Android Rooting பற்றி பதில் தளத்தில் நண்பர் ஒருவர் வினா எழுப்பி இருந்தார். ஏற்கனவே அது குறித்து பதிவு எழுத நினைத்து இருந்தாலும் அதன் பாதுகாப்பு காரணங்கள் கருதி எழுதவில்லை. நிறைய பேருக்கு அது குறித்த கேள்விகள் இருப்பதால் அது பற்றிய நிறை, குறைகளை சொல்லி விட்டு எப்படி Root செய்வது என்று சொல்கிறேன். அதன் பிறகு உங்கள் விருப்பம் :-)
Android Rooting என்றால் என்ன?
Android Rooting என்பது உங்கள் போனுக்கு நீங்கள் Super User Access பெறுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் இதுவரை உங்கள் போன் மூலம் என்ன செய்ய முடியாது என்று நினைத்தீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். custom software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் Battery Life, OS Upgrade மற்றும் பல.
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
பலன்கள்:
Custom Software (ROM’s):
ROM (Read Only Memory) ஆனது Android போனை இயக்க உதவுகிறது. போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதரணமாக கிடைக்காது. Root செய்வதன் மூலம் Custom ROM வசதி நமக்கு கிடைக்கும். இதன் பெரிய பலன் இதன் மூலம் Android OS Upgrade வசதி நமக்கு கிடைக்கும்.
Custom Themes:
Android Theme - ஐ நீங்கள் மற்றும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது.
Speed and Battery:
முன்னமே சொன்னது போல போனின் Speed மற்றும் Battery Life அதிகரிக்கும்.
ஆனால் இரண்டும் சேர்ந்து கிடைக்காது. Speed அதிகம் வேண்டும் என்றால் Battery Life குறையும். Battery life அதிகம் வேண்டும் என்றால் Speed குறையும். [தகவலைமின்னஞ்சல் மூலம் சொன்ன நண்பர் விக்னேஷ்க்கு நன்றி]
ஆனால் இரண்டும் சேர்ந்து கிடைக்காது. Speed அதிகம் வேண்டும் என்றால் Battery Life குறையும். Battery life அதிகம் வேண்டும் என்றால் Speed குறையும். [தகவலைமின்னஞ்சல் மூலம் சொன்ன நண்பர் விக்னேஷ்க்கு நன்றி]
Android OS Upgrade:
மேலே சொன்னது போல Custom ROM உங்களுக்கு Android OS Upgrade வசதியை பெற முடியும்.
இவை மட்டுமின்றி WiFi and USB tethering, Simple Backup Solution போன்ற வசதிகள் கிடைக்கும்.
குறைபாடுகள்:
பிரச்சினை என்றால் சில Applications உங்கள் போனில் இயங்க மறுக்கும், இதனால் புது போன் வாங்கும் நிலைக்கு கூட கொண்டு செல்லும்.
Android Market அல்லாத Applications அல்லது இணையம் மூலம் Virus வரும் வாய்ப்பு உள்ளது. இது நீங்கள் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.
இப்படி ரூட் செய்து உங்கள் போனில் ஏதேனும் பிரச்சினை வந்தால் வாரண்டி கிளைம் செய்ய முடியாது. (நன்றி - மாசிலா, பின்னூட்டம்)
இப்படி ரூட் செய்து உங்கள் போனில் ஏதேனும் பிரச்சினை வந்தால் வாரண்டி கிளைம் செய்ய முடியாது. (நன்றி - மாசிலா, பின்னூட்டம்)
Android Phone - ஐ Root செய்வது எப்படி?
முதலில் உங்கள் போனில் உள்ள முக்கிய தகவல்களை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். போன் மெமெரியில் 25MB Space இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
1இப்போது SuperOneClick என்ற மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
2. இப்போது உங்கள் Android போனை உங்கள் கணினியில் USB Data Cable மூலம் இணைத்து விட்டு, Settings>> Applications >> Development என்பதில் "USB Debugging" என்பதை enable செய்யவும்.
3. இப்போது கணினியில் SuperOneClick மென்பொருளை ஓபன் செய்யுங்கள்.
4. Samsung Capacitive என்கிற போன் மாடல் தவிர மற்றவற்றை பயன்படுத்துபவர்கள் Universal என்பதை கிளிக் செய்து Root என்பதை கிளிக் செய்யவும்.
5. இப்போது சிறிது நேரத்தில் உங்கள் Phone Root ஆகி விடும். அதன் பின்னர் Allow Non Market Apps என்பதை கிளிக் செய்யுங்கள் (தேவைப்பட்டால்).
அவ்வளவு தான் உங்கள் போன் Root ஆகி விட்டது. ஆனால் போனின் பாதுகாப்பு இனி உங்கள் கையில்.
