October 2012 | கற்போம்

AfterFocus For Android - உங்கள் புகைப்படங்களை மெருகேற்ற



போன் கேமரா மூலம் நாம் எடுக்கும் படங்கள், அது உள்வாங்கும் அனைத்தையும் தெளிவாய் காட்டும். இதனால், ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் நாம் Focus செய்ய இயலாது. இந்த குறையை தவிர்க்க, நீங்கள் ஏற்கனவே எடுத்த ஒரு படத்தில் தேவையான இடத்தை/நபரை மட்டும் Focus செய்ய உதவும் application தான் AfterFocus.

PPT File ஒன்றை Blogger - இல் Embed செய்வது எப்படி?


சில நேரங்களில் நாம் உருவாக்கிய Powerpoint Presentation களை நமது தளத்தில் இணைக்க வேண்டி இருக்கும். அவற்றை படங்களாக காட்டுவதை விட அப்படியே நம் தளங்களில் Embed செய்தால் எளிதாகவும் இருக்கும், சீக்கிரம் Load ஆகவும் செய்யும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். பிளாக்கர் மட்டுமின்றி மற்ற தளங்களிலும் இதை பயன்படுத்த முடியும். 

மிக எளிதாக செய்யும் வழியை உங்களுக்கு சொல்கிறேன். இதை செய்ய நீங்கள் Hotmail அல்லது Outlook.com இல் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் இப்போதே ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

1. இப்போது skydrive தளத்தில் உங்கள் Microsoft Account மூலம் நுழையவும். 

2. Upload  என்பதை கிளிக் செய்து  உங்கள் PPT File - ஐ தெரிவு செய்யுங்கள். 

3. File Size - ஐ பொறுத்து அது Upload ஆன உடன் அதன் வலது மேல் மூலையில் கிளிக் செய்து அதை தெரிவு செய்ய வேண்டும். 



4. இப்போது மேலே உங்களுக்கு சில வசதிகள் வரும். அதில் Embed என்பதை கிளிக் செய்யுங்கள். 


5. இப்போது வரும் பகுதியில் Generate என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு Coding கிடைக்கும். அதை காபி செய்து கொள்ளுங்கள். 

6. இப்போது உங்கள் Post Edit பகுதியில் HTML-ஐ கிளிக் செய்து வரும் பகுதியில் அதை Paste செய்ய வேண்டும். 


7. மிகச் சரியான இடத்தில் Paste செய்ய வேண்டும் என்றில்லை. ஒரு இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள், பின்னர் மீண்டும் Compose பகுதிக்கு வந்து Presentation - ஐ காபி செய்து வேறு இடத்தில் Paste செய்து கொள்ளலாம். 

அது கீழே உள்ளது போல இருக்கும். 


இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். 


- பிரபு கிருஷ்ணா

Team Viewer For Android - ஆன்டிராய்டில் இருந்து கணினியை இயக்க

அநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாக உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி கண்ட்ரோல் செய்யலாம்.

இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.

ஆன்லைனில் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.


கீபோர்டு பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள கீபோர்டு தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம். 

left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது. 

Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும். Team Viewer என்றால் என்ன என்று கேட்பவர்கள் இந்தப் பதிவை படிக்கவும்

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

எப்படி இயங்குகிறது என்று காண: 



இதை தரவிறக்கம் செய்ய.இங்கே கிளிக் செய்யவும்

அல்லது இந்த QR Code-ஐ  Bar Code Scanner மூலம் Scan செய்யவும்.

ஜிமெயிலில் Undo Time Limit- ஐ அதிகரிப்பது எப்படி?

ஜிமெயிலில் உள்ள பல முக்கிய வசதிகளில் ஒன்று Undo. ஒரு மின்னஞ்சலில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது எதையேனும் சேர்க்காமல் விட்டு இருந்தாலோ உடனடியாக அது செல்வதை நிறுத்தி மறுபடி எடிட் செய்ய இது பயன்படுகிறது. அதே போல ஒரு மின்னஞ்சலை தவறுதலாக நீக்கி விட்டாலும் இதன் மூலம் மீட்க முடியும். இதன் Time limit - ஐ எப்படி அதிகரிப்பது என்று பார்ப்போம். 

