Blogger Custom Domain Settings - சில மாற்றங்கள் | கற்போம்

Blogger Custom Domain Settings - சில மாற்றங்கள்


பிளாக்கரில் தங்கள் சொந்த டொமைன் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் கூகுள், பிளாக்கர் Domain Add செய்வதற்கு CNAME செட்டிங்க்ஸ் பகுதியில் ஒரு புதிய Record சேர்த்துள்ளது. இதன் காரணமாக புதியதாக டொமைன், சப்-டொமைன் போன்றவற்றை சேர்ப்பவர்களுக்கு Domain Verify -யில் பிரச்சினை என்று வரும். அதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். 

நீங்கள் டொமைன் அல்லது சப்-டொமைன் Add செய்யும் கீழே உள்ள பிரச்சினை வரும். 

“We have not been able to verify your authority to this domain. Error 12. Please follow the settings instructions.”

படம் : 

உங்கள் டொமைன் பெயருக்கு கீழே உள்ள "Settings Instructions" என்பதை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் "Blogger Custom domain Instructions" பக்கத்துக்கு வருவீர்கள். 

அதில் நீங்கள் Domain அல்லது Sub-domain என்பதில் ஒன்றை தெரிவு செய்யவும். [நீங்கள் எதை Add செய்கிறீர்களோ அதை]


இப்போது வரும் பக்கத்தில் CNAME Add செய்வதற்கான வழி முறை இருக்கும். பெரும்பாலும் நீங்கள் முதல்  CNAME  Add செய்து இருப்பீர்கள். (www, ghs.google.com என்பது). 

இப்போது புதியதாக இரண்டாவது ஒன்றை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அதையும் CNAME Record - இல் தான் Add செய்ய வேண்டும். அது கீழே படத்தில் சிவப்பு கட்டத்தில் உள்ளது [படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக காணவும்]


இதே போன்று உங்களுக்கும் ஒன்று இரண்டாவது  CNAME  ஆக வரும். அது சில மாற்றங்களுடன் இருக்கும். ஒவ்வொரு டொமைன்க்கும் ஒவ்வொன்று.

இப்போது நீங்கள் டொமைன் வாங்கிய தளத்திற்கு சென்று, உங்கள் டொமைன் Settings பகுதியில் DNS Management -இல் இருக்கும் CNAME Record - இல் இந்த இரண்டாவது CNAME - ஐ சேர்க்க வேண்டும்.  இதில் Destination ஆக உள்ள மிகப் பெரிய ஒன்றில் .com க்கு பிறகு ஒரு முற்றுப் புள்ளி இருக்கும் [dot] அதை கொடுக்க வேண்டாம்.

Bigrock தளத்தில் டொமைன் வாங்கியவர்கள் கீழே படத்தில் உள்ளது சேர்க்க வேண்டும். உங்களுக்கான  CNAME  Settings ஐ என்பதை மறந்து விடாதீர்கள்.


Bigrock மூலம் Domain வாங்கியவர்கள் முதல் டொமைன் Add செய்வது பற்றிய தெளிவான பதிவை இங்கே படிக்கவும் - BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

இதை செய்து முடித்த பின் 6-8 மணி நேரங்களுக்கு பிறகு உங்கள் டொமைன் அல்லது சப்-டொமைனை Add செய்து பாருங்கள். வேலை செய்யும். 

மீண்டும் பிரச்சினை என்றால் மீண்டும் பதிவை படிக்கவும். சரியாக செய்யாவிட்டால் மட்டுமே இது வேலை செய்யாது. 

வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் கீழே கேட்கவும். 

ஏற்கனவே பயன்படுத்துபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 

நன்றி - Tech Hints

-பிரபு கிருஷ்ணா

24 comments

நல்ல பதிவு சகோ!

டொமைன் வாங்குவது பற்றி நான் சிந்தித்துகொண்டிருக்கும் வேலையில் இது உண்மையிலேயே பயனுள்ள பதிவு!

Reply

thanks brother but i many try to how to start subdomain on my blog

Reply

இந்த இணைப்பில் கூறி உள்ளது போல பின்பற்றுங்கள்.

BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

Reply

நல்ல வேலை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பகிர்வுக்கு நன்றி சகோ!

Reply

தகவலுக்கு நன்றி!

Reply

நன்றி நண்பா பதிவிற்கு

Reply

தகவலுக்கு நன்றி... நண்பர்களிடம் பகிர்கிறேன்...

Reply

தகவலுக்கு நன்றி!

Reply

நான் எனது தளத்திற்கு தாங்கள் குறிப்பிட்டவாறு தான் செய்தேன். சிறிது நேரத்திலேயே பெயர் மாற்றம் வந்துவிட்டது. பகிர்விற்கு நன்றி சகோ!

Reply

I BUY DOMAIN FROM DODADDY VIA GOOGLE APP

Reply

இதில் இருப்பது போல தான் ஆனால் சில மாற்றங்கள் மட்டும் இருக்கும்.

Reply

THANKS PRABU I TRY TO CREATE MY SUBDOMAIN

Reply

மிகவும் நல்ல பதிவு....தகவலுக்கு நன்றி...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Reply

நல்ல பயன்னுள்ள தகவல்.....மிக அருமையான பகிர்வு......உங்கள் பகிர்வுக்கு நன்றி........

