இந்திய Android App Developers-க்கு சந்தோஷ செய்தி | கற்போம்

இந்திய Android App Developers-க்கு சந்தோஷ செய்தி


ஆன்ட்ராய்ட் பயனர்கள் அனைவருக்கும் Home Page என்றால் அது Google Play தான். கிட்டத்தட்ட 7 லட்சம் Applications இருக்கின்றன. அதில் பல இலவசம் என்ற போதும் சில கட்டண முறையிலும் கிடைகின்றன. அவற்றையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். 

அத்தகைய கட்டண மென்பொருட்களை விற்க இதுவரை குறிப்பிட்ட நாடுகளை மட்டுமே கூகுள் அனுமதித்து வந்தது. அந்த பட்டியலில் கடந்த மாதம் இந்தியாவை இணைத்தது, ஆனால் மறுநாளே இந்தியா நீக்கப்பட்டு விட்டது. இது குறித்து கூகுள் எந்த செய்தியும் வெளியிடவில்லை.

ஆனால் மறுபடியும் இந்தியா Paid Application - களை விற்கும் நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை Google Play Developers வலைப்பூவில் அதன் மேனேஜர் Mr. Brahim Elbouchikhi அறிவித்துள்ளார். 

இது மட்டும் Google Play தளத்தில் இந்தியர்களின் பங்கு குறித்து சுவாரஸ்யமான விசயங்களையும் அவர் சொல்லி உள்ளார். 

  • கடந்த வருடம் Google Play தளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 400% அதிகரித்துள்ளது. 
  • கடந்த ஆறு மாதத்தில் இந்தியாவை சேர்ந்த Android Users டவுன்லோட் செய்த Applications எண்ணிக்கை அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளை அதிகம். 
  • Applications Download செய்வதில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.  
இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே இந்திய Android App Developer களுக்கு தங்கள் Application - களை விற்கும் வசதியை Google Play தந்துள்ளது. 

ஏற்கனவே உங்கள் Apps இலவசமாக கொடுக்கப்பட்டு இருந்தால் இனி அவற்றை Monetize செய்ய முடியும், புதிய Apps களை Paid App ஆக விற்க முடியும். 

அதோடு இந்திய ரூபாயை Google Play தளத்தில் Support ஆகும் படி மாற்றி உள்ளதால் கட்டண App-களை வாங்கும் நபர்களுக்கும் இனி எளிதாக இருக்கும். 

கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை ஆகாது. காரணம் இது அதிகாரப்பூர்வ அறிவுப்பு, அதோடு பல வசதிகள் இந்தியாவிற்கு சாதகமாக மாற்றிய பின் தான் இந்த அறிவிப்பே வந்துள்ளது. 

நீங்களும் ஒரு Android App Developer என்றால் உங்களுக்கு வாழ்த்துகள் :-) 

Thanks - Tech Hints

- பிரபு கிருஷ்ணா

6 comments

நல்ல செய்தி!

நானும் அப்ளிகேசன் டெவலப்பர் ஆகணும்.

(இதையே தான் நெடுங்காலமா சொல்லிக்கிட்டு இருக்கேன்)

:) :) :)

Reply

பிரபல இந்திய Android Developers பற்றியும்,அவர்களுடைய பயனுள்ள Apps பற்றியும் உங்களிடமிருந்து பதிவை எதிர்பார்க்கிறேன்.

Reply

நல்ல பகிர்வு. டெவலப்பர்களுக்கு வாழ்த்துக்கள்....ஆகப்போகிறவர்களுக்கும் கூட.

Reply

நானும் ஒரு applicarion-நோட ரெடியா இருக்கேன் ..

பகிர்வுக்கு நன்றி சகோ

Reply

எணக்கு எந்த வங்கீ கணக்கும் கிடையாது நான் எப்படி வாங்குவது

Reply

வங்கி கணக்கு உள்ளவர்கள் பெயரை Application Developer ஆக குறிப்பிடுங்கள்.

Reply

Post a Comment