ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி? | கற்போம்

ஜிமெயிலில் Alternative Log-in Id அமைப்பது எப்படி?

நமது மின்னஞ்சல் கணக்கில் தான் நாம் பல தகவல்களை வைத்து இருப்போம். அப்படிப்பட்டவற்றை யாரும் ஹாக் செய்யாமல் இருக்க நாம் எப்போதும் பாதுகாப்பாக பயன்படுத்தவே விரும்புவோம். ஜிமெயில் பயனர்களுக்கு அந்த பாதுகாப்பை அதிகரிக்கும் வண்ணம் Alternative Log In id உருவாக்கும் வசதி ஒன்று உள்ளது. அது என்ன என்று பார்ப்போம். 

இந்த Alternative Log In id ஒரு மின்னஞ்சல் முகவரியாக இருக்க வேண்டும். இதில் நீங்கள் உங்களின் இரண்டாவது ஜிமெயில் முகவரியை பயன்படுத்த முடியாது. மற்றபடி Hotmail(Outlook), Yahoo போன்ற மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தலாம். 

உங்கள் ஜிமெயில் கணக்கில் அல்லது கூகுள் கணக்கில் நுழைந்து Account என்பதை கிளிக் செய்யுங்கள். 


வரும் பக்கத்தில் Security என்பதை கிளிக் செய்யுங்கள். பின்னர் "Account Recover Options" என்பதை கிளிக் செய்யுங்கள். 

இப்போது வரும் பக்கத்தில் "Alternate email addresses" என்ற பகுதியில் தான் ஒரு மின்னஞ்சல் முகவரியை தர வேண்டும். Hotmail(Outlook), Yahoo போன்ற மின்னஞ்ச சேவைகளில் Sign-up செய்யும் போது நீங்கள் உங்களின் ஜிமெயில் முகவரியை கொடுத்து இருந்தால் அவற்றையும் பயன்படுத்த இயலாது. எனவே உங்கள் ஜிமெயில் முகவரிக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு மின்னஞ்சல் முகவரியை தர வேண்டும். 


நான் எனது Outlook மின்னஞ்சல் முகவரியை தந்துள்ளேன். இப்போது கீழே உள்ள Save என்பதை கிளிக் செய்யுங்கள். 

அடுத்து நீங்கள் கொடுத்த Alternative Email முகவரி கணக்கில் நுழைந்து கூகுள் அனுப்பி உள்ள Email Verification மின்னஞ்சலை Accept செய்ய வேண்டும். 


இதை கிளிக் செய்த உடன் "Associated Email Address Verified " என்று வந்து விடும். 

இனி நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைய உங்களின் Alternative Email Address மற்றும் உங்கள் ஜிமெயில் பாஸ்வேர்ட் கொடுத்து நுழையலாம். 


இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள். 

படங்களில் உள்ள மின்னஞ்சல் முகவரியில் என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நான் அதனை பயன்படுத்துவது இல்லை. 

- பிரபு கிருஷ்ணா

6 comments

பயனுள்ள தகவல் நண்பரே...

பகிர்கிறேன்... நன்றி...

Reply

அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்.பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி....

Reply

அன்பின் பிரபு - தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

பிரபு, நான் மைக்ரோசாப்ட் outlook பயன்படுத்திக்கொண்டு இருகிறேன். அதில் ஜிமெயில் போல எப்படி password அமைப்பது?

Reply

U r great prabu
my best wshz.

Reply

ஜிமெயில் போல பாஸ்வேர்ட் என்றால் எந்த மாதிரி கேட்கிறீர்கள்?

Reply

Post a Comment