ஜிமெயில் Default ஆக 10 நொடிகளுக்கு இந்த Undo வசதியை காண்பிக்கும். இது போதவில்லை என்று நினைப்பவர்களும் இதை செய்யலாம். 

1. முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். 

2. இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள்.



3. இப்போது General Tab - இல் “Undo Send” என்ற பகுதிக்கு வரவும். அதில் Undo வசதி Enable ஆகி இருக்கவில்லை என்றால் செய்யவும். ஏற்கனவே Enable ஆகி இருந்தால் அதில் உங்களுக்கு எவ்வளவு நொடிகள் காட்டுகிறதோ அதை நீங்கள் அதிகரிக்க விரும்பினால் அதிகரிக்கலாம். 

அதிகபட்சமாக 30 நொடிகள் இருக்கும். அதையே வைத்துக் கொள்ள விரும்பினால் 30 என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


4. இப்போது "Save Settings" கொடுத்து Save செய்து விடுங்கள். 

5. இப்போது நீங்கள் அனுப்பிய மெயில், நீக்கிய மெயில், Type செய்து பாதியில் Discard செய்த மெயில் என அனைத்துக்கும் Undo வசதி 30 நொடிகள் வரை இருக்கும். மூன்றும் கீழே படத்தில் உள்ளது. 





வேறு ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே கேளுங்கள். 

MS Office - இல் Auto Save வசதியை Enable செய்வது எப்படி? [Word, PPT, Excel]


MS Office - இல் வேலை செய்து கொண்டிருக்கும் போது கணினி Shutdown அல்லது Not Responding போன்றவற்றால் திடீர் என்று கணினி இயங்க மறுக்கலாம். ஒரு பெரிய டாகுமென்ட் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தால்  , அது Save செய்யப்படாமல் இருந்தால் அவ்வளவு தான். நமக்கு தலைவலியே வந்து விடும். 

இதை தவிர்த்து அதில் Auto - Save என்னும் ஒரு வசதி மூலம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை தானாகவே டாகுமென்ட் Save ஆகும் படி செய்தால், மேற்சொன்ன பிரச்சினையின் போது நமக்கு கொஞ்சம் தலைவலி குறையும். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

முதலில் எந்த ஒரு டாகுமென்ட் வேலையை ஆரம்பித்தாலும் முதலிலேயே ஒரு பெயர் கொடுத்து Save செய்து கொள்ளுங்கள். 

இப்போது உங்கள் டாகுமென்ட்டில்  File என்பதை கிளிக் செய்ய வேண்டும். (2007, 2010 என்றால் ஒரு Icon இருக்கும்.) அதில் Word Options என்பதை தெரிவு செய்யுங்கள். 


இப்போது வரும் பகுதியில் Save என்பதை கிளிக் செய்யுங்கள். 


இப்போது "Save AutoRecover information every" என்பதில் ஏற்கனவே 10 நிமிடங்கள் என்று இருக்கும், அதை 1 நிமிடம் என்று மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது ஓகே கொடுத்து விடுங்கள். 



அவ்வளவு தான் உங்கள் டாகுமென்ட் இனி ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறை தானாகவே Save ஆகி விடும். 

- பிரபு கிருஷ்ணா

MS Office - இல் ஒரு டாகுமென்ட்க்கு Password கொடுப்பது எப்படி?


MS Office நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு மென்பொருள். Word, Power Point, Excel என்று ஏதேனும் ஒன்றை நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம். சில நேரங்களில் நமது டாகுமென்ட்களுக்கு நாம் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டி வரலாம். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 

1. ஒரு புதிய டாகுமென்ட்டை உருவாக்குங்கள் அல்லது உங்களிடம் ஏற்கனவே உள்ள ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

2. Save செய்யும் போது "Save As" என்பதை கிளிக் செய்யுங்கள். 

3. அதில் முதலாவதாக உள்ள Word Document - ஐ என்பதையே கிளிக் செய்யுங்கள். 

4. இப்போது வரும் பகுதியில் Tools >> General Options என்பதை கிளிக் செய்ய வேண்டும். 



5. இப்போது வரும் பகுதியில் Password கொடுப்பதற்கான வசதிகள் இருக்கும். 


முதலாவதாக உள்ள "Password to open" பகுதியில் Password கொடுத்தால் File Open ஆகும் போது Password கேட்கப்படும். 

