Android Phone வாங்கிய பிறகு அனைவருக்கும் வரும் ஒரு கவலை, பாடல்களை கேட்பதில். Default ஆக உள்ள பிளேயர் தன் இஷ்டத்துக்கு ஒரு வரிசையில் பாடும். ஆனால் நாம் பாடல்களை Folder போட்டு வைத்து இருப்போம். நமக்கு பிடித்த வரிசையில் பாடல்களை கேட்க நினைத்தால் அதற்கு தனியாக ப்ளே லிஸ்ட் உருவாக்க வேண்டும். பெரும்பாலான மியூசிக் ப்ளேயர்கள் இதே போல தான்.
ஆனால் அப்படி Playlist உருவாக்குவது எல்லோருக்கும் சாத்தியப்படாது. நேரமும் இருக்காது. அதே சமயம் நமது File Manager மூலம் கேட்க நினைத்தால் ஒரு பாடல் மட்டுமே ஒரே நேரத்தில் பாடும். பிறகு நாம் தான் மாற்ற வேண்டும். இதை தவிர்த்து நம்முடைய Folder-இல் நாம் அமைத்த வரிசைப்படி பாடல்களை பாட ஒரு Application இருந்தால் நல்லது தானே. இதற்கு தீர்வு தரும் ஒரு Application பற்றி பார்ப்போம்.
Meridian Player – Review
அந்த Application பெயர் “Meridian Media Player Revolute”. இதன் மூலம் எந்த போல்டரில் இருந்தும், நீங்கள் வரிசைப் படுத்தி உள்ள முறையில் பாடல்களை கேட்டு மகிழலாம்.
எளிதான இதன் Interface உங்கள் பாடல்களை அழகாக வரிசைப்படுத்துகிறது. எனவே உங்கள் பாடலையோ அல்லது பாடல் உள்ள Folder எதை வேண்டும் என்றாலும் எளிதாக தேடி கண்டுபிடித்து விடலாம்.
ஆடியோ மட்டுமின்றி வீடியோக்களையும் பார்க்கும் வசதி இதில் உள்ளது.
இதன் மாற்ற சில சிறப்பம்சம்கள்
- ID3 editing வசதி
- .srt subtitle support செய்கிறது.
- Song rating செய்யும் வசதி உள்ளது.
- வீடியோவை ஆடியோ ஆக கேட்கும் வசதி.
இது ஒரு இலவச Application. விருப்பமிருந்தால் இதன் Pro வெர்சன் கூட நீங்கள் வாங்கலாம். Android 1.6 மற்றும் அதற்கு அடுத்த வெர்சன்களை பயன்படுத்துபவர்கள் இதை பயன்படுத்த முடியும்.
Prabu Krishna Rating: 4.0/5