Android Phone - இல் இருந்தே Root செய்ய உதவும் Applications:
2. z4root
- பிரபு கிருஷ்ணா
24 comments
Os ஐ மற்ரும் இந்த ரூட் விவரம் ஆங்கிலத்தில் படித்து குழம்பி கொண்டிருந்தேன்..இப்போது தமிழில் அழகாக சொல்லிவிட்டீர்கள் ஆனா பாதுகாப்பு,வைரஸ்ன்னு பயமுறுத்துறீங்களே..அதான் தயக்கமா இருக்கு
Replyஆம் கொஞ்சம் ரிஸ்க் தான். என்னை கேட்டால் வேண்டாம் என்று தான் சொல்வேன்.
Replyமுக்கிய தகவல்கள் தமிழில் அறிய கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
Reply(மேலும் ஒரு தகவல் : இப்படி 'ரூட்' செய்வதால் மொபைலின் கேரன்டியும் செல்லாதாகிவிடும்).
நன்றி
Replyகருத்துக்கு நன்றி...
ReplyI don't have an Android :)
Replyநண்பரே ஒரு முறை ரூட் செய்த பின் அதனை upgrade செய்வது பற்றி கொஞ்சம் கூறுங்கள் நண்பரே.
Replyஎன்னுடைய கைபேசி சாம்சங் galaxy y.அதனை ginger bread இல் இருந்து 4.0 upgrade செய்வது எப்படி.
mr. பிரபு கிருஷ்ணா. நான் sony xperia mini use panren. my os icecream sandwich 4.0 version. நான் இப்பொழுது rooting பண்ணி என்னோட போன்ல Android 4.1 jellybean os போட்டுக்க முடியுமா?
Replyபாதியிலே முடித்து விட்டது போல் தோன்றுகிறது.அடுத்த ஸ்டெப் என்ன செய்வது கூறவும்.அப்கிரேடு எப்படி செய்வது என்பதை விளக்கமாக கூறவும்.
Replyநன்றிங்க........
Replyஎன் மொபைல் LG P500 - Froyo ல இருந்து
ReplyJelly Bean 4.1.1 இப்போ இன்ஸ்டால் பண்ணியிருக்கேன். ரூட் பண்ணி அப்கிரேட் பண்றதல்லாம் ரொம்ப ரிஸ்க்தான்னாலும் ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு.. புதுசா ஏதாவது ரோம் வந்துருக்கான்னு பார்த்து.. வாரத்துக்கு ஒன்னு மாத்திட்டு இருக்கேன் இப்பொல்லாம்.. :-)..
நல்ல பதிவு.. ரூட்டிங் பத்தி விளக்கறது ரொம்ப கஷ்டமான விசயம்.. நல்லா எழுதிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
Useful and good post brother!
Replyஆபரேசன் சக்ஸஸ் ஆனா பேஷன்ட் காலி அப்படின்னு ஆகாம இருந்தா சரிதான்.....
Replyநாகு
WWW.TNGOVERNMENTJOBS.IN
Is it reversible??
ReplyYes. you can unroot it.
ReplyI done it with https://www.youtube.com/watch?v=vSHiFrxKVlU
ReplyAfter that I don't know what to do. Can you please explain me what next. ie how to upgrade the OS or changing the ROM and all?
How to change the ROM??
Replyசார் என்னுடைய மொபைல் சாம்சங் கேலக்ஸி பிட் 5670 Froyoஇருந்தது நான் வேறு முறையில் ubgrade பண்னினேன்( gengerbread-2.3.6) இப்பJelly Bean 4.1.1 பண்ணணும்னு ஆசையா இருக்கு இந்த பதிவில் சொல்லியபடி பண்ண முயற்சி பண்னினேன் முடியல எப்படி பண்ணுவது தயவு செய்து கூறுங்கள்
Replyசார் என்னுடைய மொபைல் சாம்சங் கேலக்ஸி பிட் 5670 Froyoஇருந்தது நான் வேறு முறையில் ubgrade பண்னினேன்( gengerbread-2.3.6) இப்பJelly Bean 4.1.1 பண்ணணும்னு ஆசையா இருக்கு இந்த பதிவில் சொல்லியபடி பண்ண முயற்சி பண்னினேன் முடியல எப்படி பண்ணுவது தயவு செய்து கூறுங்கள்
Replyunroot பண்ணுனா வாரண்டி கிடைக்குமா?
Replyவாரண்டி கிளைம் செய்ய முடியாது.
Replyநன்றி. நான் பயன்படுத்துவது சாம்சங் நோட் e-7000. 16 GB in built and 16 GB Ext memory chip. All functions I have and can modify as i wish. my android OS automatically up graded from time to time. at present 4.1.2So it means I need not to root my set. Is it correct? please say yes or no.
ReplyNo need to root your phone.
Replyஎன்னிடம் samsung galaxy s3 mini உள்ளது .apps to move sd card பண்ணமுடியவில்லை.சில சாப்ட்வேர் களை பயன்படுத்தி முயற்சி செய்தால் your divice not root previlage என்று வருகிறது.வழி சொல்லவும் .
ReplyPost a Comment