"Password To Modify" என்பதில் Password கொடுத்தால் Edit செய்யும் போது Password கேட்கப்படும். 

"Read-only recommended" என்பதை கொடுத்தால் File Read Only என்ற முறையில் இருக்கும். அதை எடிட் செய்ய முடியாது. 

உங்களுக்கு தேவைப்படும் முறையில் இவற்றை செய்து OK கொடுத்து விடுங்கள். 

அவ்வளவு தான் இனி இவற்றை தேவையானவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். 

- பிரபு கிருஷ்ணா

Meridian Player - அசத்தலான Android Application


Android Phone வாங்கிய பிறகு அனைவருக்கும் வரும் ஒரு கவலை, பாடல்களை கேட்பதில். Default ஆக உள்ள பிளேயர் தன் இஷ்டத்துக்கு ஒரு வரிசையில் பாடும். ஆனால் நாம் பாடல்களை Folder போட்டு வைத்து இருப்போம். நமக்கு பிடித்த வரிசையில் பாடல்களை கேட்க நினைத்தால் அதற்கு தனியாக ப்ளே லிஸ்ட் உருவாக்க வேண்டும். பெரும்பாலான மியூசிக் ப்ளேயர்கள் இதே போல தான். 

ஆனால் அப்படி Playlist உருவாக்குவது எல்லோருக்கும் சாத்தியப்படாது. நேரமும் இருக்காது. அதே சமயம் நமது File Manager மூலம் கேட்க நினைத்தால் ஒரு பாடல் மட்டுமே ஒரே நேரத்தில் பாடும். பிறகு நாம் தான் மாற்ற வேண்டும். இதை தவிர்த்து நம்முடைய Folder-இல் நாம் அமைத்த வரிசைப்படி பாடல்களை பாட ஒரு Application இருந்தால் நல்லது தானே. இதற்கு தீர்வு தரும் ஒரு Application பற்றி பார்ப்போம். 

Meridian Player - Review

அந்த Application பெயர் "Meridian Media Player Revolute". இதன் மூலம் எந்த போல்டரில் இருந்தும், நீங்கள் வரிசைப் படுத்தி உள்ள முறையில் பாடல்களை கேட்டு மகிழலாம்.



எளிதான இதன் Interface உங்கள் பாடல்களை அழகாக வரிசைப்படுத்துகிறது. எனவே உங்கள் பாடலையோ அல்லது பாடல் உள்ள Folder எதை வேண்டும் என்றாலும் எளிதாக தேடி கண்டுபிடித்து விடலாம்.



ஆடியோ மட்டுமின்றி வீடியோக்களையும் பார்க்கும் வசதி இதில் உள்ளது.


இதன் மாற்ற சில சிறப்பம்சம்கள்
  • ID3 editing வசதி
  • .srt subtitle support செய்கிறது.
  • Song rating செய்யும் வசதி உள்ளது. 
  • வீடியோவை ஆடியோ ஆக கேட்கும் வசதி. 
இது ஒரு இலவச Application. விருப்பமிருந்தால் இதன் Pro வெர்சன் கூட நீங்கள் வாங்கலாம். Android 1.6  மற்றும் அதற்கு அடுத்த வெர்சன்களை பயன்படுத்துபவர்கள் இதை பயன்படுத்த முடியும்.

Prabu Krishna Rating: 4.0/5

ஒரே நேரத்தில் File ஒன்றை பல File Sharing தளங்களில் Upload செய்வது எப்படி?


இணையத்தில் File களை பகிர நிறைய தளங்கள் உள்ளன. சில நேரங்களில் நாம் நமது File - களை நம் தள வாசகர்களுக்கு அல்லது குறிப்பிட்ட சிலருக்கு அனுப்ப நினைக்கலாம். அவற்றை ஒரே தளத்தில் Upload செய்வதால் சில நேரங்களில் எல்லோராலும் அவற்றை Download செய்ய முடியாத நிலை வரலாம். எனவே பல தளங்களில் அவற்றை பகிர்ந்தால் Download செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.  

இதற்காக ஒவ்வொரு தளமாக அலைந்து கொண்டிருக்காமல் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பல தளங்களில் பகிர முடிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை செய்ய நமக்கு சில தளங்கள் உதவுகின்றன. அவை என்னென்ன என்பதே இந்த பதிவு. 

