தமிழில் டைப் செய்வது குறித்து தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று ஏற்கனவே எழுதி இருந்தாலும் அது மென்பொருள் என்பதால், வெளியிடங்களில் புதிய கணினிகளில் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை வரலாம். இதனை தவிர்க்கும் பொருட்டு ஆன்லைன் மூலம் எப்படி இதை செய்வது என்று பார்ப்போம்.
தமிழில் டைப் செய்வதில் புதியவர்கள் பெரும்பாலும் இதிலிருந்து தான் ஆரம்பிப்பார்கள். மிக எளிதான இது நான் முன்பு ஒரு பதிவில் சொன்ன மென்பொருள் போன்றது தான். நீங்கள் ஆங்கிலத்தில் என்ன டைப் செய்கிறீர்களோ அது தமிழில் கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா என பல மொழிகளையும் ஒரே இடத்தில் டைப் செய்யலாம்.
2. Lexi Logos
இந்த தளம் முந்தயதை விட கொஞ்சம் மாற்றங்களுடன் இருக்கும். இதில் சில எழுத்துக்களுக்கு நீங்கள் மௌஸ் பயன்படுத்ததியாக வேண்டும். இதிலும் ஹிந்தி மற்றும் பல மொழிகளை டைப் செய்யும் வசதி உள்ளது.
நான் தமிழை தமிழில் தட்டச்சு செய்ய விரும்புகிறேன், ஆங்கிலம் பயன்படுத்த விரும்பவில்லை என்பவர்கள் இதை பயன்படுத்தலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் போகப் போக எளிதாகி விடும்.
ஒரே ஒரு விதமான Keyboard மட்டும் கொண்டிருக்காமல் உங்களுக்கு விருப்பமான Keyboard மூலம் தட்டச்சு செய்ய இது உதவுகிறது. இதில் கிடைக்கும் தமிழ் Keyboard-கள் Suratha Bamuni, Tamil99, Tamil99 Extended, Anjal Paangu, ISIS, Inscript, Modular (Visual Media), Typewriter (Visual Media)
5. Quillpad
நிறைய பேருக்கு பரிச்சயமான ஒன்று இது. Google Transliteration போலவே இருக்கிறது இது. இது MS Word போல இருப்பதால் Color, Size, Alignment போன்றவற்றை டைப் செய்யும் இடத்திலேயே நீங்கள் செய்து கொள்ளலாம்.
அழகி என்ற ஒரு மென்பொருளை பயன்படுத்தி தட்டச்சு செய்பவர்களுக்கு இது எளிதாக இருக்கும். ஆங்கில பகுதியில் தட்டச்சு செய்தால் தமிழ் பகுதியில் தமிழ் எழுத்துகள் வரும்.
மற்ற சில தளங்கள் உள்ளன. அவை கீழே.
7. Gate2Home
9. Intertype
10. Lipikaar
11. Jvmsofts [Bamini, Romanished mode]
இதில் சிலவற்றை நான் தவிர்த்து இருக்கலாம். உங்களுக்கு தெரிந்த, பதிவில் இல்லாதவற்றை பின்னூட்டம் மூலம் சொல்லவும்.
5 comments
அருமையான தொகுப்பு. அநேகமாக விடுதல் இன்றி அனைத்தையும் தொகுத்து வி்ட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
Replyநல்ல தகவல்..
Replywww.amarkkalam.net
நல்லதொரு தொகுப்பிற்கு மிக்க நன்றி...
Replyஒரு சந்தேகம்...
Replyநீங்கள் சொல்லியுள்ள முறைகளில் மென்பொருள் பயன்படுவதில்லையா?
மென்பொருள் இல்லாமல் கணிணியில் ஆங்கிலம்.. ஏன் 0,1 கூட தட்டச்ச முடியாது..
மென்பொருள் இல்லாமல் தட்டச்சு செய்ய ஒரே வழி தட்டச்சு இயந்திரத்தில் (Typewriter) தட்டச்சுவது தான்.
(என்னே ஒரு கண்டுபிடிப்பு!! ஆளுங்க, உனக்கு ஏன் இந்த நோபல் பரிசெல்லாம் தர மாட்டேங்குறாங்க? ;))
கற்போம் தளம் சார்பாக உங்களுக்கு நோபல் பரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை உங்கள் வீட்டுக்கு வந்து விடும். ;-))))
ReplyPost a Comment