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Reply

வணக்கம் நண்பரே ... நானும் சப் டொமைன் (sub Domain) மூலம் தளம் பயன்படுத்தி வருகிறேன். அண்மையில் புதிய டேம்லேட் மாற்றம் செய்த பின்னர் சாதாரணமாக www. என்னு டைப்செய்யாமல் தனியாக டொமைன் பெயரை (Eg :- mysite.com) ரைப்செய்தால் தளம் ஓபன் ஆகவில்லை... மாறாக இவ்வாறு தோன்றுகிறது.:- 404. That’s an error.
The requested URL / was not found on this server. That’s all we know. இதன் மூலம் கணிசமாக அளவு வாசகர்களும் குறையத்தொடங்கியுள்ளார்கள். தயவு செய்து சரியான தீர்வு குறிப்பிடவும். பல ஆங்கில தளங்களில் படித்தும் செய்தும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. ஆவலுடன்....

Reply

தொழில்நுட்ப பதிவரா நீங்கள் உண்மையில்.... ஒரு தொழில்நுட்ப சம்மந்தமான பிரச்சினை கேட்டால் உரிய பதில் காணவில்லையே....


""வணக்கம் நண்பரே ... நானும் சப் டொமைன் (sub Domain) மூலம் தளம் பயன்படுத்தி வருகிறேன். அண்மையில் புதிய டேம்லேட் மாற்றம் செய்த பின்னர் சாதாரணமாக www. என்னு டைப்செய்யாமல் தனியாக டொமைன் பெயரை (Eg :- mysite.com) ரைப்செய்தால் தளம் ஓபன் ஆகவில்லை... மாறாக இவ்வாறு தோன்றுகிறது.:- 404. That’s an error.
The requested URL / was not found on this server. That’s all we know. இதன் மூலம் கணிசமாக அளவு வாசகர்களும் குறையத்தொடங்கியுள்ளார்கள். தயவு செய்து சரியான தீர்வு குறிப்பிடவும். பல ஆங்கில தளங்களில் படித்தும் செய்தும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. ஆவலுடன்....
""

Reply

கேள்வியை கவனிக்கவில்லை மன்னிக்கவும்.

Blogger >> Settings >> Basic இதில் Publishing பகுதியில் நீங்கள் Domain பெயரை கொடுத்து இருப்பீர்கள். அதில் Edit என்பதை கிளிக் செய்து "Redirect mysite.com to www.mysite.com" என்று உள்ளதை கிளிக் செய்து விடவும்.

அவ்வளவுதான் சில மணி நேரங்களில் வேலை செய்ய தொடங்கி விடும்.

Reply

இதைக்கிளிக் பண்ணியும் மீண்டும் ப்ளாக்கர் செட்டிங்கில் இதைப்பார்க்கும் போது கிளிக் இல்லாமல் இருக்கிறது தோழா.... தயவுசெய்து உதவுங்கள். இதற்கிடையில் சரிவந்தால் நான் உடன் அறியத்தருகிறேன். நன்றி

Reply

கிளிக் செய்த பின் Save செய்ய வேண்டும். இல்லை என்றால் வேலை செய்யாது. உங்கள் தளம் எது என்று சொல்ல முடியுமா?

Reply

மன்னிக்கனும் நண்பரே... முக்கியமானதை சொல்லவில்லையே. எனது தளம் புதியஉலகம்.கொம். நீங்கள் கூறிய மாற்றங்கள் நான் ஏற்கனவே பலமுறை செய்து பார்த்தும் பலனில்லை. Domain DNS செட்டிங்கில் கூட மீண்டும் புதிதாக எல்லாம் செய்தேன். மற்றும் இன்னும் ஒரு விடயம். DNS Management -இல் இருக்கும் CNAME Record - இல் இந்த இரண்டாவது CNAME - ஐ சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தீர்கள் இதையும் செய்து பார்த்தேன் சரிவரததால் அழித்துவிட்டேன் 2வது CNAME Record அவசியம் சேர்க்க வேண்டுமா? இது பற்றி தெளிவாக குறிப்பிடவும். முதலாவது இவ்வாறு இருக்கிறது.

Name:- www.puthiyaulakam.com
Target:- ghs.google.com

Reply

எங்கோ தவறு செய்து உள்ளீர்கள். இரண்டாவது அவசியமானது இல்லை. ஆனால் செய்யலாம். மீண்டும் ஒரு முறை இவற்றை சரியாக செய்யவும்.

Reply

சரியாகத்தான் செய்தேன்... இருந்தும் மறுபடியும் ப்ளாக்கரில் Custom Domain ஐ Delete செய்துவிட்டு மீண்டும் ஒரு முறை Active செய்திருக்கிறேன். தற்போது முழு தளமும் இயங்கவில்லை. இதற்கு பல மணிநரம் எடுக்குமா?
மற்றும் Site verification செய்யும் பக்கத்திற்கு சென்றால் அங்கே not verificate " We weren't able to verify your site: http://puthiyaulakam.blogspot.com/" இதை கண்டுபிடிக்கவே முடியாதா??

Reply

இரண்டு நாட்கள் எடுக்குமாம் பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா... ஆதரவுக்கு நன்றி.

Reply

Post a Comment