1. NKupload


இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 10 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.

2. Flash Mirrors


இதன் மூலம் ஒரே நேரத்தில் 30 File Sharing தளங்களில் Upload செய்ய முடியும்.

3. Mirror Creator



இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 30 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.

4. Gazup



இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 6 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.

5.Qooy



இந்த தளம் மூலம் 15 File Sharing தளங்களில் Upload செய்யலாம். ஆனால் ஒரே நேரத்தில் ஏதேனும் 6 File Sharing தளங்களில் மட்டுமே Upload செய்ய முடியும்.

6. Upload Mirrors



இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 15 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.

Thanks - Tech Hints

இந்திய Android App Developers-க்கு சந்தோஷ செய்தி


ஆன்ட்ராய்ட் பயனர்கள் அனைவருக்கும் Home Page என்றால் அது Google Play தான். கிட்டத்தட்ட 7 லட்சம் Applications இருக்கின்றன. அதில் பல இலவசம் என்ற போதும் சில கட்டண முறையிலும் கிடைகின்றன. அவற்றையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். 

அத்தகைய கட்டண மென்பொருட்களை விற்க இதுவரை குறிப்பிட்ட நாடுகளை மட்டுமே கூகுள் அனுமதித்து வந்தது. அந்த பட்டியலில் கடந்த மாதம் இந்தியாவை இணைத்தது, ஆனால் மறுநாளே இந்தியா நீக்கப்பட்டு விட்டது. இது குறித்து கூகுள் எந்த செய்தியும் வெளியிடவில்லை.

ஆனால் மறுபடியும் இந்தியா Paid Application - களை விற்கும் நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. நேற்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை Google Play Developers வலைப்பூவில் அதன் மேனேஜர் Mr. Brahim Elbouchikhi அறிவித்துள்ளார். 

இது மட்டும் Google Play தளத்தில் இந்தியர்களின் பங்கு குறித்து சுவாரஸ்யமான விசயங்களையும் அவர் சொல்லி உள்ளார். 

  • கடந்த வருடம் Google Play தளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 400% அதிகரித்துள்ளது. 
  • கடந்த ஆறு மாதத்தில் இந்தியாவை சேர்ந்த Android Users டவுன்லோட் செய்த Applications எண்ணிக்கை அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளை அதிகம். 
  • Applications Download செய்வதில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.  
இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே இந்திய Android App Developer களுக்கு தங்கள் Application - களை விற்கும் வசதியை Google Play தந்துள்ளது. 

ஏற்கனவே உங்கள் Apps இலவசமாக கொடுக்கப்பட்டு இருந்தால் இனி அவற்றை Monetize செய்ய முடியும், புதிய Apps களை Paid App ஆக விற்க முடியும். 

அதோடு இந்திய ரூபாயை Google Play தளத்தில் Support ஆகும் படி மாற்றி உள்ளதால் கட்டண App-களை வாங்கும் நபர்களுக்கும் இனி எளிதாக இருக்கும். 

கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை ஆகாது. காரணம் இது அதிகாரப்பூர்வ அறிவுப்பு, அதோடு பல வசதிகள் இந்தியாவிற்கு சாதகமாக மாற்றிய பின் தான் இந்த அறிவிப்பே வந்துள்ளது. 

நீங்களும் ஒரு Android App Developer என்றால் உங்களுக்கு வாழ்த்துகள் :-) 

Thanks - Tech Hints

- பிரபு கிருஷ்ணா

ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?


மின்னஞ்சல் கணக்கு என்பது இணையத்தில் உலவும் அனைவருக்கும் மிக மிக அவசியமான ஒன்று.அதற்கு ஜிமெயில் நமக்கு பெரிதும் உதவுகிறது. இதில் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் பலவற்றின் அர்த்தம் தெரியாமல் இருப்போம். அதே ஜிமெயில் முழுவதையும் தமிழில் மாற்ற முடிந்தால்? 

இது கொஞ்சம் பழைய வசதி தான் என்றாலும் இதன் பதிவின் இரண்டாம் பகுதி உங்களுக்கு உதவக் கூடும். 

1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும். 


2.  இப்போது "General" Tab இல் இருப்பீர்கள். இதன் முதல் வசதியாக "Language" என்பது இருக்கும். 



