு நன்றி - முயல்கிறேன் - இருப்பினும் மாஸ்டர் லிஸ்ட் எனக்கு உதவுகிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

Ok. Good. Already in IRCTC website like this facility.

Reply

Ok. Good. Already in IRCTC website like this facility.

Reply

Ok. Good. Thanks for your information. But already have like one facility in IRCTC.

ANYWAY THANKS FOR YOUR GUIDE

Reply

Really informative information for us. Thank you..

Reply

Post a Comment