ஜிமெயிலில் Undo Time Limit- ஐ அதிகரிப்பது எப்படி? | கற்போம்

ஜிமெயிலில் Undo Time Limit- ஐ அதிகரிப்பது எப்படி?

ஜிமெயிலில் உள்ள பல முக்கிய வசதிகளில் ஒன்று Undo. ஒரு மின்னஞ்சலில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது எதையேனும் சேர்க்காமல் விட்டு இருந்தாலோ உடனடியாக அது செல்வதை நிறுத்தி மறுபடி எடிட் செய்ய இது பயன்படுகிறது. அதே போல ஒரு மின்னஞ்சலை தவறுதலாக நீக்கி விட்டாலும் இதன் மூலம் மீட்க முடியும். இதன் Time limit - ஐ எப்படி அதிகரிப்பது என்று பார்ப்போம். 

ஜிமெயில் Default ஆக 10 நொடிகளுக்கு இந்த Undo வசதியை காண்பிக்கும். இது போதவில்லை என்று நினைப்பவர்களும் இதை செய்யலாம். 

1. முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். 

2. இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள்.



3. இப்போது General Tab - இல் “Undo Send” என்ற பகுதிக்கு வரவும். அதில் Undo வசதி Enable ஆகி இருக்கவில்லை என்றால் செய்யவும். ஏற்கனவே Enable ஆகி இருந்தால் அதில் உங்களுக்கு எவ்வளவு நொடிகள் காட்டுகிறதோ அதை நீங்கள் அதிகரிக்க விரும்பினால் அதிகரிக்கலாம். 

அதிகபட்சமாக 30 நொடிகள் இருக்கும். அதையே வைத்துக் கொள்ள விரும்பினால் 30 என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


4. இப்போது "Save Settings" கொடுத்து Save செய்து விடுங்கள். 

5. இப்போது நீங்கள் அனுப்பிய மெயில், நீக்கிய மெயில், Type செய்து பாதியில் Discard செய்த மெயில் என அனைத்துக்கும் Undo வசதி 30 நொடிகள் வரை இருக்கும். மூன்றும் கீழே படத்தில் உள்ளது. 





வேறு ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே கேளுங்கள். 

3 comments

தகவலுக்கு நன்றி

Reply

Post a Comment