3. இப்போது அதில் "Gmail display language" என்பதில் தமிழ் மொழியை தெரிவு செய்யுங்கள். அடுத்து "Would you also like to make Tamil you language for other google sites " என்பதற்கு Yes or No கொடுத்து விட்டு  Scroll செய்து கீழே வந்து Save Changes என்பதை கொடுத்து விடுங்கள். 

இனி ஜிமெயில் முழுக்க முழுக்க தமிழ் மொழிக்கு மாறிவிடும். ஆங்காங்கே மிகச் சில ஆங்கில சொற்கள் இருந்தால் அடிக்கடி பயன்படுத்தும் அனைத்துமே தமிழ் அல்லது ஆங்கில உச்சரிப்பின் தமிழ் வார்த்தையில் இருக்கும். என்னுடைய ஜிமெயில் பக்கம் கீழே படத்தில் உள்ளது.



இனி உங்களுக்கு எளிதாக ஜிமெயிலை நீங்கள் உபயோகிக்க முடியும். 

4. இல்லை நான் ஜிமெயிலை ஆங்கிலத்தில் பயன்படுத்த விரும்புகிறேன், ஆனால் எனக்கு அதில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் அதற்கான வசதி உள்ளது. 

5. மேலே Step - 2 இல் உள்ள படத்தில் "Show All Language Options" என்று உள்ளதல்லவா அதை கிளிக் செய்து, "Enable input tools" என்பதை கிளிக் செய்து செய்யுங்கள். இப்போது ஒரு சிறிய விண்டோ வந்து input tools என்ன இருக்கிறது என்று காட்டும். தமிழுக்கு மூன்று வகையான Tools உள்ளன. 


இதில் Unicode முறை வேண்டும் என்பவர்கள் முதலாவதாக உள்ள "தமிழ்" என்பதை பயன்படுத்தவும். Inscript Keyboard பயன்படுத்த விருப்பம் உள்ளவர்கள் இரண்டாவதையும், போனெடிக் முறைக்கு மூன்றாவதையும் பயன்படுத்தலாம்.  முன்பு Unicode முறை மட்டுமே கொடுத்து இருந்தார்கள். இப்போது மற்ற இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கும் இது உதவும்.

இப்போது OK கொடுத்து பின்னர் Save Changes என்பதை கொடுத்து விடுங்கள். 

இப்போது உங்கள் புதிய மின்னஞ்சலில் தமிழில்  தட்டச்சு செய்ய வலது மேல் புறம் Settings Icon க்கு அருகில் கீழே படத்தில் உள்ளது போல உள்ளத்தில் "த" என்பதை கிளிக் செய்து விட்டு தட்டச்சு செய்யலாம். 


அவ்வளவே. இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள். 

பேஸ்புக்கை தமிழில் பயன்படுத்த இதை பதிவை படிக்கவும் - Facebook- இதெல்லாம் கூட இருக்கா?

- பிரபு கிருஷ்ணா

Paytm For Android - ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்ய அப்ளிகேஷன்


பெரும்பாலான நேரங்களில் திடீர் என்று மொபைலில் Balance அல்லது Datacard Pack அல்லது DTH சேனல் Validity போன்றவற்றில் ஏதேனும் ஒன்று திடீர் என்று முடிந்திருக்கும். வெளியே சென்று Recharge செய்ய முடியாத சூழ்நிலை என்றால் நமக்கு கஷ்டம் தான். இதுவே Android அலைபேசி வைத்திருந்தால் இவற்றை எளிதாக உங்கள் அலைபேசியிலேயே Recharge செய்யலாம்.

Paytm தளம் பற்றி நிறைய பேர் அறிந்து இருப்பீர்கள். ஆன்லைன் மூலம் Recharge செய்ய உதவும் இதை பயன்படுத்துபவர்கள் நிறைய பேர். எந்த நெட்வொர்க் என்றாலும் நாம் இதனை பயன்படுத்த முடியும். மொபைல் மட்டுமின்றி DTH, Datacard போன்றவற்றுக்கும் Recharge செய்ய இது பயன்படுத்துகிறது. இதன் Official Android Application பற்றி பார்ப்போம்.

இதை பயன்படுத்தி கீழே உள்ளவற்றுக்கு நீங்கள் Recharge செய்ய முடியும். 



Mobile - Airtel, Vodafone, Reliance GSM, Reliance CDMA, Idea, BSNL, Uninor, Tata Indicom, Aircel, Tata Docomo, Loop Mobile, MTS, MTNL and Videocon.

DTH -Tata Sky, Dish TV, Airtel TV, Sun Direct, Videocom d2h, and Reliance Digital TV.

Datacard - BSNL, MTNL, MTS MBlaze, MTS MBrowse, Reliance Netconnect+, Tata Photo Plus, Tata Photon Whiz 

உங்கள் மொபைல் எண், நெட்வொர்க், அமௌன்ட் போன்ற தகவல்களை  கொடுத்து விட்டு Proceed கொடுத்து பின்னர் வரும் பக்கத்தில் உங்கள் Paytm கணக்கிற்குள் Sign in அல்லது Sign Up ஆகிக் கொள்ளுங்கள். பின்னர் Proceed To Pay கொடுத்து Net Banking, Debit Card அல்லது Credit Card மூலம் பணம் செலுத்ததி விடலாம். 

இது Paytm தளத்தின் Official Application என்பதால் பயமேதும் கொள்ள வேண்டாம். பாதுகாப்பான ஒன்று இது. 



இதை டவுன்லோட் செய்ய 


அல்லது 

இந்த QR Code - ஐ Scan செய்யவும்.  


Redbus Mobile App - மொபைல் மூலம் பஸ் டிக்கெட் புக் செய்ய


பேருந்து பயணங்களுக்கும் இன்று ரயில் போல நிறைய பேர் புக் செய்து செல்ல ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு இந்த வசதியை எளிதாக தரும் ஒன்று Red Bus தளம். அவர்கள் இப்போது ஆன்டிராய்ட் மார்க்கெட்டிலும் கால் பதித்து உள்ளனர். 


இதன் சிறப்புகள்: 

  1. கிரெடிட்/டெபிட் கார்ட் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் 
  2. 700க்கும் மேற்பட்ட பஸ் கம்பனிகள் பஸ்கள்
  3. 10000+ வழித்தடங்கள்
  4. mTicket வசதி. 
PRICE: Free

REQUIRES ANDROID:2.1 and up


அல்லது 

இந்த QR கோடை Scan செய்யவும்.


Video Questions Editor - பார்வையாளர்களை கவர Youtube தரும் புதிய வசதி

Youtube இன்று வீடியோக்கள் காண மிக அதிகமானோர் பயன்படுத்தும் தளம். உங்கள் வீடியோக்களை பார்வையாளர் காணும் போது வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காமல்  அவர்கள் பார்வைக்கு வித்தியாசமாய் ஏதேனும் தெரியவைக்க Youtube பல வசதிகளை தருகிறது. அவற்றில் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம். 

MS 2010 - இல் Power Point Presentation - ஐ வீடியோ ஆக Convert செய்வது எப்படி?


MS Power Point மூலம் நாம் பல விதமான வேலைகளை செய்து வருகிறோம். சில சமயம் நாம் உருவாக்கும் Presentation - களை வீடியோ ஆக convert செய்யும் தேவை வரலாம். 

MS Office 2003 மற்றும் 2007 பயன்படுத்துபவர்கள் இதை செய்ய வேறு ஏதேனும் மென்பொருளை பயன்படுத்த வேண்டும். இதற்கு பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. முக்கியமானவை Wondershare PPT to Video Converter, Xilisoft PPT to Video Converter. 

இதே நீங்கள் MS Office 2010 பயன்படுத்தினால் இதை நேரடியாக செய்யலாம். 

1. உங்கள் Presentation வேலைகளை முடித்த பின்னர் File மீது கிளிக் செய்யுங்கள். 


2. இப்போது Save & Send என்பதில் Create a Video என்பதை கிளிக் செய்யுங்கள். 


3. அடுத்து உங்கள் வீடியோ Quality தெரிவு செய்து Save செய்து விடவும். 


4. இப்போது ஒரு Slide எவ்வளவு நேரம் என்று நீங்கள் Set செய்து விட்டு "Create Video" என்பதை கொடுத்தால் போது வீடியோவாக Save ஆகி விடும். 

Thanks - Tech Hints

- பிரபு கிருஷ்ணா